Monday 26 August 2013

சவூதியில் வாழும் அனைவருக்கும் பயனுள்ள ஒரு இணையதளம்



சவூதியில் வாழும் அனைவருக்கும் இது ஒரு பயனுள்ள தளமாகும். ஏனெனில்  அரசாங்கம் சம்பந்தபட்ட வேலைகளை முடிக்க அதாவது தன்னுடைய இக்காமா நிலை, விசா சம்பந்தபட்ட விபரம், தன்னுடைய Exit/Re-entry பற்றிய முழு விபரம் போன்றவற்றை இங்கு அறியலாம்.

 மேலும் தன்னுடைய வாகனத்திற்கு ஏதேனும்  Traffic Rules Violate இருந்தால் அதனையும் அறியலாம். இது மட்டுமல்ல இவை சம்பந்தபட்ட வகைகளுக்கு நீங்களே ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் இருந்தால் அவர்களுக்கு தேவையான Exit/Re-entry அடிக்க ஜவசாத்  செல்ல தேவையில்லை. வீட்டிலுருந்தபடியே பணத்தை  ஆன்லைனில் செலுத்தி Exit/Re-entry அடித்துக்கொள்ளலாம்.

இன்னும் நிறைய பயன்கள் இருக்கிறது. நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியது....

கீழ் கண்ட லிங்கில் கிளிக் செய்யவும்.
https://www.moi.gov.sa/wps/portal/!ut/p/b1/04_SjzQ1MjAzMrU0stCP0I_KSyzLTE8syczPS8wB8aPM4k2dA5w9LXyNDd0DQs0NjNzMTbyczbzdwyxM9HOjHBUBUJSwUw!!/

 இக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and conditions-ல் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால், உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும், அந்த நம்பரை enter செய்தால்.

உங்களுக்கான Login செய்ய வேண்டிய “User Name" & "Password" என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால், நீங்கள் பிரிண்ட் செய்வதற்காக ஒரு terms & conditions னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து, அந்த printout-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தேதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்குள்  உங்களால் இந்த பகுதியில் login செய்ய முடியும்.

ஆகையால் இனிமேல் நீங்கள் ஜவசாத் செல்ல தேவை இல்லை. வீட்டிலுருந்தபடியே ஜவசாத் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.



No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir