வருங்கால வைப்புநிதி ஆணையம் தொழிலாளர்களுக்கு தங்களது உறுபினர்களின் கணக்கு எண் மாற்றும் (நமனா-13) படிவங்களை கணினி மூலம் சர்பிக்கும் முறையை விரைவில் கொண்டுவர உள்ளது. அதன் படி அனைத்து தொழில் அதிபர்களும் தங்களது தொழிலாளர்களின் கணக்கு எண் மாற்றும் படிவங்களை கணினி மூலமாக சமர்பிக்க அங்கீகரிக்கபட்ட நபரின் கையொப்பங்களை கணினி முறையாக்கி ஆவணபடுத்தபடுள்ளது
எனவே தாம்பரத்துக்கு உட்பட்ட நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் தங்களது கையொப்பங்களை கணினி முறையாக்கி (கிளாஸ்-2 மற்றும் 3) தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (http://www.epfindia.com/employer_OTCP.html)
வலைதளத்தில் உள்ள கணக்கு எண் மாற்றும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள தொடர்பு அலுவலர், தாம்பரம் (தொலைபேசி எண் 044-22 265332 / 9444046542) என்ற எங்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.epfindia.com/index.html என்ற வலைத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 1800 118 005 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பி எப் பிடித்தம் உடைய தொழிலாளிகள் தங்களது பி எப் கணக்கின் இருப்புகளை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். கீழ்க்கண்ட இணையத்தளத்திற்கு சென்று முதலில் மாநிலத்தை தேர்வு செய்யவும், பின்னர் மாவட்டத்தை தேர்வு செய்யவும். இறுதியில் உங்களது கைபேசி எண் கொடுத்தால் உங்களது கைபேசிக்கே உங்களது பி எப் கணக்கின் இருப்பு பற்றிய விபரம் வரும்.
http://epfoservices.in/epfo/member_balance/member_balance.php?officename=VElSVU5FTFZFTEk=
No comments:
Post a Comment