Sunday, 30 June 2013

சவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர எக்ஸிட் ரி என்ட்ரி அடிக்க ஜவ்ஸாத் செல்ல தேவையில்லை
சவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர எக்ஸிட் ரி என்ட்ரி /­ Exit Re Entry அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலமே உள்துறை அமைச்சக இணையதளம் (Ministry of Interior MOI.GOV.SA) மூலம் எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ள வேண்டும்.
செயல்முறை:
1. ஜவ்ஸாத்தில் நிறுவப்பட்டுள்ள­ தானியங்கி இயந்திரங்களில் (KIOSK) சென்று, தங்களது இக்காமா எண்ணை கொடுத்தால், தங்களது விரல்களை ஃபிங்கர் பிரிண்ட் செய்யும்.
 2. ஏற்கனவே தாங்கள் ஃபிங்கள் பிரிண்ட் பதிவு செய்திருப்பதால்­, இந்த இக்காமா எண்ணுக்குரியவர்­ தாங்கள் தான் என உறுதி செய்த பிறகு, தங்களுக்கு ஒரு USER NAME & PASSWORD கொடுக்கும்.
3. எக்ஸிட் ரி என்ட்ரிக்கான தொகையான 200 ரியாலை வழக்கம் போல், ATM அல்லது வங்கிக்கணக்கு மூலம் கட்டி விட வேண்டும்.
4. அதன்பிறகு, தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும்,­ MOI.GOV.SA இணையதளம் சென்று, LOGIN செய்து எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ளலாம்.
5. மேற்கண்ட USER NAME & PASSWORD -ஐ தொடர்ந்து உபயோகிக்கலாம். மீண்டும் மீண்டும் ஜவ்ஸாத் செல்ல தேவையில்லை.

கீழே உள்ள லிங்க் கு செல்லவும் 
http://www.moi.gov.sa/wps/portal/passports/!ut/p/b1/04_SjzQ3NjeyNDQyNdCP0I_KSyzLTE8syczPS8wB8aPM4t39woKN3T2MDf19TFwMPH1NzEP8g72MnU3M9YNT8_RzoxwVAQ7s8zQ!/வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம்: துபாயில் முதலில் அறிமுகம்


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உலகி்ல் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அமீரகத்திற்கான இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் அவர்கள் அமீரக மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் வி.களத்தூர் கமால் பாஷாவிடம் தெரிவித்தார்.

அபுதாபி இந்திய தூதரகத்தில் புதிய தலைமுறை அமீரகச் செய்தியாளர் கமால் பாஷாவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போது அமீரகத்தில் துவக்கப்படவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் பற்றி விளக்கினார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, அவர்களது பணி சார்ந்த ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.‌ இந்நிலையில், இதுபோன்ற பணிகளுக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் நிலையும் இதே தான்.

இதை மாற்ற நினைக்கும் மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்நிதயர்களுக்கான துறை இத்தரப்பினருக்காக ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பலன்கள் கொண்ட சிறப்புத் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த திட்டம் முன்மாதிரியாக தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே விரைவில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம் என எம்.கே. லோகேஷ் கூறினார். கடைநிலை ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டம்: மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் சாதாரண தொழிலாளர்களாகவே வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, காப்பீடு, ஓய்வூதியம் இல்லாத நிலையில் அதுபோன்றவற்றை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இத்திட்டத்தில் சேர்ந்து ஆண்டுக்கு 5,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தும் ஆண்களுக்கு 2,000 ரூபாயையும், பெண்களுக்கு 3,000 ரூபாயையும் இந்திய அரசு அவர்களது கணக்கில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தி வரும். 5 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்புவோருக்கு ஆயுள் காப்பீடு, மறுவாழ்வு உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகிய மூன்று வகையான பலன்கள் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பணி செய்து தாயகம் திரும்பும் கடை நிலை ஊழியர்களுக்கு (வகுப்பிற்கு கீழ் படித்திருக்கிற இ பாஸ்போர்டில் இசிஆர்(Emigration Check Required)முத்திரையுள்ளவர்களுக்கு)பலனளிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எம்.கே.லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் லோகேஷ் இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளார் இந்தியர்கள் வரவேற்பு: இந்த சிறப்புத் திட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்னர்.

இலவச உம்ரா பயண அழைப்பு:


ரியாத் பதியா தாவா நிலையத்தின் சார்பாக இலவசமாக உம்ரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் சகோதரர்களுக்கு என ஒவ்வொரு வாரமும் ஒரு பஸ் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உம்ரா செல்ல விரும்புபவர்கள் உடனே கீழ் கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

உம்ரா செல்லும் தேதி: ஜூலை 10, 17, மற்றும் 24 
மேலும் விபரங்களுக்கு மொளலவி அப்துல் காதர் கஸனி 0508845002
மொளலவி அப்துல்ரகிம் மதனி 0509266502

Saturday, 29 June 2013

திருமணத்தை பதிவு செய்வது எப்படி? எங்கே?“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?

கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?

திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?

பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?

ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?

ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.
அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

கீழ் கண்ட இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு திருமண விபரத்தை அறியலாம்.

http://www.tnreginet.net/english/smar.asp

Friday, 28 June 2013

மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம்நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டதிலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர்.அவர்களுக்காக.ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:

இதற்கு முதலில் http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒருவிண்டோ வரும்.அதில் வலது பக்க சைடு பாரில் Select என்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கபட்டுள்ளது.மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

உங்கள் மாவட்டதிற்கு தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியாரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.

இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.அதை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாவிட்டால்,அந்த கோரிக்கை எண் வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற..

பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

புகார் பதிவு முறை : புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
* பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.
* நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.

யாரை அணுகனும்? : நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும். அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.

புகார் பதிவு கட்டண விவரம்:

பொருட்களின் மதிப்பு கட்டணம்
(ரூபாயில்) (ரூபாயில்)
1 லட்சம் வரை 100
1 – 5 லட்சம் 200
5 – 10 லட்சம் 400
10 – 20 லட்சம் 500
20 – 50 லட்சம் 2,000
50 – 1 கோடி 4,000
1 கோடிக்கு மேல் 5,000

Thursday, 27 June 2013

வெளிநாடு செல்ல "POLICE CLEARANCE CERTIFICATE" பெறுவது எப்படி?


PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே passport வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.

குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

Rs 300  மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் 1000 அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf


3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.

http://passport.gov.in/cpv/FeeStructure.htm

காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.

PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

Wednesday, 26 June 2013

உத்தரகாண்ட் வெள்ள அபாயதத்தில் சிக்கியவர்கள் பற்றி தகவல் அறியஉத்தரகாண்ட் வெள்ள அபாயதத்தில் சிக்கியவர்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள் பற்றி தேட வேண்டுமா? 

அவர்கள் இருக்கிறார்களா அல்லது வெள்ள அபாயத்தில் சிக்கி உள்ளனரா என அறிய கீழ் கண்ட  தளத்திற்கு சென்று அவர்களுடைய  பெயரை தட்டச்சு செய்து அவர்களுடைய நிலைமையை அறியலாம்.

http://google.org/personfinder/2013-uttrakhand-floods

மேலும் நீங்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டவர்கள் யாரையாவது பார்த்தால் அவர்கள் பற்றியும் இங்கு தகவல் கொடுக்கலாம். இதுவரைக்கும் 15700 நபர்களுடைய பெயர்கள் இங்கு பதியபட்டுள்ளது. 

மேலும் 977 3300 000 என்ற எண்ணுக்கு sms செய்வதன் மூலமும்  அறியலாம்.  உங்களுடைய கைபேசியில் "search person-name" ( உதாரணமாக அமர் என்பவர் பற்றி அறிய வேண்டினால் search amar என தட்டச்சு செய்து அனுப்பினால் அவர்களை பற்றி தகவல் அறியலாம்.

உங்களுடைய MS OFFICE இல் உள்ள word, excel போன்ற FILE களை இன்டெர்னெட் இனணப்பு இல்லாமல் எளிதாக PDF File கு மாற்றலாம்.


PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் இலவசமாகவும், எளிதாகவும் PDF கோப்புக்களை உருவாக்கும் வசதியை MS-Word Office தருகின்றது.
கீழே தரப்பட்டுள்ள இணைப்பிற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=7
இதன் மூலம் MS-Word Office உதவியுடன் PDF கோப்புக்களை எளிதாக உருவாக்க முடியும்.
 இப்பொழது நீங்கள் MS Office open செய்யவும் file கு சென்று save as -> pdf என கொடுக்கவும்
Tuesday, 25 June 2013

மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர்  சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி  தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.
நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே.  இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு  நம்மை அறியாமலே நீங்கி விடும். 
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.

மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள்:
 • 1.   எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும் சாயந்திர  வேளைகளில் இது சற்றே மாறலாம்  )
 • 2.  வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
 • 3.  சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை. 
 • 4.  முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
 • 5.  எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
 • 6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
 • 7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
 • 8. தூக்கமின்மை.  (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
 • 9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
 • 10. தன்னம்பிக்கை இல்லாமை,
 • 11.   தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
 • 12. எளிதில் எரிச்சல் அடைதல்,
 • 13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
 • 14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல். 
 • 15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு  முழுவதும் வலி, குடைச்சல் --இவை கூட மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.  
உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் . 
நிறைய நேரங்களில் நீங்கள் அறிவதற்கு முன்பே , உங்கள் நெருங்கிய  உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,  (உங்கள் நடத்தையில் உள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு )   இதனை உங்களிடம் தெரிவிக்கும்  நிலை வரலாம்.

மனச்சோர்வு நோய் எதனால் ஏற்படுகிறது?

பெரும்பான்மையான நேரங்களில் நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல் உருவாக்கும் விஷயங்கள் தான் மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது.
சில வகையான உடல் உபாதைகள் கூட மனச்சோர்வு நோயை உண்டாக்கும்.
சில நேரங்களில் எந்த விதமான மன உளைச்சலோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத நேரத்திலும் மன சோர்வு நோய் உருவாகலாம்.

மனச்சோர்வுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு,  மணவாழ்க்கையில்  பிரச்னை,  பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை இவையாவும் இதில் அடங்கலாம் )
சிலவகையான உடல்நலகேடுகள் (தை ராய்ட்  நோய் பாதிப்பு , சில வகையான வைரஸ்  நோய்கள் தாக்குதலக்கு பின்,  சில வகையான புற்று நோய் பாதிப்புக்கு பின்னால், மாரடைப்புக்கு பிறகு, மூளை பாதிப்புகளுக்கு பின்னால்), மனச்சோர்வு நோய் ஏற்படலாம் .
மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .
மரபு வழியாகவும்  மனச்சோர்வு நோய் வரலாம் . இதனால் சில குடும்பங்களில் அதிக  பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.
 குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு நோய் அதிகமாக வரலாம்.
 மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் அதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மது பழக்கத்துக்கும் போதை பொருள் உபயோகத்திற்கும் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.

உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா?
நீங்கள் செய்ய வேண்டியது இதோ:

உங்கள் நோய்க்கு உரிய அறிகுறிகளை உங்கள் நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களிடமோ மனம் திறந்து கூறுங்கள்.
இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் செயல் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள மாறுதல்கள் மனச்சோர்வு நோயினால் ஏற்பட்டது என்று புரியும்.
நீங்கள்  தினசரி செய்ய வேண்டிய வேலைகளை (மனம்
மற்றும் உடல் சோர்வினால் ) பிறகு செய்து கொள்ளலாம்  என்று ஒதுக்காமல் முடிந்த வரை அப்பொழுதே  செய்யப்பாருங்கள். ( அதிக நேரம் எடுத்தாலும் ).
பசியுணர்ச்சி இல்லாவிட்டாலும் அந்தந்த வேளைகளில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
நாள்தோறும் சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று, சரியான நேரத்தில் எழுந்து விடுங்கள்.
   தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துகொண்டோ, தொலைகாட்சி பார்த்துகொண்டோ இருங்கள். 
தூக்கம் வரவில்லை என்பதற்காக படுக்கையை விட்டு எழுந்து செல்லாதீர்கள்)
காலையில் விழித்தவுடன்  உடனே எழுந்து விடுங்கள். 
உடல் மற்றும் மன அசதியினால்தூக்கத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்தாலும் கூட மேலும் படுக்கையில் படுக்காமல் உடனே எழுந்து விடுங்கள்.
இப்படி செய்தால்  சில மணி நேரங்களில் நீங்கள் ஒருவாரான மனமலர்ச்சி அடைவீர்கள். 
அப்படி செய்யாமல் படுக்கையில், உறங்கினால்தூக்கமும் வராமல் மேலும் உடல் மற்றும்  மனச்சோர்வை அடைவீர்கள்.
மனச்சோர்வு நோயினால்உருவாகும் தாம்பத்திய உறவின் மீதான நாட்டமின்மை, அந்நோய் குணமானவுடன் சரியாகி விடும். அதனால் இதை பற்றி மிகவும் கவலை கொள்ள வேண்டாம். 

தாங்களாகவே மனச்சோர்வுக்கு மருந்தாக மது அருந்த வேண்டாம்.
அது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தும் .
உங்கள் மனச்சோர்வுக்கு காரணம் ஆக உள்ள  குடும்ப பிரச்னைகள், பணபிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். 
ஒரு நாளில் அரை மணியோ அல்லது ஒரு மணியோ உடல் பயிற்சி செய்யுங்கள். இது நடை பயிற்சியோ அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாகவோ இருக்கலாம்.

மேலும் செய்ய வேண்டியது:

·         உங்கள்  மருத்துவரிடம் சென்றுஉங்கள் நோய் அறிகுறிகளை கூறினால்அவர்  உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா, அப்படி இருந்தால் எத்தகைய தீவிரத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து உடனே மருத்துவம் செய்வார்.

·         தற்காலத்தில் இந்த நோயை குணமாக்க சிறந்த மருந்துகள் உள்ளன. 

·         அவை உங்கள் நோயை போக்கி உங்களை பழைய மனிதர் ஆக்கும்.


உங்கள் மருத்துவர் சில சமயங்களில் உங்களை மன நல மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க பரிந்து உரைப்பார்.
இந்த நோயை குணமாக்க மனப்பயிற்சியும்  உதவும்.  
இத்தகைய மன பயிற்சியை  அதற்குரிய பயிற்சி பெற்ற  செவிலியர்கலோ  அல்லது  மன நல வல்லுனர்களோ வழங்குவர். 
 • மனச்சோர்வு நோயை, நீங்கள் செய்த ஏதோ தவறினால் வந்தது என்று அணுகாமல் , ஒரு வகையான நோய் என்றும் , அது குணமாக்க வல்லது என்றும் புரிந்து கொண்டால் நீங்கள் விரைவிலேயே குணமடைவீர்கள்.
 மனச்சோர்வு நோய் பற்றிய அறிமுகமே இது.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir