Monday, 17 June 2013

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:


 நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP
யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்:

1.Strar button
கிளிக் செய்யுங்கள்.
2. Run
கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-
வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4.
கிளிக் ஓ.கே.
5.
அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrative Templates தேர்ந்தெடுங்கள்.
6.
தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7.
இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith
என்பதை கிளிக் செய்யுங்கள்.
8.
அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..


விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.

Windows 7-
ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1.
ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.
திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3.
புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4.
திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

2 comments:

  1. பேஸ்ட் பன்ன முடியவேல்லை

    ReplyDelete
  2. நண்பர் சகாயா அவர்களே...
    கீழேயுள்ள இணைப்பிற்கு சென்று எனது விடியோவை பார்த்து அதன் படி செயல்படவும்
    http://www.youtube.com/watch?v=uROBiC0Wzgw&feature=youtu.be

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir