திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்
தாலுகாவை பிரித்து கடையத்தை தனி தாலுகாவாக அமைக்க தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு
மையக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு
மையக்குழு மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் ரவணசமுத்திரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு
மாவட்ட தலைவர் புகாரிமீராசாகிப் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பீர்கண்
முன்னிலை வகித்தார். கடையம் ஒன்றிய த.நா.நு.பாதுகாப்பு மையகுழு சேர்மன் முகமது
இக்பால் வரவேற்றார். சமூக ஆர்வலர் முகமது சலீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொண்டார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கடையம் யூனியன்
பகுதியை சேர்ந்த 23
கிராம
பஞ்., மற்றும் ஆழ்வார்குறிச்சி
டவுன் பஞ்.,
பகுதியை
சேர்ந்த மக்களும் தேர்தல் பிரிவுகளான அடையாள அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல்
போன்றவற்றிற்கு ஆலங்குளம் தாலுகா அலுவலகத்திற்கும், வருமான சான்று, இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, இறப்பு, பிறப்பு சான்று, வாரிசு சான்றிதழ், பட்டா மாற்றம், ரேஷன் கார்டில் பெயர்
சேர்த்தல்,
நீக்குதல், புதிய ரேஷன் கார்டு
போன்றவற்றிற்கு அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதுள்ளது.
இதனால்
பொதுமக்களுக்கு ஏராளமான பொருட்செலவும், நேரமும் வீணாகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி
தமிழகத்திலேயே பெரிய தாலுகாவான அம்பாசமுத்திரம் தாலுகாவை இரண்டாக பிரித்து
கடையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைத்துதர தமிழக
முதல்வருக்கும்,
ஆலங்குளம்
தொகுதி எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரனுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் வக்கீல் பீர்முகம்மது, கடையம் ரவி, பாப்பான்குளம் சண்முகசுந்தரம், டாக்டர் ஷமீர், ஹரி, நியாஸ், செய்யதலி உட்பட பலர் கலந்து கொண்டனர். ரவணசமுத்திரம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையக்குழு சேர்மன் முகமது யஹ்யா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment