Tuesday, 18 June 2013

ரயில்வே M டிக்கட்:






தற்போது ரயில் பயணிகள், "இ-டிக்கெட்' முறையிலும், தங்கள் பயணத்திற்கான டிக்கெட்களை பெறுகின்றனர். இந்த முறையில் டிக்கெட் பெறும்போது, பயணத்தின்போது, "டிக்கெட்டின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். பரிசோதகர் கேட்கும் போது, அதை காண்பிக்க வேண்டும். தற்போது, எம்-டிக்கெட் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறையில், "டிக்கெட் நகலுக்கு பதிலாக, தங்கள் மொபைல் போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.,சை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும். இந்த எம்-டிக்கெட் முறையில், டிக்கெட் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் போனில் இணையதள வசதியை பெற்றிருக்க வேண்டும்.

www.indianrailways.gov.in
என்ற ரயில்வே இணைய தள முகவரிக்கு சென்று, டிக்கெட்டுக்கான விண்ணப்பத்தை "டவுண்லோடு' செய்து, அதை பூர்த்தி செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.இதன்பின், ரயில்வே சார்பில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சில் டிக்கெட் பற்றிய விவரங்கள் இருக்கும். ரயில்வே இணையதள முகவரிக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், இந்த விவரங்களை பெறலாம். டிக்கெட் பதிவு செய்யும் முறை, கட்டண விவரம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir