Tuesday, 29 October 2013

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா? உங்கள் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு!தமிழத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு அனைவரும் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டாட விரும்புவர். பெரும்பகுதியினர் சென்னையில் தான் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவ்வகையான பண்டிகைகளுக்கு செல்லும் போது திருடர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். பட்டப்பகலிலே தைரியமாக கொள்ளை அடிக்க கூட்டம் இருக்கும் போது வீட்டில் யாரும் இல்லை என அறிந்தால் கேட்கவா வேணும்.

இதனை தடுக்கவே மாநகர போலிஸ் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது

வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்குச் சென்று தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக மாநகர காவல் துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட பூட்டியிருக்கும் வீடுகளை அந்தந்த பகுதி போலீஸார் இரவும் பகலும் கண்காணிப்பர்.
  வீட்டை பூட்டிச்செல்லும் போது தங்களது பயண விபரங்களையும்,அதாவது புறப்படும் நாள்,திரும்ப வரும் நாள் போன்ற விபரங்களை வீட்டில் மதிப்பு மிக்க பொருள் உள்ளதா என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இதற்காக எஸ்.எம்.எஸ் பதிவேடு ஒன்று பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

இந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும்  உடனுக்குடன் சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் மாநகர போலீஸ்  கமிஷனர் அலுவலத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் களை  அந்தந்த காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு மஞ்சள் நிற பைக்கில் வரும் போலீஸார் அந்த வீடுகளை பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீஸார்  இரவிலும் பாதுகாப்பில் ஈடுபடுவர்கள். சம்பந்தபட்ட வீட்டில் பணிபுரியும் தொழிலாளிகள், பால் காரர்கள், காய்கறிகாரர் மற்றும் பேப்பர் காரர்கள் கண்காணிக்கப்படுவர்.

வீடு பூட்டியிருக்கு என்ற தகவலை 9840700100 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்ட முறையுள் தகவல் அனுப்பவேண்டும்.

Locked House Door No.
Locality:
From date:

Monday, 28 October 2013

"மோட்டு தெரிஞ்சா, உடனே கிளம்பி வீட்டிற்கு வந்து விடு" !!!


மந்தியூர் எனும் கிராமத்தில் ஒரு அம்மா தன் பிள்ளையை மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் வளர்த்து வந்தாள். அவன் நன்றாக படித்து கல்யாண வயதை அடைந்த உடன் அவனுடைய அம்மா அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவன் கல்யாணம் ஆன பின்னும் தன்னுடைய அம்மா சொல்லை மதித்து அதன் படி நடந்து வந்தான். சில காலம் சென்றது, அவன் அம்மாவிடம் சென்று "நான் விருந்துக்கு மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன்" என்றான். அதற்க்கு அவனுடைய அம்மா "போய் வா மகனே, "மோட்டு" தெரிஞ்சா உடனே கிளம்பி வந்து விடு" என சொன்னாள். அவனுக்கு புரியவில்லை. இருந்தாலும் "சரி" எனக்கூறிக்கொண்டு விருந்துக்கு சென்றான்.

அங்கு அவனுக்கு நல்ல உபசரிப்பு. முதல் நாள் ஆட்டுக்கறிகுழம்பு, மறுநாள் கோழிக்கறி, மூன்றாம் நாள் மீன் கறி குழம்பு ...என  சென்றது. அந்த நேரம் வயல் அறுவடை காலம் எனவே அனைவரும் வயல் அறுவடைக்கு மும்முரமாக இருந்தனர். மாமியார் வீட்டிலும்  அனைவரும் வயலுக்கு சென்றதால் மனைவி மட்டுமே இருந்தாள். மதிய நேரம்...  மனைவி தன்னுடைய கணவனை சாப்பிட அழைத்தாள், கணவனும் வந்து உட்கார்ந்தான் மனைவி மெதுவாக கணவனிடம் சென்று " இன்றைக்கு அறுவடை என்பதால் அனைவரும் வயலுக்கு சென்று விட்டனர் எனவே சமைக்க நேரம் இல்லை இன்னைக்கு மட்டும் பழைய சோறு கஞ்சி சாப்பிடுறிங்களா?" என கேட்டாள். அதற்க்கு அவன் பரவாயில்லை கொண்டுவா" என கூறினான். அந்த காலத்தில் பெரும்பாலான வீடுகள் மோட்டு வீடுகளாக (முக்கோண வடிவில்) தான் இருக்கும். இவன் பெரிய கிண்ணத்தில் இருந்த அந்த பழைய சோறு கஞ்சியை சாப்பிட தயாரானான் அப்பொழுது அந்த கஞ்சியில் உற்றுப்பார்த்தான் அதில் , அந்த வீட்டின் மேலுள்ள மோட்டு தெரிந்தது. இப்பொழுது அவனுடைய அம்மா சொன்ன வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது. பொறுமையாக சாபிட்டான். பின்னர் மாலைபொழுது ஆனதும் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு தான்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்து விட்டான்.

இத தான்.. கிராமங்களில் சொல்லுவார்கள் .. "விருந்தும், மருந்தும் மூன்று நாள்" என.

Monday, 21 October 2013

சொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா?


பொதுவாக பெரும்பாலோர் தன்னுடைய பிள்ளைகளை  சொந்த உறவினர்களுக்கே திருமணம் செய்து வைக்கவே விரும்புவர். ஏனெனில் அதுவே ஒரு பாதுகாப்பு என நம்புகின்றனர்.

இது ஒரு விதத்தில் நன்மை என்றாலும் பெரும்பாலோருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதில் பார்வை குறைவு, இரத்த கசிவு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது உடலில் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும். உடம்பில் எங்காவது அடிப்பட்டால் இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்க நமது உடம்பில் உள்ள இரத்தம் உறையும் தன்மையை அடையும். இது  இரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தம் உறையும் தன்மை இருக்காது, இதனால் அவர்களுக்கு இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

இந்நோய் மரபு ரீதியானது இது ஆண்களையே அதிகம் பாதிக்கிறது, இந்நோய் உள்ளவர்களுக்கு பல் ஈருக்களுக்கிடையே இரத்த கசிவு ஏற்படும், சிறு காயம் ஏற்ப்பட்டாலும் பெருமளவு  இரத்தம் வெளியேறும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

அடுத்து சொந்தத்தில் திருமணம் செய்வதால் இருவருக்கும் ரத்த அணுக்களில் அதிக வேறுபாடு இருக்காது இதனால் பார்வை கோளாறு ஏற்படும். எனக்கு தெரிந்த ஒருவர் அவரது தாய் மாமா பொண்ணை தான் திருமணம் செய்தார். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன அவற்றில் இரண்டு பேருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. அதாவது கிட்டப்பார்வை நோய். அருகில் உள்ள பொருள்  அவ்வளவு எளிதாக தெரியாது. அதுவும் மாலை நேரத்தில் பார்வை கோளாறு அதிகாமாக இருக்கும். இது நான் நேரில் பார்த்த நிகழ்ச்சி.

எனவே சொந்த பந்தத்தில் திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டால் அவர்களுடைய எதிர்கால  சந்ததிகள் எந்தவித குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கும். 

Saturday, 12 October 2013

மக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


மக்காவில் ஹஜ்ஜ் புனித யாத்திரை  இன்று மீனா வில் இருந்து தொடங்குகிறது. நாளை அராபா தினம் ஆகும்.

சட்டத்திற்கு விரோதமாக அதாவது அரசு அனுமதி இல்லாமல் யாரும் ஹஜ்ஜ் செய்ய முற்படுபட  வேண்டாம் என சவூதி  அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனெனில் மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடைபெறுவதால் அதிக அளவிலான ஹாஜிகள் கூடும் போது இடையூறு  ஏற்படும் என கருதுகின்றனர்.

இதுவரை சட்டத்திற்கு விரோதமாக மக்காவிற்குள் நுழைய முற்பட்ட 1,106 ஹாஜிகளை சிறப்பு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் 593 வாகன ஓட்டுனர்களையும், 2,296 அடையாளம் தெரியாத நபர்கள் அதாவது எந்தவித சான்றும் இல்லாதவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய்ப்f நகரிலிருந்து மலைக்குன்று வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்ற ஒரு நபர் காரில் சென்று கொண்டிருக்கும் போது மலை உச்சியிலிருந்து அவரது கார் கவிழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

போலிஸ் அதிகாரிகள் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜித்தா போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

குவைத் நாட்டை சார்ந்த ஒரு நபர் குர்பானிக்கான கூப்பன்களை விற்று வந்ததை அறிந்த போலிஸ் அவரை உடனே கைது செய்து அவரிடமிருந்த 65,000 சவூதி ரியாலை கைப்பற்றினர்.

மேலும் மக்கா நகருக்குள் யாரேனும் அல்லது எந்த கம்பனி நபர்களும் உணவு பொட்டலங்கள் கொடுத்தால அதனை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அப்படி சாப்பிட முற்ப்பட்டால் அந்த உணவு காலாவதி தேதியை பார்த்து சோதனை செய்து பின்னர்  சாப்பிடவும், சந்தேகம் படும்படி இருக்கும் நபர்களிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 11 October 2013

ஹஜ்ஜை முன்னிட்டு, மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைய முயன்ற 55 நபர்கள் கைதுபுனிதஹஜ்ஜை முன்னிட்டு ஜித்தாவிலிருந்து மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைவதை தடுக்க, அனைத்து புறவழி தடங்களிலும் அதிக அளவில் போலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜித்தா தலைமை போலிஸ் அதிகாரி Maj.Gen.Abdullah Al Qahtani கூறினார்.

மேலும் ஜித்தாவிலிருந்து 55 ற்கும் மேற்பட்ட பாலைவன தடங்கள்  உள்ளன  இதில் அல் ரேஹைலி, அபூ ஜலா மற்றும் அல் கும்ரா சாலைகளும் அடங்கும்.

இவ்வகையான அனைத்து தடங்களிலும் போலிஸ் உசார்படுத்துவதோடு திருட்டுத்தனமாக ஆட்களை ஏற்றிவரும் வாகனக்களை பறிமுதல் செய்யவும், அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஜித்தாவிலிருந்து தான் அதிக அளவில் இத்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன அதாவது அல் காக்கியா,சுஹைபா ரோடு, அல் ஜம்ஜும், ஹுதா-அல்-ஷாம் போன்ற வழித்தடங்களில் அதிக அளவிலான அதிரடி படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த வருடம் சவூதியில் வசிக்கும் நபர்கள் ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் முறையான ஹஜ்ஜ் அனுமதி (ஹஜ்ஜ் பேப்பர்) பெற்று செல்லவும்.  அனுமதி இல்லாமல் செல்பவர்களுக்கு ஒருவருட சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்யப்படும்.

இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மக்காவிற்கு நுழையமுற்ப்பட்ட 15000 ஹாஜிகள் தடுத்து திருப்பி அனுப்பபட்டனர். அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக  55 நபர்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் 12200 கார்கள் திருப்பி அனுப்பபட்டது. 

பாம்புக்கு காது உண்டா?


ஒருவருக்கு காது நன்றாக கேட்டால் அவனுக்கு "பாம்பு காது" என்று கூறுகிறோம். தமிழில் "இடியேறு நாகம் போல..." என்ற மரபு சொல்லை பயன்படுத்துகின்றோம். பாம்பாட்டியின் மகுடி இசையைக்கேட்டு பாம்பு ஆடுகிறது, அவ்வாறாயின் பாம்புக்கு  காது உண்டு தானே.. அதான் இல்லை.

தமிழ் இலக்கியங்களில் "கட்செவி" என்று பாம்புக்கு கூறப்படுகிறது. பாம்பின் கண்ணே செவியாக பயன்படுகிறது என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது அறிவியலாரின் ஆராய்ச்சிகளின்படி நீர் அலைகளுக்கு ஏற்ப ஒரு கப்பல் எப்படி அசைகின்றதோ அது போன்று தரையில் இடம்பெறும் சிறு நிகழ்வுகளும் அதிர்வலைகளாக பாம்பின் தாடையால் உணரப்படுகிறது. அது உட்செவிக்கு அனுப்பபட்டு அதன் மூலம் மூளையை சென்றடைகிறதாம் ஆகையால் அவை மண்ணுக்குள் புதைந்து கொள்ளும்போதும்  துல்லியமான ஒலி அலைகளை அவற்றால் உணரமுடியும்.

அப்படியென்றால் மகுடி இசையை கேட்க்கும் திறன் இன்றிய பாம்புகள் ஒரு தற்காப்புக்காகவே அவ்வாறு ஆடுகின்றன.

Tuesday, 1 October 2013

எல்லா வகையான HP Printer க்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய


தற்பொழுது அனைத்து  அலுவலகங்களிலும் கணினி மற்றும் பிரிண்டர் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. நிறுவனத்தின் அனைத்து அறிக்கைகளையும் உடனே கொடுக்க இந்த பிரிண்டர் உதவும்.

சில நிறுவனங்களில்  அந்த கணினி மற்றும் பிரிண்டர் ரொம்ப காலமாக பயன் படுத்தி வருவார்கள். சில நேரங்களில் அந்த கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை பார்மேட் செய்து விடுவார்கள். இதனால் கணிணியிலிருந்த பழைய மென்பொருள்கள் அனைத்தும் அழிந்து விடும். இப்பொழது நமது பிரிண்டர் வேலை செய்யாது. பிரிண்டர்க்கான வன் தட்டு தேடியும் கிடைக்க வில்லை.

பிரிண்டருக்கான வன்தட்டை வைத்து தான் அந்த பிரிண்டரை இயக்கமுடியும் என்று இல்லை. இணைய இணைப்பை பயன்படுத்தி அதற்க்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து அந்த பிரிண்டரை திரும்ப இயக்கமுடியும்.

கீழ்க்கண்ட இணையதளத்திற்க்கு சென்று இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.


கீழேயுள்ள தளத்திற்குச்சென்று

Find by product என இருக்கும் அதில் உங்களுடைய பிரிண்டரின் மாடல் எண்ணை கொடுக்கவும். பின்னர் கீழே அந்த பிரிண்டர் தொடர்பான மாடல் வரும் அதில் உங்களுடைய பிரிண்டரை தேர்வு செய்யவும்.

பின்னர் "Select your operating system" என வரும் அதில் உங்களுடைய கணினி விண்டோ எது என தேர்வு செய்யவேண்டும். உதராணமாக windows xp அல்லது windows 7 அல்லது window 8 இதில் எது உங்கள் கணினியின் செயல்பாடு என தேர்வு செய்து "NEXT" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

 இப்பொழுது கீழே பாருங்கள் "Drivers- Product installation software" என வரும் அதனை கிளிக் செய்வதன் மூலம் "DOWNLOAD" என ஒரு பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பிரிண்டருக்கான டிரைவர் மென்பொருள் கணினியில் தரவிறக்கம் ஆகும். தரவிறக்கம் ஆன உடன் உங்கள் பிரிண்டர் கேபிளை கணினியில் சொருகி RUN கொடுக்கவும். அவ்வளவு தான் இப்பொழுது உங்களுடைய பிரிண்டர் திறம்பட வேலை செய்யும்..
இணையதள முகவரி
http://www8.hp.com/us/en/drivers.html
 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir