Sunday 19 May 2013

ஏன் விளையாடனும்

ஏன் விளையாடனும்

அது பெரிய மைதானம். அங்கு 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த வழியாக சென்ற ஒரு முதியவர் அவர்களை கவனித்தார் குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதை சிறிதுநேரம் ரசித்தார். அதன் பிறகு அவர் மெதுவாக கை தட்டி அவர்களை அழைத்தார்.

சிறுவர்கள், பெரியவரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய வினோத உடை அலங்காரமும், ஜடாமுடியும் அவர்களுக்கு சிரிப்பு மூட்டின.

அவர் அவர்களைப் பார்த்து " கண்ணுகளா, நீங்க எப்பவும் இந்த மைதானத்தில் தான் விளையாடுவீங்களா ?"

"ஆமாம்" என்றனர்.

"எதுக்காக தினமும் விளையாடுறீங்க ? அதனால உங்களுக்கு என்ன பலன்? "

முதல் சிறுவன் சொன்னான் " நல்லா விளையாடினா உடம்பு பலமாகும். அதுக்கு அப்புறம் நாம் யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து வர்றவங்களையெல்லாம் ஊதிதள்ளிடலாம்"

இந்த பதிலைகேட்ட பெரியவருக்கு மிகவும் மகிழ்ச்சி. " நீ பெரிய பயில்வானாக வருவே " என்றார்.

அதன் பிறகு, 2 வது சிறுவனிடம் "நீ ஏனப்பா தினமும் விளையாடுறே?" என்றார்.

அவன் " ஜாலியா விளையாடினாத்தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம், முகத்தை கழுவி விட்டு உட்க்கார்ந்து படிச்சா, எல்லாம் சட்டுன்னு மண்டைல ஏறும்" னு சொன்னான். 

"பிரமாதம் நீ பெரிய படிப்பாளியா வருவே" 

பிறகு 3 வது சிறுவனிடம் அதே கேள்வியை கேட்டார்.

அவன் சுருக்கமாகப் பதில் சொன்னான். "எனக்கு விளையாடப் பிடிக்கும். அதான் விளையாடுறேன்" என்றான்.

அந்த பெரியவன் அச்சிறுவனை ஆச்சிரியத்துடன் பார்த்தார். " இனிமே நீ தான் என்னோட குரு" என்றார். 


ஆகவே.. ஒவ்வொன்றுக்கும் காரணம், பின் விளைவுகள், லாப நஷ்டங்களை எல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்காமல், அந்த கனத்தைச் சொட்டு மிச்சம் வைக்காமல் அனுபவியுங்கள்.

இன்டர்நெட் மோடத்தை UNLOCK செய்வது எப்படி?




நாம் பயன்படுத்தும் இணைச்சேவை வழங்குனர்களின் (AIRTEL, RELAIANCE, DOCOMO, MTS, VODAFONE) 

Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM ஐ தவிர வேறு எந்த SIM ஐ யும் பயன்படுத்த முடியாத வாறு தடுத்து வைத்திருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM னை Dongle இல் போட்டால் unlock code கேட்கும். அதில் சரியான code ஐ நாம் கொடுத்தால் அந்த Dongle, unlock செய்யப்பட்டு விடும். சரி இந்த Unlock code ஐ எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle ன் 15  இலக்கை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள். இது Dongle ன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ உங்களுடைய Calculate கொடுக்கவும்.

இப்போது உங்களுடைய Dongle குரிய Unlock code கிடைக்கும்.

அதை அப்படியே copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM னை Dongle குள் போடுங்கள். உங்களிடம் Unlock Code கேட்க்கும், அந்த இடத்தில் paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். 


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) 

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). 

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல
 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir