Sunday, 28 July 2013

ஆன்லைனில் நமக்கு தேவையான mp3 பாடல்களை ரீங்க்டோனாக மாற்றலாம்


ஆன்லைனில் நமக்கு தேவையான mp3 பாடல்களை ரீங்டோனாக மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கு  நீங்கள் எவ்வித மென்பொருளையும் தரவிறக்கம் செய்ய தேவையில்லை.

கீழேயுள்ள இணையமுகவரிக்குச்சென்று "upload by url " என்னும் இடத்தில் உங்களுக்கு தேவையான mp3 பாடலின் இணையதளமுகவரியை கொடுத்தால் போதும்.
மேலும் நீங்கள் தரவிறக்கம் செய்த பாடல்களையும் இங்கே மாற்றிக்கொள்ளவும் வசதி உண்டு.
இணையமுகவரி   http://ringer.org/

Saturday, 27 July 2013

நீங்கள் உங்களுடைய காதலி (அ) மனைவியுடன் ரொமண்டிக் மூடில் பேசுபவரா... ஜாக்கிரதை !!


“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பாத்தணும்’’’ என்றபடி கண்ணீருடன் நக்கீரன் அலுவலகத்திற்கு  வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என அவர்கள் கேட்க்கும் முன்பே…
“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என்மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார்.

என்னையும் அவர் அளவுக்கு பேச வைப்பார்” ’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘
“சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே… இதில் என்ன பிரச்சினை?’’ என்றோம்..
அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிர வைத்தது.

“அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லைமீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணியிருக்கான்.
இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத்தகவல் சொன்னார். கூடவே “நக்கீரன்ட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்தவர் அந்த இணையதள முகவரியையும் கொடுத்தார்.
அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த … அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித் தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப் பட்டிருந்தன.
காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன.
உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன் மத உலகமா? என திகைத்துப்போன நாம்…
நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.
பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு…
“இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.
முதல்வகை, நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும்.  இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ண முடியும்.

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும்.
நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசு வாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.
மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், “உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்’என்றார் விரிவாக.
பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார்.

“”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந் தப்ப… “எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப் படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக் கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே “என் பேரு நந்தினி.
மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும் னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து … அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்து விட்டது.
காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050  ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்தபோ து இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம்புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்கா ங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத் தை அந்த ஆபாசக் கும்பலிடம் பறி கொடுத்துக்கிட்டு இருக்காங்களோ”’ என்றார் எரிச்சலாக.
வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் “”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங்செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன்மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம்.

சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதே போல்… இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக் கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ண முடியும்.
இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க் கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.
சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது’”மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அதவச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம்.
இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம் பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சி னைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண் காணிக்கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.
மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

மேலும் பல பேர் வெளிநாடுகளிருந்து வெஸ்டேர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்பும் பொது அதனுடைய கோடு நம்பர்களை போன் மூலமாக தான் தெரிவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே sms மூலமாக தெரிவிப்பது தான்  சிறந்தது.

Thursday, 25 July 2013

நிறைவு பெற்றது தந்தி சேவை


நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, ஜூலை 15  ம் தேதி இரவு, 12:00 மணியோடு நிறைவு பெற்றது.

இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், இந்திய தந்தி சட்டம் உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ஜூலை, 15ம் தேதி நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார்.

Tuesday, 23 July 2013

பற்களில் உள்ள கரைகளை நீக்க..


டூத் பிரஷ்  உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மங்கனேட் என்ற வேதிப் பொருள்(pottasium permanganate)  ( KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்களில் கிடைக்கும். இதனை வாங்கி வெதுவெதுப்பானநீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும் ) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளிக்கவேண்டும் (துவர்ப்புத்தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடகூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத்தன்மை அதிகரித்துவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகி விடும். வருடத்திருக்கு  ஒரு முறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.

பிறகென்ன பல்மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது. முயற்சி செய்து பாருங்கள்.

புதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்


புதிய E-Mail வந்ததா என்று SMS மூலம் அறிந்திட 

சிலருக்கு(என்னை மாதிரி ) தினமும் E-Mail பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அது போன்ற சமயங்களின் நமக்கு மிக முக்கியமான E-Mail ஏதும் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்வது? 

நமக்கு வரும் E-Mail-ஐ நமது செல்போனுக்கு SMS மூலம் தெரியப்படுத்துவதற்காக ஓர் இணையதளம் நமக்கு உதவுகிறது. இது ஒரு பயனுள்ள தளம். நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனே SMS மூலம் தெரியப்படுத்துகிறது. குறிப்பாக இது மற்ற நாடுகளை விட இந்தியாவிலுள்ள அனைத்து Cellphone Network-லும் நன்றாக செயல்படுகிறது என்பது தனி சிறப்பு.
பின்வரும் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். 
http://www.site2sms.com/userregistration.asp

பதிவு செய்து முடித்தவுடன் உங்களது செல்ஃபோனுக்கு ஒரு SMS வரும். அதில் உங்கள் Password இருக்கும். 

இனி புதிய E-Mail உங்களது செல்போனுக்கு SMS மூலம் வரும்...

Monday, 22 July 2013

புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல்


புதிய ரேஷன் கார்டு: இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ள விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கோரி விண்பப்பித்தவர்களில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு புதிய ரேஷன்கார்டு அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பியும் வரவில்லை. இதனால் http://tirunelveli.nic.inஎன்ற இணையதளத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் இடம் பெற்றிருப்பின் தற்போது வசித்து வரும் முகவரிக்கான விட்டுத் தீர்வை ரசீது, மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு முதலான ஆவனங்களுடன் மனுதாரரே மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மனுதாரர் அல்லாத பிற நபர்களிடம் குடும்ப அட்டை வழங்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள்


நம்முடைய கணணியை காப்பாற்ற நிறைய ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள்  உள்ளன. ஆனால் நம் கண்களை பாதுகாக்க....?

இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள், சிலருக்கு கண்ணில் நீர் வரும்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இந்த  சாப்ட்வேர் மிகவும் பயன்படும்.

கிழ்க்கண்ட தளத்திற்க்குச்சென்று  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது.

கீழ்க்கண்ட தளத்திற்குச்சென்று தரவிறக்கம் செய்யவும்.

http://justgetflux.com/

இப்பொழுது நீங்கள் இரவு நேரங்களில்  நீண்டநேரம் கண்சோர்வின்றி பணிபுரியலாம். வேலையும் பார்த்தாச்சு... கண்ணுக்கும் பாதுகாப்பு ஆச்சு.

Saturday, 20 July 2013

Lock செய்யபட்ட Wifi Internet signal லின் password ஐ எளிதாக கண்டுபிடிக்க


 
நீங்கள் லேப்டாப் அல்லது மொபைலில்  இன்டர்நெட் பயன்படுத்த சொந்தமாக இணைய இணைப்பு வாங்கி அதனை பயன் படுத்தி வருவீர்கள் அதனை தான் மட்டுமே பயன் படுத்தும் வகையில் பாஸ்வேர்ட் போட்டு வைத்து இருப்பீர்கள், சில சமயம் நாம் கொடுத்த பாஸ்வேர்ட் மறந்து போயிருக்கும். நமது கணினியில் நாம் கொடுத்த பாஸ்வேர்ட் எவ்வாறு கண்டு பிடிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் கணிணி திரையில் இடது பக்கம் )அடியில்(wifi signal பார்க்கவும்  )date & time அருகில்) அதை கிளிக் பண்ணவும். இப்பொழுது "Open Network and Sharing Center” என இருக்கும் அதை கிளிக் பண்ணவும். இப்பொழுது ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அதில் “Manage Wireless Network” கிளிக் பண்ணவும்

இங்கு wifi name list வரும். அதில் வரும் wifi ஐ டபுள் கிளிக் பண்ணவும்.

கீழ்க்கண்டவாறு வரும். 


அதில் “ security” எனும் tap ஐ  கிளிக் செய்து, “show character” என்பதை கிளிக் செய்து பார்த்தால்.......

 இப்போது நாம் கொடுத்த பாஸ்வேர்ட் ஐ பார்க்கலாம். 

Friday, 19 July 2013

உங்களுடைய Laptop model பற்றி தெரிய வேண்டுமா..?


உங்களுடைய கம்ப்யூட்டர் ஸ்டார்ட் மெனு விற்கு போங்கள்..

START

PROGRAMS

ACCESSORIES

SYSTEM TOOLS

SYSTEM INFORMATION

இப்பொழுது உங்களுடைய கணிணியின் மாடல் நம்பர், மெமரி தகவல் மற்றும் இன்ன பிற தகவல்களையும் பார்க்கமுடியும் 

ஆன் லைனில் அரசு வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படிதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

கவனிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.
கவணிக்க 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
கவணிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.
கவணிப்பு 4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : TND2010M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: TND - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி )
பதிவு செய்த ஆண்டு: 2010
ஆண் / பெண் : M/F
பதிவு எண்: 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID: TND2010M00007502
Password: dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
கீழே உள்ள மாதிரி  ஓபன் ஆகும்


அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.

இதுப்பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்(உங்களுடைய ஐ டி ஓபன் ஆகலையா..அல்லது வேறே ஏதேனும் பிரச்சனையா.. கீழே உள்ள comment box ல் உங்களது கருத்தை தெரிவிக்கவும்.


வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்ணும், மாவட்ட விவரமும்:
1. ARD - District Employment Office-Ariyalur
2. CBD - District Employment Office-Coimbatore
3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore
4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore
5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai
6. CHP - Professional and Executive Employment Office-Chennai
7. CHR - Regional Deputy Director Office-Chennai
8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai
9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai
10. CHU - District Employment Office (Unskilled)-Chennai
11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore
12. CUD - District Employment Office-Cuddalore
13. DGD - District Employment Office-Dindigul
14. DRD - District Employment Office-Dharmapuri
15. ERD - District Employment Office-Erode
16. KGD - District Employment Office-Krishnagiri
17. KPD - District Employment Office-Kancheepuram
18. KRD - District Employment Office-Karur
19. MDD - District Employment Office-Madurai
20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai
21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai
22. NGD - District Employment Office-Kanyakumari
23. NKD - District Employment Office-Namakkal
24. NPD - District Employment Office-Nagapattinam
25. PDD - District Employment Office-Pudukottai
26. PRD - District Employment Office -Perambalur
27. RPD - District Employment Office-Ramanathapuram
28. SGD - District Employment Office-Sivaganga
29. SLD - District Employment Office-Salem
30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy
31. TCD - District Employment Office-Trichy
32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy
33. THD - District Employment Office-Theni
34. TJD - District Employment Office-Thanjavur
35. TMD - District Employment Office-Thiruvannamalai
36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli
37. TND - District Employment Office-Thirunelveli
38. TPD - District Employment Office-Tiruppur
39. TRD - District Employment Office-Thiruvarur
40. TTD - District Employment Office-Tuticorin
41. TVD - District Employment Office-Thiruvallur
42. UGD - District Employment Office-Nilgiris
43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris
44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore
45. VLD - District Employment Office-Vellore
46. VPD - District Employment Office-Villupuram
47. VRD - District Employment Office-Virudhunagar

Thursday, 18 July 2013

F.I.R பதிவு செய்வது எப்படிFirst Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களை யும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய் ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உட னடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக் கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்ச லை உண்டாக்கும் வகையிலான குற்ற ங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குப வை. இக்குற்றங்களில் பாதிக்கப்பட் டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசரகாலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத் திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்க வாட்டில் இரு வெள்ளைக்கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்கவேண் டும்.
அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய் மொழி வாக்கு மூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கைரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப் பதை உறுதி செய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்யவேண்டும்.
பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதி க்குக் கிடைத்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, விசாரணை நடவ டிக்கையைத் தொடங்கவேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசார ணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப் பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்ஆகியவற்றில் உள்ள முரண்பாடுக ளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள்.

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும்மீதி ஐந்து நகல்களைத்தான் புகார்தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித்தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

Tuesday, 16 July 2013

ரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...


ரேஷன்  கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...
இதோ நீங்கள் செய்ய வேண்டியது.. இது தான்

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்க போறிங்க, ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்க்கும் பொருளின் ஸ்டாக் தீர்ந்து போச்சு, இன்னும் வரல னு சொல்றார்.

உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை " ஒரு முறையை அறிமுகப்படுத்தியிள்ளது.
உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ் சொல்ற நம்பருக்கு கீழே வர்ற மாதிரி SMS அனுப்புங்க அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.

SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450  இந்த இரண்டு நம்பர்ல  ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி SMS பண்ணுங்க

(PDS) ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு (மாவட்டக்குறியீடு) அப்புறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க (கடை எண்) இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. உதாரணமாக PDS 18 FP081

மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீர்கள் என்றால் உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டில் இருக்கும். (படத்தை பார்க்கவும்)


ஹஜ் பேப்பர்


சவூதியில் உள்ள நண்பர்கள் ஹஜ்ஜ் செய்ய போறிங்களா..ஹஜ்ஜ் பேப்பர் தயார் செய்து கொண்டு செல்லவும். இதுவே சவூதி அரசாங்கத்தின் அனுமதி சான்றிதல் ஆகும்.

நீங்கள் செய்ய வேண்டியது இந்த பேப்பர் ஐ பிரிண்ட் எடுத்து கொண்டு அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி  உங்களுடைய கம்பனி ஓனரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு பின்னர் ஏதாவது ஒரு ஹஜ்ஜ் ஏஜென்ட் இடம் கொடுத்து விடவும். அவர்கள் அதனை ஜவசாத் இடம் கொடுத்து அனுமதி பெற்றுதருவார்கள்.

இப்பொழுது நீங்கள் சட்டபடி ஹஜ்ஜ் செய்ய அனுமதி பெற்று விடுவீர்கள் 

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்


கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை தேங்காய் எண்ணையே கலப்படம் தானா கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..பின் எப்போது தான் கூடுகிறது 
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு 
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது
மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் .கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

மினரல் ஆயில் பற்றி படிக்க விக்கிலீக் தளத்திற்கு செல்ல இங்கே http://en.wikipedia.org/wiki/Mineral_oil

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..

Monday, 15 July 2013

Hello Mr. Bill Gates உங்களுடைய மைக்ரோசாஃப்ட்டின் கண்டுபிடிப்பில் ஒரு தவறு உள்ளது. Lol


கணினி மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் உங்கள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு தவறு உள்ளது. : )

சீக்கிரம் சரி செய்யவும் இல்லை என்றால் ஒபாமாவிடம் complaint பன்ன நேரிடும்..

உங்கள் கணினியில் calculator i open பன்னவும் அதில்
704 / 50 = 54.08 - இது சரியா வேலை செய்யுது
2704 / 51 = 53.01960784 - இதுவும் சரி
2704 / 52 = இது ஏன் வேலை செய்யல... ஏன்?

யாரவது பில்கேட்ஸ்க்கு ஒரு மெயில் அனுப்பி கேளுங்க நா..

இண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்!


இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ? ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை , இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்(Don't make murder : )
http://www.surfoffline.com/

பிறகு டெஸ்க்டாப்பில் இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம்.

இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை-பை(Wi-Fi) இன்டர்நெட்இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.

இது போன்று அவஸ்தை பட்டவர்களில் நீங்களும் ஒருவரா அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி இனி இந்திய ரயில்களில் வருகிறது வை-பை இன்டர்நெட். கடந்த சில வருடங்களாக அனுமதிக்காக காத்து கொண்டிருந்த இந்திய ரயில்வேக்கு இஸ்ரோவிடம்(ISRO) இருந்து அனுமதி கிடைத்து உள்ளது. இஸ்ரோ Ku-band என்ற அலைவரிசையின் மூலம் இந்த வசதியை வழங்க இருக்கிறது. இந்திய ரயில்களில் செயற்கை கோளில் இருந்து சிக்னலை பெரும் வகையில் ஒரு ஆன்டனாவை பொருத்தி விடுவார்கள் அதன் மூலம் நாம் அதிவேக இணையத்தை ரயிலில் பயணித்து கொண்டே உபயோகிக்கலாம்.

ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.

ஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு!


ஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


நிரூபிக்கப்பட்ட உண்மை:


நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.


எப்படி செய்வது ஆயில் புல்லிங்?


காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.


ஆய்வு முடிவு :

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்:


ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி நமக்கென்று திறமையான மொழி அல்லது நம் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தே மாதம் ஒரு பெரியத் தொகை சம்பளமாக பெறலாம். பாடம் நடத்துவதற்கு நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது, அடிப்படை கணினி அறிவு இருந்தால் மட்டும் போதும், இங்கு மேலே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Start your 30 day free trial என்ற பொத்தனை சொடுக்கி நம் தகவல்களை கொடுத்து உள்நுழையலாம் 1 மாதம் இலவசமாக தங்களின் சேவையை கொடுக்கின்றனர், 

விர்ச்சுவல் கிளாஸ் ரூம் மூலம் வெப் கேமிரா மூலம் ஆசிரியர் நேரடியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம், மாணவர் தங்கள் கேள்விகளை மைக் மூலமாக பேசியும் அல்லது வார்த்தையாக தட்டச்சு செய்து ஆசிரியரிடம் கேட்கலாம் , ஒரே வரைபலகையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தனை அத்தனை மாணவர்களுக்கும் தங்கள் கணினித்திரையில் நேரடியாக பார்க்கலாம், பொறியியல் மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கு , பிராஜெக்ட்களுக்கு இன்றும் விளக்கம் தேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றனர் ஆன்லைன் மூலம் பிராஜெக்ட்களுக்கு முழுமையான விளக்கம் அளித்து நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம், நமக்கு தமிழ் மட்டும் நன்றாக தெரியும் என்றால் அதை வைத்து ஆன்லைன் மூலம் தமிழ் சொல்லி கொடுக்க ரெடி என்று ஒரு வகுப்பை தொடங்கி பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும் , எந்த பணமும் செலுத்தமாலே நம் திறமையை வைத்து ஆன்லைன் மூலம் சம்பாதிக்கலாம்.


http://www.wiziq.com/teaching-online/

தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம்


தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு தனியாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. – 

ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும், தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.

இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார்.

இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதலமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

http://cmcell.tn.gov.in/

Friday, 12 July 2013

EB அலுவலத்தில் complaint செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையா... இத முயற்சி பண்ணுங்க


உங்களுடைய வீட்டு மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளதா? அல்லது உங்களது Low voltage ஆ..? மீட்டர் பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா..?

தினமும் EB அலுவலகத்து அலைய முடியவில்லையா? அப்படியே complaint கொடுத்தாலும் அதற்க்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையா..? கவலையை விடுங்கள்.

கீழ் கண்ட இணையமுகவரிக்கு சென்று ஒரு complaint கொடுங்கள் இங்கே உங்களுடைய complaint என்ன நிலையில் உள்ளது என நீங்களே பார்க்கலாம். 2 நாள் கழித்து பார்த்தால் உங்களுடைய "complaint  processing" என வரும். அடுத்த இரண்டு நாளில் உங்களுடைய வீட்டிற்கு முழு விபரம் அடங்கிய கடிதம் வரும்.

கீழ்க்கண்ட இணையமுகவரிக்குச் செல்லவும். உங்களுகென்று ஒரு அக்கௌன்ட் ஐ உருவாக்குங்கள்

http://tneb.tnebnet.org/ccms/

நானும் இந்த முகவரிக்குச்சென்று என்னுடைய complaint ஐ கொடுத்தேன், இரண்டே நாளில் முழு விபரத்துடன் எனக்கு ஒரு கடிதம் வந்தது. வேலையும் முடிந்தது


உங்கள் வீட்டு மின்கட்டணம் இந்த மாதம் எவ்வளவு வந்துள்ளது என அறிய வேண்டுமா?


நண்பர்களே... உங்க வீடு மற்றும் கடை மின்கட்டணம் எவ்வளவு வந்துள்ளது என தெரியவில்லையா..?
மேலும் அதனுடைய முழு விபரமும் அரிய  வேண்டுமா..?
கீழ்க்கண்ட இணையமுகவரிக்கு செல்லவும்.

http://tneb.tnebnet.org/newlt/menu3.html

முதலில் உங்களுடைய மாவட்டத்தை தெரிவு செய்யவும், பின்னர் உங்களுடைய EB Service number ஐ கொடுக்கவும்.
கீழ்க்கண்டவாறு வரும்Wednesday, 10 July 2013

ஆன் லைனில் எளிதாக மின் கட்டணம் செலுத்த

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் பயன்பெறும் பொருட்டு இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் வங்கி மின்னணு பட்டுவாடா முறையின் மூலம் உயர்வழுத்த மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இவ்வசதிகள் மூலம் மின் நுகர்வோர்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் தங்களுடைய மின்கட்டணத்தை சிரமமின்றி செலுத்த இயலும்.   மின்நுகர்வோர்கள் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய தளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணத்தை ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ வங்கியின் கடன் அட்டை அல்லது எந்தவொரு வங்கியின் விசா, மாஸ்டர் கார்ட் அல்லது இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் பணஅட்டை அல்லது ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ்வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதள வங்கி சேவையின் மூலம் எளிதாக செலுத்தலாம்.

பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைசியா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவை விரைவில் சேர்க்கப்படும். மின்நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு மற்றொரு புதிய திட்டமான 30 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 30 நாட்கள் மின் கட்டண வசூல் என்ற முறை சென்னை, ஈரோடு மற்றும் கோவை மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.இம்முறையின் மூலம் நுகர்வோர்கள் மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த மின்நுகர்வோருக்கு மின்னஞ்சல் மூலம் மின் கட்டணம் மற்றும் கட்டண கடைசி தேதி பற்றிய விவரங்கள் முறையாகவும், குறித்த நேரத்திலும் தெரிவிக்கப்படுகின்றன.

மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டண முன்பணம் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இவ்வசதியின் மூலம் மின்கட்டணம் நிலுவையில்லாத மின் நுகர்வோர்கள் முன்பணம் செலுத்தலாம்.

முன்பணம் செலுத்தப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட மின் கணக்கீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் தானாகவே முன்பணத்தில் நேர் செய்யப்படும்.  இணையதள வசதியினை மின்நுகர்வோர்கள் பயன்படுத்தி எளிதாக செலுத்தி பயனடையலாம்.


இணையதள இணைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இணையதள வசதியுள்ள கணிப்பொறி மூலம் மின்நுகர்வோர்கள் நேரத்தை வீணாக்காமல் எங்கிருந்து வேண்டுமானாலும் மின் கட்டணத்தை சிரமமின்றி செலுத்தலாம்.

கீழ் கண்ட இணையத்தளத்திற்கு சென்று (new user) உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள் 

https://www.tnebnet.org/awp/login

இப்பொழுது மிகவும் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம் 

Sunday, 7 July 2013

இலவச உம்றா பயணம் – அல்-ஜுபைல்


அல்-ஜுபைல் மாநகரில் வசிக்கும் சகோதரர்களுக்கு அரிய வாய்ப்பு. மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ பள்ளி நிர்வாகம் வழக்கம்போல் இந்த வருடமும் ரமழான் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் இலவச உம்றா பயணம் ஏற்பாடு செய்துள்ளனர் (இன்ஷா அல்லாஹ்). இதில் பயனடைய விரும்பும் சகோதரர் தங்களது இக்காமா காப்பியுடன் பள்ளியின் இமாம் அல்லது முஅத்தீன் அவர்களை நேரில் சந்தித்து உங்களது பயணத்திதிற்க்காக உங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளவும்.

பயணத்தினை உறுதி செய்யும் பொருட்டு பெயர்களை முன்பதிவு செய்யும் சமயத்தில் சவூதி ரியால் 20 மட்டும் கொடுக்கவேண்டும்

பயணத்திட்டம்: மக்கா மட்டும்
வியாழக்கிழமை அஸர் தொழுகை பின் புறப்படும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜுபைல் வந்தடையும் (இன்ஷா அல்லாஹ்)

(இதில் அனைத்து மொழியினரும் கலந்து பயனடையலாம்)

தொடர்புக்கு: 0500 888 485

மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ பள்ளிக்கான வழிதடம்:

    ஜெபல் தெருவில் (Jabel Street) இருக்கும் குடுக்கு (KUDU) எதிர் புறமுள்ள சிறிய சந்தின் வழியாக உள்ளே சென்றால் நீங்கள் ஜும்ஆ பள்ளியை காணலாம்.
    ஜுபைல் டிராபிக் போலீஸ் (Traffic Police Office) அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு எதிர் புறம் உள்ள ரோட்டில் சென்றால் சிறிது தொலைவில் ஜும்ஆ பள்ளியை அடைந்துகொள்ளலாம்.

தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதை நாமே கண்டுபிடிக்கலாம்


நம்முடன் பேசுபவர் எங்கே இருந்து கொண்டு பேசுகிறார் என்பதை நாமே எளிதாக கண்டுபிடிக்கலாம்.

உங்களுக்கு அடிக்கடி ராங்க் கால் வருகிறாதா? அல்லது உங்களிடம் பேசும் போது... எங்கிருந்து கொண்டு பேசுகிறேன்  என்பதை சொல்ல மறுக்கிறாரா? போலீசிடம் போக தேவையில்லை. இண்டர்நெட் ஐ ஆன் பண்ணுங்க கீழே உள்ள இணைய முகவரிக்கு போங்க, அங்கு அந்த எண்ணை தட்டச்சு செய்ங்க

http://www.tp2location.com/

இந்தியா என்றால் 91 அடித்து பின்னர் அந்த எண்ணை அடிக்கவும்.
உதாரணமாக 9789348975 என்றால் 919789348975 என அடிக்கவும்.
இதில் கைபேசி மட்டுமல்ல, தரைவழி பேசியையும் (land line)  எங்கிருந்து வருகிறது  என கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக 914633222266 என தட்டச்சு செய்தால் கீழே உள்ள மாதிரி வரும்

சென்னை பஸ் ரூட் எளிதில் அறிய
சென்னையில் புதியதாக செல்லுபவர்கள் பஸ் ரூட் தெரியாமல் தவிப்பார்கள். இந்த அறிவியல் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் எங்கு வேண்டுமானலும் போகலாம். ஒரு போனும் அதற்கும் இன்டர்நெட் ம்  இருந்தால் போதும்.

http://busroutes.in/chennai/

இந்த வெப் சைட் க்கு சென்று அதில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்லப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிடவும். நான் ஆவடி  to வியாசர்பாடி என  குறிப்பிட்டுள்ளேன்.எனக்கு வந்துள்ள படத்தினை பாருங்கள்.
இதில் எந்த ரூட் நமக்கு தேவையோ அந்த ரூட்டை கிளிக் செய்தால் பஸ் எங்கிருந்து கிளம்பி எந்த எந்த ஸ்டாப்பிங் வரை செல்லும் என்கின்ற விவரம் கிடைக்கும்.

மேலும் இதிலேயே முக்கிய இடங்களாக ஆவடி, கொளத்தூர்,கொண்டித்தோப், வியாசர்பாடி  என இடங்களும்கொடுத்துள்ளார்கள்.உதாரணமாக நீங்கள் கொளத்தூர் என  கிளிக் செய்தால் அந்த ஊரிலிருந்து எங்கு எங்கு பஸ்கள் செல்கின்றன என்கின்ற விவரம் பஸ் எண்ணுடன் நமக்கு கிடைக்கும்.பஸ் எண்ணை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த பஸ்ஸீன் உடைய ரூட் மேப்புடன் கிடைக்கும்.மேலும் ஸ்பெஷல் ரூட் என ஏசிபஸ்.எல்எஸ்எஸ் பஸ். மினி பஸ். ஆர்ட்னரி பஸ்.இரவு சர்வீஸ் பஸ் என அனைத்து விவரங்களும் இதில் எளிதில அறிந்துகொள்ளலாம்.


இந்த பக்கத்தை புக் மார்க்செய்து கொண்டால் மற்றவர்களுக்கு ரூட் பொட்டுகொடுப்பதுடன் இல்லாமல் சென்னையின் சந்துபொந்துகளையும் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.

Thursday, 4 July 2013

இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.


இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.
துபாயில் பணம் சம்பாதிக்கும் கனவை சிதறடித்த இந்த நிதாகத் சட்டம்.70000 இந்தியர்களை மூட்டை கட்டி நாடு திரும்ப  வைத்து விட்டது.இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம்இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

 எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'.
வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்நலச்சட்டம்தான் நிதாகத்.
இந்த சட்டப்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்தால் கண்டிப்பாக 10 சதவீதம் உள்நாட்டு அரபுக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

சவுதியில் 17 லட்சத்து 89 ஆயிரம் இந்தியர்கள் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
சவுதி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையை தக்கவைத்து கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும்உரியஏற்பாடுகளை செய்து கொள்ளவும் மாதம் அவகாசம் (நவம்பர் 4,2013) வரை கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு முறையான ஒர்க்பெர்மிட்விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதுடன்கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் அவசர சான்றிதழ் பெற்று சவுதி அரசு மூலம் விசா வாங்கி உடனடியாக நாடு திரும்பலாம். இந்த கெடுபிடிகளால் 75 ஆயிரம் இந்தியர்கள் அவசர சான்றிதழ் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு திரும்பும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பூகோள வரை படத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுதான் சவுதி. மாதம் கடும் குளிர், 5 மாதம் கடும் வெயில், 2மாதம் நம் நாட்டு சீதோஷ்ண நிலையையும் கொண்டுள்ளது.

நேரப்படி அந்த நாட்டுக்கும் நமக்கும் சுமார் 2 1/2 மணி நேரம்தான் வித்தியாசம். சவுதிக்கு சென்றால் சீக்கிரம்லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலைதச்சு வேலைகடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள். சவுதிக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள்.எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும் நம்மவர்கள் அங்கு சந்திப்பது பேரதிர்ச்சி.

ஒட்டகம்ஆடு மேய்த்தல்தோட்ட வேலை செய்தல்ரோடுகளை பெருக்குவதுநிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்குகிறார்கள். அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள். வெயிலில் காய்ந்தும்குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும்பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமேகுடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாககண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி உழைக்கிறார்கள்.

ஊருக்கு திரும்பினால் பாரின்ல இருந்து என்னடா வாங்கி வந்தேஎன்று உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை மொய்த்து விடுகிறார்கள்.
 
தனது சோகத்தை சொல்லி அவர்களது அன்பையும்எதிர்பார்ப்பையும் ஒரு நொடியில் தகர்க்க மனமில்லாமல்,ஸ்பிரேசோப்புதுணிமணிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து மகிழ்விக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறு சிறு ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட் வழங்கவேண்டும்.
ஆனால் மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.

20 
சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல்,சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான ஒர்க் பர்மிட் இருக்காது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூலம் சென்று அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களுக்கும்சட்டப்படி உரிய அனுமதியுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

பொதுவாக அரேபியர்கள் கடினமான வேலை செய்யமாட்டார்கள். கொத்தனார்தச்சர்முடி திருத்துதல்காய்கறி கடைகளில் வேலை பார்ப்பதுசூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைக்கு செல்கிறார்கள்.
கொத்தனார்கள் எல்லாம் காலை மணி முதல் மாலை மணி வரை 10மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்கள்.
அங்கு வேலை பார்ப்பது போல் நம் நாட்டில் வேலைபார்த்தால் போதும் பல மடங்கு சம்பாதிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் செல்கிறார்கள்.
இனிமேல் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவுதான்.
நுணுக்கமான வேலை தெரிந்தவர்கள்டாக்டர்கள்கப்பல் என்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.
சட்டப்படி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும்பிரச்சினை இல்லை.
இதையடுத்து, 90 ஆயிரம்  இந்தியர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 65 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வமாக சவுதியில் தங்கவும்கம்பெனிகளில் வேலை தேடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சவுதி அரசு விதித்துள்ள காலக்கெடு நாளையுடன் முடிவதால் தொடர்ந்து அங்கேயே அவர்கள் தங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir