சென்னையில் புதியதாக செல்லுபவர்கள் பஸ் ரூட் தெரியாமல் தவிப்பார்கள். இந்த அறிவியல் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் எங்கு வேண்டுமானலும் போகலாம். ஒரு போனும் அதற்கும் இன்டர்நெட் ம் இருந்தால் போதும்.
http://busroutes.in/chennai/
இந்த வெப் சைட் க்கு சென்று அதில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்லப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிடவும். நான் ஆவடி to வியாசர்பாடி என குறிப்பிட்டுள்ளேன்.எனக்கு வந்துள்ள படத்தினை பாருங்கள்.
இதில் எந்த ரூட் நமக்கு தேவையோ அந்த ரூட்டை கிளிக் செய்தால் பஸ் எங்கிருந்து கிளம்பி எந்த எந்த ஸ்டாப்பிங் வரை செல்லும் என்கின்ற விவரம் கிடைக்கும்.
மேலும் இதிலேயே முக்கிய இடங்களாக ஆவடி, கொளத்தூர்,கொண்டித்தோப், வியாசர்பாடி என இடங்களும்கொடுத்துள்ளார்கள்.உதாரணமாக நீங்கள் கொளத்தூர் என கிளிக் செய்தால் அந்த ஊரிலிருந்து எங்கு எங்கு பஸ்கள் செல்கின்றன என்கின்ற விவரம் பஸ் எண்ணுடன் நமக்கு கிடைக்கும்.பஸ் எண்ணை கிளிக் செய்தால் உங்களுக்கு அந்த பஸ்ஸீன் உடைய ரூட் மேப்புடன் கிடைக்கும்.மேலும் ஸ்பெஷல் ரூட் என ஏசிபஸ்.எல்எஸ்எஸ் பஸ். மினி பஸ். ஆர்ட்னரி பஸ்.இரவு சர்வீஸ் பஸ் என அனைத்து விவரங்களும் இதில் எளிதில அறிந்துகொள்ளலாம்.
இந்த பக்கத்தை புக் மார்க்செய்து கொண்டால் மற்றவர்களுக்கு ரூட் பொட்டுகொடுப்பதுடன் இல்லாமல் சென்னையின் சந்துபொந்துகளையும் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
No comments:
Post a Comment