Thursday, 4 July 2013

இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.


இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.
துபாயில் பணம் சம்பாதிக்கும் கனவை சிதறடித்த இந்த நிதாகத் சட்டம்.70000 இந்தியர்களை மூட்டை கட்டி நாடு திரும்ப  வைத்து விட்டது.இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம்இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

 எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'.
வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர்நலச்சட்டம்தான் நிதாகத்.
இந்த சட்டப்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்தால் கண்டிப்பாக 10 சதவீதம் உள்நாட்டு அரபுக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

சவுதியில் 17 லட்சத்து 89 ஆயிரம் இந்தியர்கள் வேலைபார்க்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
சவுதி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையை தக்கவைத்து கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும்உரியஏற்பாடுகளை செய்து கொள்ளவும் மாதம் அவகாசம் (நவம்பர் 4,2013) வரை கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு முறையான ஒர்க்பெர்மிட்விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதுடன்கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் அவசர சான்றிதழ் பெற்று சவுதி அரசு மூலம் விசா வாங்கி உடனடியாக நாடு திரும்பலாம். இந்த கெடுபிடிகளால் 75 ஆயிரம் இந்தியர்கள் அவசர சான்றிதழ் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு திரும்பும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பூகோள வரை படத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுதான் சவுதி. மாதம் கடும் குளிர், 5 மாதம் கடும் வெயில், 2மாதம் நம் நாட்டு சீதோஷ்ண நிலையையும் கொண்டுள்ளது.

நேரப்படி அந்த நாட்டுக்கும் நமக்கும் சுமார் 2 1/2 மணி நேரம்தான் வித்தியாசம். சவுதிக்கு சென்றால் சீக்கிரம்லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலைதச்சு வேலைகடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள். சவுதிக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள்.எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும் நம்மவர்கள் அங்கு சந்திப்பது பேரதிர்ச்சி.

ஒட்டகம்ஆடு மேய்த்தல்தோட்ட வேலை செய்தல்ரோடுகளை பெருக்குவதுநிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்குகிறார்கள். அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள். வெயிலில் காய்ந்தும்குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும்பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமேகுடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாககண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி உழைக்கிறார்கள்.

ஊருக்கு திரும்பினால் பாரின்ல இருந்து என்னடா வாங்கி வந்தேஎன்று உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை மொய்த்து விடுகிறார்கள்.
 
தனது சோகத்தை சொல்லி அவர்களது அன்பையும்எதிர்பார்ப்பையும் ஒரு நொடியில் தகர்க்க மனமில்லாமல்,ஸ்பிரேசோப்புதுணிமணிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து மகிழ்விக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறு சிறு ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட் வழங்கவேண்டும்.
ஆனால் மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.

20 
சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல்,சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான ஒர்க் பர்மிட் இருக்காது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூலம் சென்று அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களுக்கும்சட்டப்படி உரிய அனுமதியுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

பொதுவாக அரேபியர்கள் கடினமான வேலை செய்யமாட்டார்கள். கொத்தனார்தச்சர்முடி திருத்துதல்காய்கறி கடைகளில் வேலை பார்ப்பதுசூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைக்கு செல்கிறார்கள்.
கொத்தனார்கள் எல்லாம் காலை மணி முதல் மாலை மணி வரை 10மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்கள்.
அங்கு வேலை பார்ப்பது போல் நம் நாட்டில் வேலைபார்த்தால் போதும் பல மடங்கு சம்பாதிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் செல்கிறார்கள்.
இனிமேல் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவுதான்.
நுணுக்கமான வேலை தெரிந்தவர்கள்டாக்டர்கள்கப்பல் என்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.
சட்டப்படி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும்பிரச்சினை இல்லை.
இதையடுத்து, 90 ஆயிரம்  இந்தியர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 65 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வமாக சவுதியில் தங்கவும்கம்பெனிகளில் வேலை தேடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சவுதி அரசு விதித்துள்ள காலக்கெடு நாளையுடன் முடிவதால் தொடர்ந்து அங்கேயே அவர்கள் தங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir