Thursday 4 July 2013

இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மருத்துவ பணிகள் - Indo Tibetan Border Security Force medical Recruitment July 2013 Updates

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் 608 மருத்துவ காலிப் பணியிடகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எஃப் (CRPF) போன்ற பாதுகாப்பு படைகளில் சிறப்பு மருத்துவ அதிகாரிக்கான பணிகளில் டெபுட்டி கமாண்டண்ட் (Deputy Commandant)-ஆக பணியாற்ற 209 காலிப் பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரியாக பணியாற்ற 397 காலியிடங்கள் இருக்கின்றன.
டெண்டல் சர்ஜன் (Dental Surgeon) பணிகளுக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. ஆண்கள் குறைந்தது 157 புள்ளி 5 சென்டிமீட்டரும், பெண்கள் குறைந்தது 142 சென்டிமீட்டரும் உயரம் இருக்க வேண்டியது அவசியம். பார்வைத் திறன் உள்ளிட்ட உடல் தகுதி மற்றும் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையில் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:
இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையில் உள்ள மருத்துவ காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சிறப்பு மருத்துவ அதிகாரிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மருத்துவ பட்டத்துடன், தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மருத்துவ அதிகாரியாக, மருத்துவ பட்டம் பெற்றிருக்கவும். டெண்டல் சர்ஜன் (Dental Surgeon) பணிக்கு, குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பல் மருத்துவப் பட்டம் முடித்திருக்கவும். அனைத்து பணிகளுக்குமே இன்டெர்ன்ஷிப் சென்ற அனுபவம் இருக்க வேண்டும்.
உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமாவில் பெறும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களை கொண்டு 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். தேர்வு செய்யப்படுபவர்களின் மெரிட் (Merit) பட்டியலை மருத்துவ அதிகாரிகள் தேர்வு வாரியம் வெளியிடும். மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டின் கீழ் இந்த மெரிட் பட்டியல் அமையும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
இந்திய - திபெத்திய பாதுகாப்புப் படை பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் அனைவரும் குறைந்தது 10 ஆண்டுகள் பணியில் நீடித்து இருக்க வேண்டும். அனைத்து பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களும் Accounts Officer, Directorate General, ITBP, NewDelhi-03 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து அனுப்பவும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஜூலை 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, The Deputy Inspector General, Member Secretary, Medical Officers Selection Board, Directorate General, ITBP, Block-2, CGO Complex, Lodhi Road, NewDelhi - 110 003.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir