Saturday 27 July 2013

நீங்கள் உங்களுடைய காதலி (அ) மனைவியுடன் ரொமண்டிக் மூடில் பேசுபவரா... ஜாக்கிரதை !!


“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பாத்தணும்’’’ என்றபடி கண்ணீருடன் நக்கீரன் அலுவலகத்திற்கு  வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என அவர்கள் கேட்க்கும் முன்பே…
“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என்மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார்.

என்னையும் அவர் அளவுக்கு பேச வைப்பார்” ’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘
“சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே… இதில் என்ன பிரச்சினை?’’ என்றோம்..
அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிர வைத்தது.

“அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லைமீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்… இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி… எங்களுக்கே தெரியாமல்… எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி… இப்படிப் பண்ணியிருக்கான்.
இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு… அதிர்ந்துபோய்… எனக்குத்தகவல் சொன்னார். கூடவே “நக்கீரன்ட்ட உதவி கேள்’னும் சொன்னார். அதான் வந்தேன்”’என்று நம்மை அதிரவைத்தவர் அந்த இணையதள முகவரியையும் கொடுத்தார்.
அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த … அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித் தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்… அங்கே பதியப் பட்டிருந்தன.
காதுகள் கூசும் அளவிற்கு… பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… அங்கே தோரணம் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன.
உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன் மத உலகமா? என திகைத்துப்போன நாம்…
நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.
பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ… ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு…
“இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.
முதல்வகை, நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட் கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும்.  இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா… யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ண முடியும்.

பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க… நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும்.
நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசு வாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.
மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், “உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்’னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்’என்றார் விரிவாக.
பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார்.

“”பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந் தப்ப… “எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்’னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப் படத்தைப் பார்த்தே… கிளுகிளு உரையாடலுக் கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத்திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே “என் பேரு நந்தினி.
மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும் னு ஆசையா இருக்கு’ என்றவள்…. தன் உடல் பாகங்களை வர்ணித்து … அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்து விட்டது.
காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050  ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்தபோ து இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம்புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்கா ங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி… பணத் தை அந்த ஆபாசக் கும்பலிடம் பறி கொடுத்துக்கிட்டு இருக்காங்களோ”’ என்றார் எரிச்சலாக.
வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் “”சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங்செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன்மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா… அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம்.

சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதே போல்… இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்… அக் கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ண முடியும்.
இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க் கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்” என்றார் கவலையாக.
சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது’”மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அதவச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம்.
இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம் பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சி னைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண் காணிக்கிறோம்”’ என்றார் உறுதியான குரலில்.
மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்…. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

மேலும் பல பேர் வெளிநாடுகளிருந்து வெஸ்டேர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்பும் பொது அதனுடைய கோடு நம்பர்களை போன் மூலமாக தான் தெரிவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே sms மூலமாக தெரிவிப்பது தான்  சிறந்தது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir