Wednesday 25 June 2014

E.B சம்பந்தபட்ட அனைத்துப் பணிகளையும் இனி நீங்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக கையாளலாம்



முன்பெல்லாம் E.B ஆபீஸில் நம்முடைய வேலையை முடிக்க பல நாள் லீவு போட்டு அலைய வேண்டிவரும். புது இணைப்பு வாங்க, பெயர் மாற்ற, இணைப்பை துண்டிக்க, தவறுதலாக அதிக பில் கட்டணம் வருதல் இது போன்ற இன்ன பிற பிரச்சனைகள். இதெல்லாம் ஒரே நாளில் முடிய கூடிய காரியமும் இல்லே. இதற்காக நம்முடைய சோலி எல்லாம் விட்டுட்டு அலைய வேண்டி வரும். லஞ்சமும்  கொடுக்க வேண்டும் ஆனா வேலை மட்டும் சீக்கிரமா முடியவே ..முடியாது. அப்ப என்ன தான் பண்ணலாம்?

கவலையை விடுங்க.

நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு புது கணக்கை (user account) உருவாக்குங்க.
அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிங்க.

புதிய கணக்கு உருவாக்க:

கீழேயுள்ள லிங்க் ஐ சொடக்கவும்

இணைய தளம் செல்ல இங்கே சொடக்கவும்  

அதில் New User என்பதை கிளிக் செய்யவும்,
Region= உங்களது மாவட்டத்தை செலக்ட் செய்யவும், பின்னர் உங்களது EB எண்ணை கொடுக்கவும் உதாரணமாக 060 012 550 இது மாதிரி இருக்கும். இப்பொழுது உங்களது பெயர் மற்றும் முகவரி வரும். இதனை சரிபார்த்து நம்முடைய தான என உறுதி செய்த பின்னர் Confirm எனும் பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் இனி உங்களது பெயர், முகவரி, மின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அதில் கேட்க்கபட்டுள்ள அனைத்து தகவல்கள் கொடுத்து பின்னர் submit செய்யவும். 

இனி உங்களது மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு மின் அஞ்சல் வரும் அதனுடன் இருக்கும் லிங்க் ஐ கிளிக் செய்த வுடன் உங்களது புதிய கணக்கு உயிர் பெற்று விடும். இனி நீங்கள்  தமிழ்நாடு மின்சார வாரியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் இனி எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் கையாலாம்.
இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருப்பதால் அனைவரும் எளிமையாக கையாளலாம். 




இந்த இணைய தளத்தின் வழியாக என்ன என்ன பயன்?

1) துரிதமாக கட்டணம்: ஆன்லைன் மூலம் எளிதாக பணம் செலுத்தலாம்.

2) கட்டணம் விபரம்: யூனிட் வாரியாக கட்டண விபரம் அறியலாம்.

3) ரசிது பெட்டகம்: மின் கட்டணத்திற்கான ரசிதை  பிரின்ட் எடுக்கலாம்.

4) கணக்கு விபரம்: (இதில் நம்முடைய முழு முகவரி, மாதந்திர மின் கட்டணம் செலுத்திய விபரம், இதர கட்டணம் செலுத்திய விபரம் மற்றும் நிலுவையிலுள்ள கட்டண விபரங்கள், முன் பணம் செலுத்தி இருந்தால் அதன் விபரம் ஆகியவற்றை இங்கு முழு விபரமுடன் காணலாம்.

5) காப்புத்தொகை: உங்களது கணக்கிலுள்ள வைப்புத்தொகை மற்றும் வருடாந்திர வட்டி விகிதம் ஆகியவற்றை காணலாம்.

6) பில் விபரம்: இதில் எவ்வளவு யூனிட், எவ்வளவு பணம் அதன் விபரம்

7) எண் சேர்த்தல்: இங்கு நம்முடைய வீட்டு EB எண் மட்டுமில்லாமல் நம்முடைய உறவினர் வீட்டு எண்ணையும் சேர்க்கலாம், அதற்க்கான மின் கட்டணமும் செலுத்தலாம்.

8) எண் நீக்க: நாம் இணையத்தில் இணைத்த எண்ணை நீக்கவும் செய்யலாம்.

9) கடவு சொல் மாற்ற: நாம் கொடுத்த கடவு சொல்லை (password) மாற்றலாம்.

10) முகப்பு மாற்ற: இங்கு தங்களது இணையத்தில் பதிந்த சுய விபரத்தை மாற்றி கொள்ளலாம்.

11) உதவி மையம்: நம்முடைய சில சந்தேகளுக்கு இங்கு பதில் கிடைக்கும்.

12) பொது புகார்: நம்முடைய புகார் எதுவா இருந்தாலும் இங்கே ஆன்லைன் மூலம் தெரிவித்து அதற்க்கான தீர்வும் காணாலாம்.

13) புகார் நிலை: நம்முடைய புகார் எந்த நிலைமையில் உள்ளது எனவும் அறியலாம்.

அவ்வளவு தான் இனி  E.B சம்பந்தபட்ட வேலைகளை வீட்டில்/ ஆபீஸில் இருந்து கொண்டே முடிங்க.. நேரத்தை மிச்சப்படுத்துங்க.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் கேளுங்க....
பிடிச்சா சேர் பண்ணுங்க....



62 comments:

  1. மின் கட்டணம் செலுத்திவிட்டேன். இரசீது கிடைக்கவில்லை

    ReplyDelete
  2. " e-receipt archeive " என்பதை கிளிக் செய்து, உங்கள் E.B எண்ணை கொடுக்கவும்.இப்பொழுது பிரிண்ட் என வரும்

    ReplyDelete
  3. ஒரே id யில் எத்தனை பில் கட்டலாம்?
    வியாபார பிரிக்கும் இதே முறையா?தயவு செய்து சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஐடியில் எத்தனை பில் வேண்டுமென்றாலும் கட்டலாம்ஆம், அனைவருக்கும் இதே முறை தான்.

      Delete
  4. நல்ல பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது.தெளிவாக பதிவு செய்ததற்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. இ.பி. பெயர் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. எனக்கும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  7. இணையம் வழி புதிய இணைப்பை பெற என்ன ஆவனம் தேவை

    ReplyDelete
  8. மின்வாரியத்தில் பொது மக்கள் புதிய மின் இணைப்பு பெறும் போது தங்கள் கட்டத்துக்கு மேல் ( HT மற்றும் LT LINE ) மின் பாதை சென்றால் இணைப்பு வழங்க கட்டத்துக்கும் பாதைக்கும் எத்தனை அடி இடை வழி இருக்க வேண்டும் என்பதை தெரிந்த மின்வாரிய நண்பர்கள் இங்கு பதிவு செய்யவும்

    ReplyDelete
  9. என் வீட்டின் மேல் என்னுடைய அனுமதி இல்லாமல் சர்விஸ் கேபிளை மற்றொருவர் எடுத்துள்ளனர். அதை இடம் மாற்றி என் வீட்டின் ஓரமாக எடுக்க சொல்லி புகார் செய்ய என்ன செய்யவேண்டும் அய்யா.

    ReplyDelete
  10. அய்யா நான் ஒரு அரசு ஊழியர் வீடுகட்ட அரசு வழங்கும் கடன் பெற்று வீடு கட்டி கொண்டிருக்கின்றேன் .....இந்த நிலையில் வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தேன்....இது வரை எனக்கு மின் இணைப்பு தரவில்லை ....எனக்கு அப்ப்ளிக்ஷன் நம்பர் தெரியாது ....இடத்தில உள்ள பபிரச்சனைகள் குறித்து இது நாள் வரை ஏடீ வந்து பார்கவில்லை இது சம்மந்தமாக யாரிடம் புகார் சொல்வது என்று தெரியவில்லை ....தயவு செய்து எனக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து உதவுமாறு கேட்டுகொள்கிறென் எனது தொலைபேசி எண் 8300056405...உதவும் நோக்கத்தில் இருப்பவர்கள் மிஸ்டு கால் கொடுங்க சார் ....இந்த விஷயத்தில ரெம்ப கடந்த 2 மாசமா ரெம்ப கஷ்டப்படுறேன் ப்லிஸ்

    ReplyDelete
  11. Hi,
    How did you use Tamil Language? please do let me know. Tneb Online Payment

    ReplyDelete
  12. postக்கும் meterboxக்கு இடைவெளி எங்வளவு இருக்க வேண்டும்

    ReplyDelete
  13. ஆதி திராவிடர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கோயில்களின் புனரமைப்பு பணிகளுக்கு என்றே இந்து அறநிலைய துறையால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புனரமைப்புக்குரிய இடத்தில் கோயில் புனரமைக்கப்படும் போது அதற்கு மின் இணைப்பு பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது மின் இணைப்பு பெற உரிய ஆவணங்கள் கேட்கப்படும் நிலையில், வழிபாட்டுக்குரிய இடம் பல தலைமுறைகளாக வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது என்றும், சம்பந்தப்பட்ட இடம் கிராம கணக்கில் கோவிலுக்கென்று ஒதுக்கப்பட்ட இடம் என்பதால், கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்புதல் பெற்று மின்வாரியத்தை நாடியபோது, இதனை ஏற்க முடியாது என்றும், உரிய வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் மனு செய்தபோது, மனுவை ஏற்றுக்கொண்டு தகவல் அறியும் பொருட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய அனுமதி கிடைத்தால் மின் இணைப்பு கிடைக்குமா?



    ReplyDelete
  14. ஸலாம்

    என் வீட்டின் மேல் பகுதியில் என் மகள் குடும்பம் வசித்து கொண்டு இருக்கிறது
    தனியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்
    வீட்டு ரஷீது மற்றும் வீட்டு பத்திரம் அனைத்தும் என் மனைவி பெயரில் உள்ளது
    கொஞ்சம் விபரமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  15. ஒரு கடன் பெறுவது பற்றி நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க அவசர கடனுதவி தேவைப்படுகிறதா? நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? இது உங்கள் விருப்பத்தை அடைவதற்கு உங்களுக்கு வாய்ப்பு, நாங்கள் தனிப்பட்ட கடன்கள், வணிக கடன்கள் மற்றும் கார்ப்பரேட் கடன்கள் மற்றும் அனைத்து வகையான கடனுதவிகளும் 2% வட்டிக்கு மின்னஞ்சல் மூலமாக (michealthiago5@gmail.com) தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  16. How to convert from single phase connection to 3 phase connection.

    ReplyDelete
  17. Sab meter patriya vivaram vendom

    ReplyDelete
  18. புதிய மின் இணைப்பு பெற தேவையான ஆவனங்கள் யாவை என்பதை அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் அறிவிப்பு இருக்க வேண்டும். தேவை இல்லாமல் பொது மக்களை அழைய விடுவதை தவறுங்கள்.

    ReplyDelete
  19. இதன்மூலம் புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி

    ReplyDelete
  20. தற்போழுது TNEB கோபி பகிர்மானம்,பு.புளியம்பட்டி பகுதிகளில், கடைகள், திருமண மண்டபங்களில் விசேச நிகழ்சிகளுக்கு அலங்கார விளக்கு, சிரியல் செட் பயன்படுத்த வேண்டுமானால் தற்காலிக இணைப்பு வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் நோட்டிசு விநியோகம் செய்யப்படுகிறது, திருமண மண்டபத்தில் விளக்குகளை பயன்படுத்தினால் அபராதம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது, இந்த சட்டம் உண்மையா?

    ReplyDelete
  21. நான் நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய மின் இணைப்பு என்னை நீங்கள் சொல்வது போல் TNEB யுடன் பதிவு செய்து உள்ளேன்.ஆனால் எனன்னுடைய bill status, account summery எதுவும் பார்க்க முடிவதில்லை. திட்டமிட்டு எனது என்னை block செய்து வைத்துள்ளார்கள். முடிந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.034370050652.சரி செய்ய வழி சொல்லுங்கள்.mobil no

    9043744036 நன்றி.

    ReplyDelete
  22. அய்யா நான்புதிதாக வீடு கட்டுகிறேன்.வீட்டின் மேல் பகுதியில் மின் லயன் செல்கிறது என்ன செய்யவேண்டும் வழிசசொல்லுங்கள்ப்ளஸ்

    ReplyDelete
  23. நான் வீடு கட்டும் மேல் பபகுதியில் மின் லைன் செல்கிறதுயாரிடம் அப்ளை செய்ய வேண்டும் 9842903404

    ReplyDelete
    Replies
    1. மின் நிலையத்திற்கு சென்று முறையிட்டு மின் போஸ்ட்டை தள்ளி வைக்க சொல்லலாம். அல்லது மின் கம்பியை உயர்த்த சொல்லலாம். (உங்கள் வீடு அந்த இடத்தில் தனியாக இருந்தால் அதற்கான செலவை நீங்கள் ஏற்க வேண்டி வரும்.)

      Delete
  24. ஐயா வணக்கம்,

    புதிய சர்வீஸ் "கம்பம் அமைக்க" பணியாளர்க்கு amound தரனுமா

    ReplyDelete
  25. அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி மின் இணைப்பு பெற முடியுமா,அதற்கு எந்த ஆவணம் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா நான் ஒரு கடையை ஒத்திக்கு எடுத்து டீகடை நடத்தி வருகிறேன் கடைசியாக நான் 315 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியிருந்தேன் அதற்கு அடுத்த ரீடிங் எடுக்கும் போது மீட்டர் ரிப்பேர் என்று சென்று விட்டார் சில நாட்கள் கழித்து புது மீட்டர் பொருத்தி விட்டு சென்றனர். இப்போது வந்து 3900ம் ரூபாய் கரண்ட் பில் கட்டு என்று வருகிறார்கள் .நான் இதுவரை அதிக பட்சமாக 1500+ கரண்ட் பில் கட்டியிருக்கிறேன்

    ReplyDelete
  27. அரசு புறம்போக்கு நலத்தில் மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது இருந்தால் போதுமா? அல்லது மேலும் ஆவனங்கள் வோண்டுமா தகவல் தெரிவிக்கவும்

    ReplyDelete
  28. அரசு புறம்போக்கு நலத்தில் மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது இருந்தால் போதுமா? அல்லது மேலும் ஆவனங்கள் வோண்டுமா தகவல் தெரிவிக்கவும்

    ReplyDelete
  29. Eb meter display work பண்ணலன்னு EB Office ல 3300 எங்களை கட்ட சொல்கிறார்கள் நாங்கள் வாடகைக்கு வந்து 2மாதங்கள் ஆகிறது கடைசி பில் 530 இப்போது என்ன செய்வது

    ReplyDelete
  30. நத்தம்புறம்போக்குஇடத்தில் உள்ள குடிசைவீட்டிற்கு மின்இணைப்பு கிடைக்கமா

    ReplyDelete
  31. Three phase connection vanga evalvu amount kattanum total evalvu agum

    ReplyDelete
  32. Sir ennui message venue sir ganaman email admit card

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir