Tuesday 31 December 2013

TNPSC GROUP I தேர்வு அறிவிப்பு



தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் - குருப் 1 க்கான தேர்வு விபரம் மற்றும் தரவிறக்கம்.


  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2014

        ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

  • விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.01.2014 வங்கி அல்லது தபால் துறை மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும்.                                                   
  • விண்ணப்பகட்டணம்:                                                                                               முதல் நிலை தேர்வு: ரூ 125/- முதன்மை(main exam) எழுத்து தேர்வு: ரூ 125/-
  • தேர்வுக்கான தேதி: 26.04.2014 10 a.m to 1.00 p.m
  • வயது வரம்பு: 21 முதல் 30 வரை


கீழ்க்கண்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது
1. DEPUTY COLLECTOR - Tamil Nadu Civil Service -3 posts
2. DEPUTY SUPERINTENDENT OF POLICE -Tamil Nadu Police Service - 33 posts
3.ASSISTANT COMMISSIONER -Tamil Nadu Commercial Tax Service - 33 posts
4. ASSISTANT DIRECTOR OF RURAL DEVELOPMENT DEPARTMENT - Panchayat - 10 posts

அனைத்து பதவிகளுக்கான சம்பள விகிதம்:ரூ 15,600 - 39,100/-

இத்தேர்வு பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட இணைப்பை கிளில் செய்து தரவிறக்கம் செய்து படிக்கவும்.
http://www.tnpsc.gov.in/notifications/17_2013_not_eng_grp1_2013.pdf

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை சொடக்கவும்
http://tnpscexams.net/



Friday 27 December 2013

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியத் திட்டம்!!



வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் "மகாத்மா காந்தி பிரவாசி சுரக்க்ஷா யோஜனா" MGPSY (Mahatma Gandhi Paravasi Suraksha Yojana)  எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டம் வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தால் (MOIA) வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான, தன்னார்வத்திட்டமாகும்.

இந்தியாவுக்குத் திரும்பி வரும்போதான குடியேற்றத்துக்கெனவும், அதோடு வயதான காலத்திற்கான சேமிப்புக்காகவும், வெளிநாடுகளில் பணி புரிகையில் அவ்வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்துக் கொள்ள இத்திட்டம் உதவி செய்யும். மேலும் MOIA ஆனது ஒரு ஆயுள் காப்புறுதித் திட்டத்தையும் அனைத்து MGPSY சந்தாதாரர்களுக்கும் வழங்கும்.

இத்திட்டத்தில் இணைத்து கொள்ள ஆர்வமுள்ள, தகுதியுள்ள பணியாளர்கள் தங்கள் விண்ணப் படிவங்களையும், அடையாள ஆதரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

இத்திட்டத்தில் சேர தகுதிகள்:

1) ECR Passport மற்றும் ECR நாடொன்றில் செல்லுபடியாகும் ஒரு பணி அனுமதி அல்லது வேலை ஒப்பந்தம்.

2) வயது 18  முதல் 50 வரை.

3) சொந்தப்பெயரில் வங்கிக்கணக்கு.


பயன்கள்:

இத்திட்டத்தில் இணைகின்ற தகுதியுடைய வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 3 முக்கியமான பயன்களைப் பெறுவார்கள்.
1) NPS -லைட் இடமிருந்து ஓய்வுதிய பயன்.

2) UTI AMC இடமிருந்து மறுகுடியேரும் (R&R) சேமிப்புகள்.

3) LIC இடமிருந்து இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம்.

சந்தா மற்றும் அரசு பங்களிப்பு விபரம்:

ஆண்டொன்றுக்கு ஆண்/பெண் சந்தாதாரர் ஒருவருக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை: ரூபாய் ரூ 5,000/-

ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 1,000 + 900
(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 2,000 + 900)

ஆக மொத்தம், ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 1,9௦௦ =6,900 ஆகும்.

(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 2,9௦௦ = 7,900 ஆகும்.

MOIA இன் பங்களிப்பு 5 ஆண்டுகளுக்கு அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்த காலம் இதில் எது குறைவோ அந்த காலத்துக்கு வழங்கப்படும்.

முதிர்ச்சி தொகை வழங்கும் முறை:
இரண்டு முறையில் பணம் திரும்ப வழங்கப்படும்

1) On return முறை: இம்முறையில், வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்பிய பின்னர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

2) On Retirement முறை: இம்முறையில் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு பணம் திரும்ப அளிக்கப்பட்டு , மீதிப்பணம் ஓய்வூதிய அடிப்படையில் மாத மாதம் வழங்கப்படும்.


எனவே வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களே உடனே  " The ministry Of Overseas Indian Affairs" தொடர்புகொண்டு இத்திட்டத்தில் சேர முயற்சி செய்யுங்கள். இது உங்களது பிற் காலத்திற்கு உதவும்.

துபாய் நண்பர்கள் இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற அல்லது இந்த திட்டத்தில் இணைய கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். (ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழேயுள் ள கமெண்ட் பாக்ஸ் ல் என்னிடம் கேட்கலாம்)

துபாய் முகவரி:
பாங்க ஆப்ப் பரோடா கிளை, இந்திய தொழிலாளர் வள மையம்
UAE அலுவலகம் 3 PM - 7PM (வேலை நாட்களில்)
இலவச தொலைபேசி அழைப்பு எண்: 1800 113 090 (இந்தியா) அல்லது 80046342 (UAE)

மின் அஞ்சல் முகவரி: inf.mgpsy@moia.nic.in அல்லது help@iwrc-uae.com













Tuesday 10 December 2013

விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?



விக்கல். இது எப்ப வரும்,எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.. ஆனா...வரவேண்டிய நேரத்தில தானா வரும். வந்த பின்னர் அத தடுக்க முடியாது.

விக்கல் என்பது "டயாப்ரம்" என்ற மெல்லிய தசை நம்ம மார்பகத்துல இருக்கிறது. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த தசை சுருங்கி விரிகிறது. அதாவது நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது சுருங்கி, சுவாசத்தை வெளியிடும் போது விரிகிறது...

சரி, இப்ப மேட்டருக்கு வருவோம்.

விக்கல் என்பது "டயாப்ரம்" எனும் தசை தோலின்   "சுருங்குதலே" ஆகும்

 "டயாப்ரம்" சுருங்குவதற்கு "ப்ரெனிக் நெர்வ்ஸ்" எனும் ஒரு வகை நரம்புகள் . இந்த நரம்புகளில் திடிரென ஏற்படும் ஒரு வித எரிச்சல் காரணமாக  "டயாப்ரம் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நம் நுரையீரலிற்கு செல்லும், இதனை சாமாளிக்க "எபிக்லாட்டிஸ்" எனும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம் அதனால் ஏற்படும் விக் விக் என்ற சப்த்தம் தான் விக்கல் என்கிறோம்.

விக்கல் திடிரென தன்னிச்சையாக ஏற்படும் ஒரு நிகழ்வு தானாம். இது நம்முடைய உடம்பிற்கு அவசியம் இல்லாத.... சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஒரு ஆய்வு.

கிராமங்களில் விக்கல் வந்தால் தண்ணிய குடி என சொல்லுவார்கள், தண்ணிரை குடிக்கும் போது தடங்கள் ஏற்பட்டு ப்ரெனிக் நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால் வந்த விக்கல் நின்று விடும்.

சில பேர் விக்கல் வரும் போது சர்க்கரையை (சீனி) சாப்பிடு என்பர்.. இது ஏன் அப்படின்னு ஆராய்ந்து பார்த்தா...
நாக்கில் திடிரென விழும் இனிப்புச்சுவையால் நரம்புகள் தூண்டப்பட்டு விக்கல் நிற்க உதவுகிறது.

Monday 9 December 2013

கணினியில் சில குறியீடுகளை எளிதாக உருவாக்க



Alt + 0153  => ™
Alt + 0169 => ©
Alt + 0174  => ®
Alt + 0176 => °
Alt + 0177   => ±
Alt + 0182   => ¶
Alt + 0190 => ¾
Alt + 0215 => ×
Alt + 0162 => ¢
Alt + 0161 => ¡
Alt + 0191 => ¿
Alt + 1 => ☺
Alt + 2 => ☻
Alt + 15 => ☼
Alt + 12 =>♀
Alt + 11 => ♂
Alt + 6 => ♠
Alt + 5 => ♣
Alt + 4 => ♦
Alt +3 => ♥
Alt + 13 =>♪
Alt + 14 => ♫
Alt + 8721 => ¶
Alt + 251 => √
Alt + 8236 => ,
Alt + 24 => ↑
Alt + 25 => ↓
Alt + 26 => →
Alt +27 => ←
Alt +18 => ↕
Alt + 29 => ↔





 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir