Tuesday 10 December 2013

விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?



விக்கல். இது எப்ப வரும்,எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.. ஆனா...வரவேண்டிய நேரத்தில தானா வரும். வந்த பின்னர் அத தடுக்க முடியாது.

விக்கல் என்பது "டயாப்ரம்" என்ற மெல்லிய தசை நம்ம மார்பகத்துல இருக்கிறது. நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் அந்த தசை சுருங்கி விரிகிறது. அதாவது நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது சுருங்கி, சுவாசத்தை வெளியிடும் போது விரிகிறது...

சரி, இப்ப மேட்டருக்கு வருவோம்.

விக்கல் என்பது "டயாப்ரம்" எனும் தசை தோலின்   "சுருங்குதலே" ஆகும்

 "டயாப்ரம்" சுருங்குவதற்கு "ப்ரெனிக் நெர்வ்ஸ்" எனும் ஒரு வகை நரம்புகள் . இந்த நரம்புகளில் திடிரென ஏற்படும் ஒரு வித எரிச்சல் காரணமாக  "டயாப்ரம் வேகமாக சுருங்கும் போது அதிகப்படியான காற்று நம் நுரையீரலிற்கு செல்லும், இதனை சாமாளிக்க "எபிக்லாட்டிஸ்" எனும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம் அதனால் ஏற்படும் விக் விக் என்ற சப்த்தம் தான் விக்கல் என்கிறோம்.

விக்கல் திடிரென தன்னிச்சையாக ஏற்படும் ஒரு நிகழ்வு தானாம். இது நம்முடைய உடம்பிற்கு அவசியம் இல்லாத.... சிரமத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்கிறது ஒரு ஆய்வு.

கிராமங்களில் விக்கல் வந்தால் தண்ணிய குடி என சொல்லுவார்கள், தண்ணிரை குடிக்கும் போது தடங்கள் ஏற்பட்டு ப்ரெனிக் நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்புவதால் வந்த விக்கல் நின்று விடும்.

சில பேர் விக்கல் வரும் போது சர்க்கரையை (சீனி) சாப்பிடு என்பர்.. இது ஏன் அப்படின்னு ஆராய்ந்து பார்த்தா...
நாக்கில் திடிரென விழும் இனிப்புச்சுவையால் நரம்புகள் தூண்டப்பட்டு விக்கல் நிற்க உதவுகிறது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir