Friday 11 October 2013

பாம்புக்கு காது உண்டா?


ஒருவருக்கு காது நன்றாக கேட்டால் அவனுக்கு "பாம்பு காது" என்று கூறுகிறோம். தமிழில் "இடியேறு நாகம் போல..." என்ற மரபு சொல்லை பயன்படுத்துகின்றோம். பாம்பாட்டியின் மகுடி இசையைக்கேட்டு பாம்பு ஆடுகிறது, அவ்வாறாயின் பாம்புக்கு  காது உண்டு தானே.. அதான் இல்லை.

தமிழ் இலக்கியங்களில் "கட்செவி" என்று பாம்புக்கு கூறப்படுகிறது. பாம்பின் கண்ணே செவியாக பயன்படுகிறது என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது அறிவியலாரின் ஆராய்ச்சிகளின்படி நீர் அலைகளுக்கு ஏற்ப ஒரு கப்பல் எப்படி அசைகின்றதோ அது போன்று தரையில் இடம்பெறும் சிறு நிகழ்வுகளும் அதிர்வலைகளாக பாம்பின் தாடையால் உணரப்படுகிறது. அது உட்செவிக்கு அனுப்பபட்டு அதன் மூலம் மூளையை சென்றடைகிறதாம் ஆகையால் அவை மண்ணுக்குள் புதைந்து கொள்ளும்போதும்  துல்லியமான ஒலி அலைகளை அவற்றால் உணரமுடியும்.

அப்படியென்றால் மகுடி இசையை கேட்க்கும் திறன் இன்றிய பாம்புகள் ஒரு தற்காப்புக்காகவே அவ்வாறு ஆடுகின்றன.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir