Monday, 21 October 2013

சொந்த பந்தத்தில் திருமணம் செய்யலாமா?


பொதுவாக பெரும்பாலோர் தன்னுடைய பிள்ளைகளை  சொந்த உறவினர்களுக்கே திருமணம் செய்து வைக்கவே விரும்புவர். ஏனெனில் அதுவே ஒரு பாதுகாப்பு என நம்புகின்றனர்.

இது ஒரு விதத்தில் நன்மை என்றாலும் பெரும்பாலோருக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதில் பார்வை குறைவு, இரத்த கசிவு பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது உடலில் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும். உடம்பில் எங்காவது அடிப்பட்டால் இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்க நமது உடம்பில் உள்ள இரத்தம் உறையும் தன்மையை அடையும். இது  இரத்த கசிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தம் உறையும் தன்மை இருக்காது, இதனால் அவர்களுக்கு இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும்.

இந்நோய் மரபு ரீதியானது இது ஆண்களையே அதிகம் பாதிக்கிறது, இந்நோய் உள்ளவர்களுக்கு பல் ஈருக்களுக்கிடையே இரத்த கசிவு ஏற்படும், சிறு காயம் ஏற்ப்பட்டாலும் பெருமளவு  இரத்தம் வெளியேறும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

அடுத்து சொந்தத்தில் திருமணம் செய்வதால் இருவருக்கும் ரத்த அணுக்களில் அதிக வேறுபாடு இருக்காது இதனால் பார்வை கோளாறு ஏற்படும். எனக்கு தெரிந்த ஒருவர் அவரது தாய் மாமா பொண்ணை தான் திருமணம் செய்தார். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன அவற்றில் இரண்டு பேருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. அதாவது கிட்டப்பார்வை நோய். அருகில் உள்ள பொருள்  அவ்வளவு எளிதாக தெரியாது. அதுவும் மாலை நேரத்தில் பார்வை கோளாறு அதிகாமாக இருக்கும். இது நான் நேரில் பார்த்த நிகழ்ச்சி.

எனவே சொந்த பந்தத்தில் திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டால் அவர்களுடைய எதிர்கால  சந்ததிகள் எந்தவித குறையும் இல்லாமல் சந்தோசமாக இருக்கும். 

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir