புனிதஹஜ்ஜை முன்னிட்டு ஜித்தாவிலிருந்து மக்காவிற்கு திருட்டுத்தனமாக நுழைவதை தடுக்க, அனைத்து புறவழி தடங்களிலும் அதிக அளவில் போலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜித்தா தலைமை போலிஸ் அதிகாரி Maj.Gen.Abdullah Al Qahtani கூறினார்.
மேலும் ஜித்தாவிலிருந்து 55 ற்கும் மேற்பட்ட பாலைவன தடங்கள் உள்ளன இதில் அல் ரேஹைலி, அபூ ஜலா மற்றும் அல் கும்ரா சாலைகளும் அடங்கும்.
இவ்வகையான அனைத்து தடங்களிலும் போலிஸ் உசார்படுத்துவதோடு திருட்டுத்தனமாக ஆட்களை ஏற்றிவரும் வாகனக்களை பறிமுதல் செய்யவும், அந்த உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஜித்தாவிலிருந்து தான் அதிக அளவில் இத்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன அதாவது அல் காக்கியா,சுஹைபா ரோடு, அல் ஜம்ஜும், ஹுதா-அல்-ஷாம் போன்ற வழித்தடங்களில் அதிக அளவிலான அதிரடி படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த வருடம் சவூதியில் வசிக்கும் நபர்கள் ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் முறையான ஹஜ்ஜ் அனுமதி (ஹஜ்ஜ் பேப்பர்) பெற்று செல்லவும். அனுமதி இல்லாமல் செல்பவர்களுக்கு ஒருவருட சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் செய்யப்படும்.
இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மக்காவிற்கு நுழையமுற்ப்பட்ட 15000 ஹாஜிகள் தடுத்து திருப்பி அனுப்பபட்டனர். அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 55 நபர்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் 12200 கார்கள் திருப்பி அனுப்பபட்டது.
No comments:
Post a Comment