மக்காவில் ஹஜ்ஜ் புனித யாத்திரை இன்று மீனா வில் இருந்து தொடங்குகிறது. நாளை அராபா தினம் ஆகும்.
சட்டத்திற்கு விரோதமாக அதாவது அரசு அனுமதி இல்லாமல் யாரும் ஹஜ்ஜ் செய்ய முற்படுபட வேண்டாம் என சவூதி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனெனில் மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடைபெறுவதால் அதிக அளவிலான ஹாஜிகள் கூடும் போது இடையூறு ஏற்படும் என கருதுகின்றனர்.
இதுவரை சட்டத்திற்கு விரோதமாக மக்காவிற்குள் நுழைய முற்பட்ட 1,106 ஹாஜிகளை சிறப்பு பாதுகாப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் 593 வாகன ஓட்டுனர்களையும், 2,296 அடையாளம் தெரியாத நபர்கள் அதாவது எந்தவித சான்றும் இல்லாதவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய்ப்f நகரிலிருந்து மலைக்குன்று வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்ற ஒரு நபர் காரில் சென்று கொண்டிருக்கும் போது மலை உச்சியிலிருந்து அவரது கார் கவிழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.
போலிஸ் அதிகாரிகள் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சட்டத்திற்கு விரோதமாக நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜித்தா போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
குவைத் நாட்டை சார்ந்த ஒரு நபர் குர்பானிக்கான கூப்பன்களை விற்று வந்ததை அறிந்த போலிஸ் அவரை உடனே கைது செய்து அவரிடமிருந்த 65,000 சவூதி ரியாலை கைப்பற்றினர்.
மேலும் மக்கா நகருக்குள் யாரேனும் அல்லது எந்த கம்பனி நபர்களும் உணவு பொட்டலங்கள் கொடுத்தால அதனை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் அப்படி சாப்பிட முற்ப்பட்டால் அந்த உணவு காலாவதி தேதியை பார்த்து சோதனை செய்து பின்னர் சாப்பிடவும், சந்தேகம் படும்படி இருக்கும் நபர்களிடமிருந்து எதுவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment