Tuesday 29 October 2013

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறிங்களா? உங்கள் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு!



தமிழத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு அனைவரும் தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டாட விரும்புவர். பெரும்பகுதியினர் சென்னையில் தான் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவ்வகையான பண்டிகைகளுக்கு செல்லும் போது திருடர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். பட்டப்பகலிலே தைரியமாக கொள்ளை அடிக்க கூட்டம் இருக்கும் போது வீட்டில் யாரும் இல்லை என அறிந்தால் கேட்கவா வேணும்.

இதனை தடுக்கவே மாநகர போலிஸ் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது

வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்குச் சென்று தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக மாநகர காவல் துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட பூட்டியிருக்கும் வீடுகளை அந்தந்த பகுதி போலீஸார் இரவும் பகலும் கண்காணிப்பர்.
  வீட்டை பூட்டிச்செல்லும் போது தங்களது பயண விபரங்களையும்,அதாவது புறப்படும் நாள்,திரும்ப வரும் நாள் போன்ற விபரங்களை வீட்டில் மதிப்பு மிக்க பொருள் உள்ளதா என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

நேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இதற்காக எஸ்.எம்.எஸ் பதிவேடு ஒன்று பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.. எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.

இந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும்  உடனுக்குடன் சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் மாநகர போலீஸ்  கமிஷனர் அலுவலத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் களை  அந்தந்த காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு மஞ்சள் நிற பைக்கில் வரும் போலீஸார் அந்த வீடுகளை பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீஸார்  இரவிலும் பாதுகாப்பில் ஈடுபடுவர்கள். சம்பந்தபட்ட வீட்டில் பணிபுரியும் தொழிலாளிகள், பால் காரர்கள், காய்கறிகாரர் மற்றும் பேப்பர் காரர்கள் கண்காணிக்கப்படுவர்.

வீடு பூட்டியிருக்கு என்ற தகவலை 9840700100 என்ற எண்ணுக்கு கீழ்க்கண்ட முறையுள் தகவல் அனுப்பவேண்டும்.

Locked House Door No.
Locality:
From date:

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir