Friday, 28 June 2013

மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம்



நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டதிலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர்.அவர்களுக்காக.ஆன்லைனில் புகார் அளிக்கும் முறை:

இதற்கு முதலில் http://www.tn.gov.in/services/GDP/index.asp என்ற தளத்திற்கு செல்லுங்கள்.ஒருவிண்டோ வரும்.அதில் வலது பக்க சைடு பாரில் Select என்ற சிறிய கட்டம் இருக்கும்.அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்பொழுது உருவாக்கபட்டுள்ளது.மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

உங்கள் மாவட்டதிற்கு தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.அந்த விண்டோவில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியாரை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும்.அதை குறித்துக் கொண்டும் இமெயில் அனுப்பலாம்.அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம்.

இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண் கொடுப்பார்கள்.அதை குறித்துக் கொண்டு கோரிக்கை நிலவரம் என்ற பகுதியில் இந்த எண்ணை கொடுத்து சோதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உங்களின் அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாவிட்டால்,அந்த கோரிக்கை எண் வைத்து நீதி மன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம்.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir