Friday, 7 June 2013

அமெரிக்காவில் தமிழன் ஓட்டிய கார் :

ஒரு தமிழன் அமெரிக்காவின் ஒரு பிரபல வீதியில் காரை ஓட்டி சென்றுகொண்டிருந்தான் .... அப்பொழுது அவன் தனது காரின் கண்ணாடியில் பார்த்தான்....அவனை போலிஸ் கார் ஓன்று பின்தொடர்வது தெரிந்தது. அவனும் எதுவும் அறியாதது போல் காரை ஓட்டினான். அந்த போலிஸ் காரும் அவனை தொடர்ந்து கொண்டே சென்றது.

அரை மணி நேரத்திற்கு பிறகு போலிஸ் கார் அவனை ஓவர் டேக் செய்து அவனுடைய காருக்கு முன் நின்றது. அவனும் காரை நிறுத்தினான். காரிலிருந்து போலீஸ்காரர் இறங்கி வந்து அவனிடம் " குட்மானிங் சார் " என்றார். இவன்  போலிஸ்காரரிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்? " என்றான்.

போலீஸ்காரர் " சார் நான் உங்கள் காரை அரை மணி நேரம் பாலோ செய்தேன். நீங்கள் கார் ஓட்டும்போது பின்னாடி வரும் காருக்கு வழி விடுவதும், சாலை விதிகளை மதித்து மிதமான வேகத்தில் சென்றதும், சிக்னல்களில் நின்று சென்ற விதம் அனைத்தும் எங்களுக்கு பிடித்து இருந்தது." அதற்க்கு தமிழன் "அதற்க்கு என்ன இப்போ? " போலீஸ்காரர் " சார் இன்னைக்கு "சாலை பாதுகாப்பு தினம்" அதற்காக உங்களுக்கு நான் பரிசாக 5000டாலர் பணம் தர இருக்கிறேன் என்றார் போலீஸ்காரர்.

உடனே அவன் "இந்த பணத்தை  வச்சி எப்படியாவது லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்றான்..  "

போலிஸ்: "??"

 அவனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த அவனுடைய மனைவி " சார் தப்பா நினைக்காதிங்க ...அவரு குடிச்சிட்டு உளறுறாரு " என்றாள்.

காருக்கு பின்னாடி இருந்த காது செவிடான அவனுடைய வயதான அம்மா சொன்னார் "இதற்க்கு தான் நான் அப்பவே சொன்னேன் .. திருட்டு காரை எடுத்துட்டு வராதேனு .. இப்ப பாரு போலிஸ்காரங்க புடிச்சிட்டாங்க"

போலிஸ் " ? ? ? ?"


3 comments:

  1. நகைச்சுவை என்றாலும், தமிழர்களாகிய நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளலாமா

    ReplyDelete
  2. நகைச்சுவை என்றாலும், தமிழர்களாகிய நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளலாமா?

    ReplyDelete
  3. நண்பா.. இது சும்மா ஒரு நகைசுவை தான்.
    நம்முடைய தமிழன் எவ்வளவு புத்திசாலி என்று உலகத்திற்கே தெரியும்.

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir