சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினர் பெரும்பாலோர் இன்டர்நெட் (Voip Call) மூலம் தன்னுடைய நாட்டில் வசிக்கும் உறவினர்களுக்கு தொலைபேசியில் பேசுவது வழக்கம்.
குறைந்த செலவில் பேச இந்த voip சாப்ட்வர் ஐ தன்னுடைய மொபைல் அல்லது கணிணி இல் தர இறக்கம் செய்து கொண்டு ரீசார்ஜ் செய்து கொண்டு பல மணி நேரம் பல நபர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பெரும்பாலும் இந்தியா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்களதேஸ், நேபாள், பிலிப்பைன்ஸ் சேர்ந்தவர்கள் நாட்டினர் தான் அதிகம் பேசுவர்.
இவ்வாறு பேசுவது சட்டத்திற்கு புறம்பானது என்று சிலருக்கே தெரியும்.
இதனால் சவூதியில் உள்ள தொலைதொடர்பு துறை "STC", "MOBILY","ZAIN" போன்றவைகளுக்கு பல மில்லியன் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்கும் வகையில் தற்பொழுது சவூதி அரசாங்க தொலைதொடர்பு துறையை முடுக்கி உள்ளது.
இதன் முதல் கட்டமாக ஜித்தா, அஸிசியா வில் இது போன்ற இன்டர்நெட் கார்டுகளை விற்ற 5 இந்தியர்கள் சுலைமான், நவ்சாத், ஜலில், சகீர்,மற்றும் அசரப் ஆகியோரை கைது செய்துள்ளது.
மேலும் வேட்டைகள் தொடரும்....
No comments:
Post a Comment