Thursday, 27 June 2013

வெளிநாடு செல்ல "POLICE CLEARANCE CERTIFICATE" பெறுவது எப்படி?


PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே passport வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.

குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

Rs 300  மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் 1000 அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf


3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)

விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.

http://passport.gov.in/cpv/FeeStructure.htm

காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.

PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir