Saturday, 22 June 2013

குற்றங்களை தடுக்க புதிய பாஸ்போர்ட் அறிமுகம்


 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாஸ்போர்ட்டில் புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் அடங்கிய புதிய பாஸ்போர்ட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகின்றன என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ்போர்ட்டின் இடதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிறந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் இருக்கும். அதே போல், வலதுபக்க உள் அட்டையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்புகளும் அடங்கி இருக்கும். ஆனால் தற்போதைய புதிய நடைமுறைப்படி இடது உள்பக்கத்தில் இருக்கும் அனைத்து குறிப்புகளும், புகைப்படமும், 2வது தாளில் லேமினேட் செய்யப்படும். அதேபோல், வலதுபக்க உள் அட்டையில் காணப்படும் அனைத்து குறிப்புகளும் 35வது பக்கத்தில் லேமினேட் செய்யப்படும்.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பழைய முறையில் பாஸ்போர்ட்டை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் இடது உள் பக்கத்தில் உள்ள புகைப்படம் அழுக்காகிறது. மேலும், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் பற்றிய குறிப்புகள், தெளிவாக தெரியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

பாஸ்போர்ட்டின் உள் அட்டையை பிரித்து, புதிய புகைப்படத்தை ஒட்டும் அபாயமும் உள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது என்றார்.

2 comments:

  1. நண்பரை என்னுடைய பாஸ்போர்டில் ECR என்கிர Emigration Check இல்லாமல் உள்ளது . இதனால் எதாவது சிக்கல் உள்ளதா மற்றும் Emigration Check Register என்றால் என்ன?

    ReplyDelete
  2. நண்பர் தமீம் அன்சாரி அவர்களே..

    ECR: Emigration Check Required. அதாவது பாஸ்போர்ட் ல் ECR என stamp அடித்திருந்தால் சில நாடுகளுக்கு செல்லும்போது Emigration clearance பெற வேண்டி வரும்.

    ECNR: Emigration Check Not Required என பாஸ்போர்ட் ல் இருந்தால், வெளிநாடு செல்லும்போது அந்த Emigration clearance பெற தேவையில்லை.
    என்னென்ன நாடுகளுக்கு தேவை மற்றும் இதனை பற்றி முழு தகவல் அறிய கீழேயுள்ள தளத்திற்கு செல்லவும்
    http://www.poechennai.in/emigration_clearance_system.php

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir