Wednesday 21 August 2013

குளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம்


சென்னையை சேர்ந்த ஒருவர் பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார் அப்போது அந்த பாட்டில் தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது.

கடைகாரர் பாட்டிலுக்கு காசு கேட்க்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமருக்க இருவருக்கும் இடையில் கலட்டாவாகி போலிஸ் வரை போய் பிரச்சனை கோர்ட் க்கு போனது..

கடைகாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் " ஹோட்டலில் காசு கொடுத்து தான் சாப்பிடுகிறோம் அதற்க்காக அங்கு உணவு பரிமாறப்படும் தட்டு,கிண்ணம்,தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டு வந்து விட  முடியுமா...அதுபோல தான் குளிர்பானம் வாங்கினால் பாட்டிலை கொண்டு போக முடியாது " என வாதிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா... அவரும் அசராமல் திருப்பி அடித்தார் "ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு ஐட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருள்) அல்ல.

ஆனால் குளிர்பானம் என்பது பேக்டு ஐட்டம். இது போன்று பேக்டு ஐட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும்  சேர்த்து தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும் போது பாட்டிலுக்கும் சேர்த்து தான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் சாப்பிலுருந்து ஒயின் சாப் வரை பாட்டிலில் வாங்கபடும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன" என வாதிட்டார்.

ஏறத்தாழ  ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில் " குளிர்பானம் வாங்குபவருக்கே பாட்டில் சொந்தம்" என தீர்ப்பு வந்தது.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir