பொதுவாக பிரிட்டனுக்கு செல்ல விசா கொஞ்சம் காலமாக தாமதமாகிதான் வந்தது. ஏன் என்றால் பிரிட்டனில் இப்போதும் கை ரேகை எனப்படும் பயோமெட்ரிக்ஸ் பிராசஸ் மற்றும் வி எஃப் எஸ் மூலம் என்பதால்தான் மிக தாமதம் ஆகி வந்தது.. இதனால் சில அப்ளிகேஷன்கள் 15 நாள் முதல் 60 நாள் வரை டிலே ஆயிற்று.. இதனை கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் – சூப்பர் பிரயாரிட்டி விசா என்னும் 7 மணி நேரத்தில் விசா கிடைக்கும்படி செய்திருக்கின்றனர்.
இது உலகத்தில் முதன் முதலாக இந்தியர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். அது போக உலகின் எந்த ஒரு எம்பஸியிலும் இதை பெற்று கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் காலை 9:30 மணிக்குள் ஆன்லைன் மூலம் அப்ளிகேஷன் ஃபில் செய்து சப்மிட் செய்தால் மாலை 5 – 6 மணிக்குள் தகவல் வரும்- உங்கள் விசா ரெடி வந்து பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டிகொள்ளுங்கள் என்று.
இதற்கு – கடந்த 2 ஆண்டுகள் யூகே / அமெரிக்கா / ஆஸ்திரேலியா / நியூசிலேன்ட் / செங்கன் நாடுகள் அல்லது கனடா போயிருந்தால் கண்டிப்பாக விசா உறுதி. அது போக இதற்க்கு 600 பவுண்டுகள் அதிகம் செலவாகும் என எதிர்பார்க்க படுகிறது.
No comments:
Post a Comment