நீங்கள் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கிறீர்கள், தன்னுடைய வங்கி கிளைக்கு நேரடியாக செல்ல முடியவில்லைய...? நேரம் இல்லையா...? கவலையை விடுங்க,
எனது நண்பர் அமானுல்லா அவருக்காக இந்த பதிவு. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து "வெளிநாட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலம் மின்கட்டணம், எல் ஐ சி (ம) தொலைப்பேசிக் கட்டணம் போன்றவைகளை கட்ட விரும்புகிறேன், அதற்க்கு வங்கியை தொடர்பு கொண்டபோது அவர்கள் எங்களது வங்கியின் இணையத்தளத்திற்கு சென்று பதிவு (REGISTER) செய்து அதனை பிரிண்டு எடுத்து அனுப்பிவைக்க சொன்னார்கள்" என்றார்.
சரி இப்பொழுது ஆன்லைன் மூலம் ஐ ஒ பி வங்கியில் எவ்வாறு Register செய்யலாம் என பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இணையதளம் செல்லவும்
https://www.iobnet.co.in/ibanking/indregist.do?I=I
பின்னர் நீங்களே புதியதாக Login ID மற்றும் Password கொடுக்கவும். கொடுக்கும்போது ஏதாவது நம்பர்களையும் சேர்த்து கொடுக்க வேண்டும். பின்னர் மற்ற விபரங்களை கொடுத்த பின்னர் இறுதியாக Submit கொடுக்கவும்.இப்பொழுது பிரிண்ட் என வரும் அதனை பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு பின்னர் தங்களது வீட்டுக்கு அனுப்பி அதனை வங்கியில் சமர்பித்தால் அவர்கள் விரைவில் உங்களுக்கு Login ID (ம) Password விபரத்தை அனுப்பி வைப்பர். இப்பொழுது நீங்கள் அதை பயன்படுத்தும் போது உங்களது தொலைபேசிக்கு தகவல் வரும் (Confirm) என சில நம்பர்கள் வரும் அதனையும் பயன்படுத்தும்போது இணையவங்கி பக்கம் ஓபன் ஆகும். இப்பொழுது நீங்கள் விரும்பிய எதையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
No comments:
Post a Comment