Monday 19 August 2013

வாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி சேவை அமெரிக்கா நம்பருடன்


24 மணி நேரம் பேசனும், வருஷம் பூரா பேசனும்னு ஆர்யா ஒரு படத்தில சொல்வாரு, அதுக்கு சந்தானம் அப்ப நேராதான் பேசனும்னு சொல்றது இப்போ பொய் ஆகி போச்சு. இன்னைக்கு ஒரு சூப்பர் ஆப்பை பற்றி கூறப்போகிறேன். இது ஆப்பிள் மற்றும் ஆன்ட்ட்ராயிட் ஃபோன் வச்சிருக்கவங்களுக்கு வரப்பிரசாதம். லைன் 2 என்னும் ஆப்ஸை இறக்குமதி செய்யுங்க. அதில் ஒரு டெலிஃபோன் நம்பர் தருவாங்க அமெரிக்கா நம்பர். இதுக்கு தேவை போஸ்ட்கோடு என்னும் அமெரிக்க பின்கோடு மற்றும் மின்னஞ்சல் முகவரி. போஸ்ட்கோடு எப்படி கிடைக்கும்னு கேக்குரவங்களுக்கு ஒரு க்ளூ கூகுள் பன்னுங்க ஏதாவது ஒரு அமெரிக்க கம்பேனி அல்லது அட்ர்ஸோட பின்கோடை போட்டா அந்த ஏரியால இருந்து மூனு நம்பர் கிடைக்கும் அதுல ஒன்னை செலக்ட் செய்தா ஒரு பைசா இல்லாம வாழ்க்கை முழுவது இலவச டெலிஃபோன் மற்றூம் இதை இந்தியாவுல அல்லது உலகத்துல எந்த மூலையில் உள்ள ஆட்களுக்கு இலவசமா - வைஃபை அல்லது 3ஜி அல்லது 2ஜி இன்டர் நெட் இருந்தா போது பேசலாம் ஐ எஸ் டி தேவையில்லை. வைபர், ஸ்கைப் இதெல்லாம் இருக்கே இது எதுக்குனு கேக்குறவங்களுக்கு இதில் மட்டும் தான் டெலிஃபோன் நம்பர் உங்களுக்குனு தனியா தராங்க,அதனால் உங்க ஒரிஜினல் நம்பர் தர விருப்பம் இல்லாத நேரத்தில இந்த நம்பரை கொடுக்கலாம். அது போக ஒரே ஃபோன் இரண்டு நம்பர்.

இதுல முக்கிய விஷயம் இதை டவுன்லோட் பண்ணீனவங்க கிட்ட டெலிஃபோன் நம்பரை தெரிஞ்சி கொன்டு இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அது போக நீங்க வெளியே இருந்து எந்த பப்ளிக் பூத்ல இருந்தும் நம்பர் தெரிஞ்சா ஃபோன் பன்னலாம். அது போக அமெரிக்கா கனடா நாடுகளுக்கு டோல்ஃப்ரி நம்பரை ஃப்ரீயா பேசி உங்க வியாபார நட்பை வளர்த்து கொள்ளலாம். இந்த நம்பர்ல இன்னொரு ஆஃபர் இருக்கு அதாவது 9.99 டாலர் மாசம் (ரூபாய் 550) கட்டினா அமெரிக்கா, கனடா நாட்டின் எந்த ஒரு நம்பருக்கும் இந்த ஆப்ஸ் இல்லாதவங்களுக்கு இலவசமா பேசலாம், எஸ் எம் எஸ் , வாய்ஸ் மெயில், கால் ஃபார்வர்டிங்கும் இலவசம். சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஸ்டம்.

முக்கிய விஷயம் செல்ஃபோன் இல்லாதவங்க கூட ஐ பேட் அல்லது டேப்ளட் வச்சிருக்கவங்க கூட தொலைப்பேசியா உபயோகிக்கலாம்

"மேலே இடது பக்கக்த்து படத்தில் உள்ளது எனது லைன் 2 தொலைப்பேசி நம்பர்"

இதை ஆப்பிள் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -

இதை ஆன்ட்ராயிட் சப்ஸ்கிரைபர் இங்கு டவுன்லோட் செய்யவும் -

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir