Friday, 16 August 2013

காபி கோப்பை


ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.

ஆனால் உங்களது இப்போதைய தேவை காபி கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காபியைத்தான்.

நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் (வாழ்கையின்) உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir