தற்போது புனித மக்காவில் கட்டிட விரிவாக்க வேலை நடை பெறுவதால் இந்த வருட புனித ஹஜ்ஜில் ஈடுபடுபவர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும். இதனால் சவூதி அரசாங்கம் இந்த வருடம் மற்ற நாடுகளிலுருந்து வரும் ஹஜ்ஜ் பயணிகளை 20 % குறைத்து உள்ளது.
எனவே சவூதியில் வசிக்கும் நபர்கள் (ஹஜ்ஜ் பேப்பர்) அனுமதியில்லாமல் ஹஜ்ஜ் செய்ய புறப்படுபவர்களை சவூதி போலிஸ் அவர்களை பிடித்து ஒரு வருடம் சிறை தண்டனையும் பின்னர் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது.
இக்காமா முடிவடைந்த நிலையிலும், ஹுருஜ் அடித்து தாய் நாடு செல்ல இருப்பவர்களும் இந்த வருடம் ஹஜ்ஜ் செய்ய முற்பட்டால் அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற்றவும், 10 ஆண்டு காலம் அவர்கள் சவூதி வர முடியாத நிலையும் ஏற்படும்.
புனித மக்கா நகரில் வாகனங்களில் போதை போன்ற பொருட்களை கொண்டு சென்றால், அந்த வாகன உரிமையாளரை பிடித்து சிறையில் அடைக்கவும், அந்த வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே ஹஜ்ஜ் செய்ய முற்படுபவர்கள் ஹஜ்ஜ் பேப்பர் பெற்றுக்கொண்டு ஹஜ்ஜ் செய்ய ஈடுபடவும்.
No comments:
Post a Comment