Saturday, 14 September 2013

வளைகுடா நாடுகளில் அதிக வருடங்கள் வாழ்பவரா... எச்சரிக்கை!!


வளைகுடா நாடுகளில் வாழ்பவர்கள் பலர் தாங்கள்அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓவர் டைம் வேலையும் பார்த்து பணம் மட்டுமே குறிக்கோள் என இருப்பார்கள். ஆனால் தங்களது உடல் மற்றும் மனதை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பார்கள். சரியான, சத்தான உணவு உண்ணாமை, உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றாலும், மேலும் வளைகுடா நாடுகளில் தட்பவெப்ப நிலைபடி அங்கு காற்றின் ஈரப்பதம் குறைவு, பிராண வாயும் குறைவு இதனால் அதிகமானவர்களுக்கு  மூச்சு திணறல், ஹார்ட் அட்டாக் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. சாப்பிடும் உணவுகளில் அதிக பதபடுத்தபட்ட கொழுப்பு உள்ளது இதனால் ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால், சுகர் என்று ஏதாவது வர வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகமானோர் தண்ணீரை விட கோககோலா  மற்றும் பெப்ஸி அதிகமாக குடிப்பர் இதனால் சுகர் எளிதாக வந்து விடும் எலும்பும் பலம் இழக்கும்.

எனவே சத்தான உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுங்கள், அதிகமான அளவில் பழங்கள் சாப்பிடுங்கள், தயிர், மோர் அதிகம் உணவில் சேர்க்கலாம். காலை உணவை தவிர்க்காமல் ஓட்ஸ், கார்ன்பிளாக்ஸ் போன்றவைகளையும் வாங்கி சாப்பிடலாம். தினமும் ஒரு மணி நேரம் குறைந்தது அல்லது  அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்ய முயலுங்கள், இதனால் உடம்பில் ரத்த ஓட்டம் வேகமாக ஏற்பட்டு மூளை மற்றும் மனசை வலுவடையும்.  வேலைநேரத்தில் பதட்டத்துடன், மன இறுக்கத்துடன் வேலை செய்யாமல் ரிலாக்ஸாக வேலை செய்யுங்கள்.

இவ்வாரெல்லாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே உணர முடியும் உங்களுடைய உடம்பு மற்றும் மனசை பற்றி.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir