Tuesday, 17 September 2013

பாம்புக்கு பால் ஊற்றுவதும், முட்டை வைப்பதும் ஏன் தெரியுமா..?



இதில் ஒரு உண்மை என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது, இது விஞ்ஞான பூர்வமாக ஒத்துகொள்ளபட்ட ஒரு உண்மை.

அப்படினா.. ஏன் அதற்க்கு பாலும், முட்டையும் வைகிறார்கள்?

அதிகமானோருக்கு இதற்க்குவிளக்கம் தெரியாது, இருந்தாலும் இதனை பின்பற்றுவர்.

சரி விசயத்திற்கு வருவோம்.. ஆதிக்காலத்தில் பாம்புகள் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. ஏனென்றால் பெரும்பாலும் அந்த காலத்தில் மரங்கள், செடிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகளும் அதிக அளவில் இருந்து மனிதனுக்கு தொந்தரவு செய்து வந்தது.. இருந்தாலும் ஆதி கால மனிதர்கள் பாம்புகளை கொல்ல நினைக்காமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் விளைவு தான் முட்டையும், பாலும்.

என்ன புரியவில்லையா...? அதாவது..
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்ளுவது கொஞ்சம் வித்தியாசம். பெண் பாம்பு தன்னுடைய உடலிலிருந்து ஒருவித வாசனை திரவத்தை (ப்ரோமொன்ஸ் ) வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆன் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பின்னர் அது ...அது......வேண்டாம் ...சென்ஸார்

ஆகையால் பாலை அதன் மேல் ஊற்றுவதால் பெண் பாம்பின் மேலிருந்து வெளிவரும் அந்த வாசனை கட்டுப்படுத்தப்படுகிறது.  அப்போ முட்டை? முட்டையை பாம்பு கொத்தி உடைத்துவிடும் அதனால் முட்டையிலிருந்து வரும் வாசனையும் அதனை கட்டுப்படுத்தபடுகிறது..

இனிமே... பாம்பு,  பாலும், முட்டையும் சாப்பிடும் என சொல்வீர்கள்...?


No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir