Monday, 2 September 2013

வளைகுடா நாடுகளில் ஏதாவது குற்றப்பின்னணியில் ஈடுபட்டு Exit முடித்து சென்றவர்கள் மீண்டும் சவூதி வந்தால் திரும்ப கைது செய்யப்படுவார்கள்


தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனத்திற்கு!

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த சில மாதம் முன்பு இந்த தகவலை தூதரக மீட்டிங்கில் அதிகாரிகள் அறிவுருத்தியதை கேட்டுள்ளேன்.

தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான குற்றப்பிண்ணனியில் உள்ளவர்கள் ரியாத் வந்ததில் சிலர் சிறையில் இருக்கிறார்கள். உதவி கேட்டு என்னிடம் அந்த சகோதரர்கள் தொலைபேசியில் பேசி உள்ளார்கள். (உறுதி செய்யப்பட்டதகவல்கள் இவை)

நேற்றைய தினம் ரியாத் வந்த ஏர்லங்கா விமானத்தில் 6 பேர் இந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கைது செய்யப்பட்டவரின் உறவினர் எனக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைக்கு உதவி கோரி உள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நீலப்படம் (ஆபாசப்படம்) பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்.

குற்றத்தின் தன்மை, எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆகவே சவூதி அரேபியா வரும் சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி Hussain Ghani-Riyadh.

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir