ஒரு சிகரெட் கம்பெனி தனது புதிய கிளையை திறப்பதை முன்னிட்டு அந்த கம்பெனியின் மேலாளர் ஒரு புது வகையான விளம்பரம் ஒன்றை செய்தார்.
அதாவது தங்களுடைய கம்பெனியின் சிகரெட்டை யார் வாங்கி பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மூன்றுவிதமான பயன்கள் கிடைக்கும் என உறுதி அளித்தார்
அதாவது எங்களது கம்பெனி சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றும்,
இரண்டாவது அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது என்றும்,
மூன்றாவது அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்றும் கூறினார்...
இதனை கேட்ட மக்கள் அதிக அளவில் அக்கம்பெனி சிகரெட்டை வாங்கி குடித்தனர்... கம்பெனி மிகப்பெரிய லாபத்தை அடைந்தது.
எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்..? அதில் ஓருவன் அக்கம்பெனிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தான்..அக்கம்பெனி மேலாளர் எங்களை ஏமாற்றி விட்டார் எனவும் அவரையும், அந்த கம்பெனியையும் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினான்.
அதனை விசாரித்த நீதிபதி, அக்கம்பெனி மேலாளரிடம் விசராணை செய்தார்.
மேலாளர் அதற்க்கு அளித்த விளக்கத்தை பார்த்து நீதிபதி திகைப்படைந்து விட்டார்.
அவர் கூறியதாவது...
"கணம் நீதிபதி அவர்களே... நான் பொய்சொல்லவில்லை, உண்மையை தான் கூறினேன்"
முதலில் நான் சொன்னது.. சிகரெட்டை யார் வாங்கி குடிக்கிறார்களோ அவர்களுக்கு முதுமையே வராது என்றேன்... உண்மை தான், ஏனெனில் சிகரட்டை குடிப்பவர்கள் அற்ப காலத்திலேயே உயிரை இழந்து விடுவார்கள் பின்னர் எப்படி முதுமை அவர்களை வந்து அடையும்?"
இரண்டாவது "அவர்களுக்கு பெண் பிள்ளைகளே பிறக்காது"என்றேன். இதுவும் சரி தான். எப்படி என்றால் அதிக அளவில் புகைபிடிப்பவர்களுக்கு ஆண்மை தன்மை நாளடைவில் குறைந்து விடும், அவர்களுக்கு மொத்தத்தில் பிள்ளைகளே பிறப்பது கஷ்டம் இதில் ஆண் என்ன? பெண் என்ன? " எனவே தான் அவ்வாறு சொன்னேன் என்றார்.
மூன்றாவதாக "அவர்களுடைய வீட்டிற்கு திருடன் வரவே மாட்டான்" என சொன்னேன். இதுவும் உண்மை தான்
புகைபிடிப்பவர்கள் அதிக அளவில் இருமி கொண்டே இருப்பார்கள். இரவிலும் சரி , இதனால் அந்த வீட்டிற்கு வரும் திருடன் அந்த சத்தத்தை கேட்டு "வீட்டில் ஆள் தூங்காமல் இருக்கிறார்கள்" என திரும்பி சென்று விடுவான். என்றார்..
நீதிபதி:!!!!
No comments:
Post a Comment