Sunday, 15 September 2013

பூனை குறுக்கே போனால்.......


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச்செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்களத்திற்கு சென்றிருப்பார்கள் அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள் எனவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்க்காக அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்து பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையை பார்த்தால் குடியுருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டு விடகூடாது என்பதற்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விசயங்களை  காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைப்பிடிக்கிறோம்.

பல விசயங்கள் மூட நம்பிக்கையாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாக போககூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

"இனிமே பூனை குறுக்கே போனா என்ன அர்த்தம்..?"

"அது தூத்துகுடி பக்கம், கன்னியாகுமரி பக்கம் நடந்து போக, போகுதுன்னு அர்த்தம்."

ஆவ்வ்வ் ......

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir