Friday, 2 May 2014

Vacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி?



நீங்கள் சவூதியில் எந்த ஒரு கம்பனியில் வேலை செய்தாலும் Vacation மற்றும் End of service என்பது கண்டிப்பாக உண்டு.

Vacation Money:
கம்பனியில் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் தன்னுடைய பணிக்கால இடையில் vacation (Leave ) செல்ல விரும்புபவர்கள் இதனை பெற தகுதியுடையவர். அதாவது "ஒரு வருடத்திற்கு 21 நாள் சம்பளம்" வேக்கசன் மணியாக கிடைக்கும். இதனை அவர் வெக்கேசன் லீவில் செல்லும்போது கிடைக்கும். 5 வருடத்திற்க்கு மேலாக பணி புரிந்து வந்தால் அவருக்கு வெக்கேசன் பணம் வருடத்திற்க்கு 30 நாள் சம்பளமாக கணக்கிடப்படும்.
ஊதாரணமாக
ஒருவரது சம்பளம்= 2000/-
வேலை பார்த்த வருடம்: 1 வருடம்.
அப்படியானால் அவருக்கு கிடைக்கும் வெக்கேசன் மணி
2000/30 x 21 = 1,400/- கிடைக்கும்.
ஆகையால் ஒரு வருடத்திற்கு SR 1,400/- கிடைக்கும்.
2 வருடம் என்றால் 2000/30 x 21x 2yrs = SR 2,800/- கிடைக்கும்.
இந்த வெக்கேசன் மணி என்பது ஒவ்வொரு தடைவையும் வெக்கேசன் செல்லும் போது கிடைக்கும்.

End Of Service Money:
தாம் வேலை பார்க்கும் கம்பனியின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப விரும்புபவர்கள்  இதனை பெற தகுதி பெற்றவராவார்.
(அதாவது தாம் வேலை பார்க்கும் கம்பனியிலிருந்து Exit அல்லது Transfer பெற்று செல்ல விரும்புபவர்கள் இதனை பெற முடியும்)
இது வருடத்திற்கு 15 நாள்கள் சம்பளமாக ஒதுக்கப்படும்.

பொதுவாக இதனை இரு வகையாகயாக பிரிக்கலாம்:
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்.

இதில் முதல் பிரிவு
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
கீழே உள்ள அட்டவனையை பார்த்தது தெரிந்து கொள்ளவும்.
Cases
Years
Entitlement
ESB Award
Case 1
< 2 Years
No
No
Case 2
2 - 5 Years
1/3
Half Salary
Case 3
5 - 10 Years
2/3
Full Salary
Case 4
> 10 Years
Full
Full Salary






Case 1: 
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் அவருக்கு "எந்த ஒரு சர்வீஸ் பணமும் கிடைக்காது"         
Case 2: 
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திலிருந்து 5 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு " மூன்றில் ஒரு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்திருந்தால் 
சம்பளம் 2000/30 x 15 x 3yrs x 1/3= SR 1000/- கிடைக்கும்.
Case 3: 
பணியாளர் தன்னுடைய வேலையை 5 வருடத்திலிருந்து 10 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு " மூன்றில் இரண்டு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
             சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
                                                    ------------
                                                       11,000
                               =11000 x 2/3= 7,333/- கிடைக்கும். 

Case 4: 
பணியாளர் தன்னுடைய வேலையை 10 வருடத்திற்கு அப்புறம் ராஜினாமா செய்திருந்தால்  அவருக்கு முழு சர்வீஸ் பணம் கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 12 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
             சம்பளம் 2000 x 7yrs = SR 14000/-
                                                    ------------
                                                         19,000 கிடைக்கும். 

இரண்டாம் பிரிவு :
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்:


Years
Entitlement
ESB Award
Case 5
< 5 Years
Full
Half Salary
Case 6
> 5 Years
Full
One Salary

 Case 5: 
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்குள் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 15 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக  கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/- கிடைக்கும்.

Case 6: 
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்கு பின் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 30 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக  கிடைக்கும்.

உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
முதல் 5 வருடம் --சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/- 
அடுத்த 3 வருடம் --           சம்பளம் 2000 x 3yrs = SR 6000/- 
                                                                                          -------------
                                                                                             9,000/-   கிடைக்கும்.
                                                                                         =======


குறிப்பு:
வேக்கேசன் மற்றும் சர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது " சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.
இதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.


மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்

12 comments:

  1. Sir, as per Saudi labourlaw. Labourcontract 2year. Or. 3year inform me please my gmailid ,nizam.portonovo@gmail.com

    ReplyDelete
  2. Minimum 2 yrs.
    There is no fixed year of contract. The contract dealing between owner and labor. They can make 2 yrs or more. But every two yrs automatically renewed their contract.

    Article (50):
    A work contract is a contract concluded between an employer and a worker,
    whereby the latter undertakes to work under the management or
    supervision of the former for a wage.

    Article (37):
    The work contract for non-Saudis shall be written and of a specified period.
    If the contract does not specify the duration, the duration of the work
    permit shall be deemed as the duration of the contract.

    ReplyDelete
  3. வணக்கம்.நான் சவுதியில் கடந்த 5 வருடங்களாக ஒரு கம்பெனியில் டெலிபோன் டெக்னீசியனாக.பணிபுரிந்து வருகிறேன்.இதில் முதல் 4 வருடம் எனது கபிலின் அண்ணனின் பெயரில் டிரைவர் விசாவில் வந்து பணிபுரிந்தேன். இப்பொழுது என் கபீலின் பெயரில் டெகனீசியனாக மாற்றப்பட்டு பணிபுரிகிறேன் இப்பொழுது என் கபீலிடம் என்னுடைய சர்வீஸ் மணியை கேட்டதற்க்கு அவன் தர முடியாது என்று.கூறுகிறான். நான் எப்படி எனது பணத்தை அவனிடமிருந்து பெறுவது.ஆலோசனை.கூறுங்கள்

    ReplyDelete
  4. சர்வீஸ் மணி என்பது நீங்கள் பணி முடித்து நாட்டுக்கு செல்லும் போது தான் கிடைக்கும். உங்கள் கபில் மற்றும் அவரது அண்ணன் இருப்பது ஒரே கம்பெனி தானே? வேறு வேறு கம்பெனி என்றால்.. அவரது அண்ணனிடம் 4 வருடம் பணி புரிந்ததற்க்கான சர்வீஸ் மணியை கேட்பது உங்களுடைய உரிமை.
    …இருவரும் ஒரே கம்பெனி என்றால் பணி இறுதியில் தான் கிடைக்கும்.
    அவ்வாறு அவர்கள் தர மறுத்தால் நீங்கள் Labor Office ல் complaint செய்யலாம். தொலைபேசி எண்ணுக்கு கீழே உள்ள லின்க் ஐ சொடக்கவும்.
    …http://qsaudi.com/list-of-labor-office-in-saudi-arabia-with-contact-details/

    ReplyDelete
  5. தங்கள் தகவலுக்கு நன்றி.கம்பெனி என் னுடைய கபில் பெயரில் செயல்படுகிறது.அவனது அண்ணனுக்கு சம்பந்தம் இல்லை.கபிலின் அண்ணன் பெயரிலே என்னை இந்த கம்பெனிக்கு அழைத்து வந்தான்.

    ReplyDelete
  6. ஓ அப்படியா.. நல்லது. நீங்கள் தற்போது வேக்கேசன் செல்ல நினைத்தால் உங்களுடைய கபிலிடம் வேக்கேசன் மணி பெற முடியும். சர்வீஸ் மணி என்பது இறுதியில் தான் கிடைக்கும்.

    ReplyDelete
  7. இது.வரை நான் 2 முறை வேக்கேசன் சென்றுள்ளேன்.எந்த பணமும் கிடைக்க வில்லை.முதல் வேக்கேசன் 3 1/2 வருடம் கழித்து.இரண்டாவது வேக்கேசன் அடுத்த 8 மாதத்தில் சென்றேன். இதில் ஒரு முறை மட்டுமே டிக்கட் பைசா கிடைத்துள்ளது.நீங்கள் கூறிய முறைகள் முன்பு எனக்கு தெரியாது.

    ReplyDelete
  8. நான் இப்பொழுது அவனிடம் எக்ஸிட் கேட்டுறிக்கேன்.அதுவும் கிடைக்குமான்னு தெரியாது.

    ReplyDelete
  9. வெக்கேசன் மணி மற்றும் சர்விஸ் மணி கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று சவூதி தொழிலார் சட்டம் சொல்லுகிறது எனவே அதனை பெறுவது நமது கடமை. அவ்வாறு அவர்கள் தரமறுத்தால் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம். கட்டாயமாக கிடைக்கும்.
    அதே போல் எக்ஸிட் என்பதையும் அவர்களால் தடுக்க முடியாது. முதலில் நீங்கள் உங்கள் கம்பனிக்கு எக்ஸிட் தர சொல்லி கடிதம் கொடுத்து 30 நாட்கள் ஆகியும் அவர்கள் தர வில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். பெரும்பாலான பணியாளர்கள் நீதிமன்றத்தை அணுக யோசிக்கின்றனர். நீதிமன்றம் தொழிலாளர் நலனை பாதுகாக்குமே தவிர அவர்களுக்கு ஆதராவாக நீதிமன்றம் செயல்படாது என்பதை உறுதியாக நம்பலாம்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி.நீங்கள் கூறியது போல் செய்கிறேன்.ஆனால் லேபர் ஆபீஸ் சென்றால் நமக்கு ஏதும் பிரச்சனை வருமா.கபில் நான்.இந்த கம்பெனியில் பணிபுரியவே இல்லை.நான் அவன் அண்ணனின் டிரைவராக தான் இருந்தேன் என்று கூறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  11. எங்கு வேலை பார்த்தாலும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர மறுப்பது குற்றமாகும். ஒரு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகிய உடன் முதலாளிக்கு பயம் ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் முதாலாளி தொழிலாளியை ஒன்றும் செய்ய இயலாது. இதில் நீதிமன்றம் தலையீடு இருப்பதால் அனைத்தும் மிக எளிதாக, விரைவாக முடிந்து விடும்.

    நண்பரே என்னுடைய அடுத்த பதிவின் தலைப்பு " தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? எங்கெங்கு எவ்வாறு முறையிடலாம்?"
    நாம் நேரில் சென்று தான் முறையிட வேண்டும் என்பதில்லை. ஆன்லைன் மூலமும் முறையிடலாம். இதன் மூலம் நிறைய தொழிலாளர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

    ReplyDelete
  12. நன்றி அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக.காத்திருக்கிறேன்.

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir