உலக அளவில் தீவிரவாதம் தலை தூக்கி உள்ளதால், அதனை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்ச்சிகள் செய்து வருகின்றன.
இதற்க்கு பெரும்பாலும் தொலைதொடர்பே முக்கியம். அதிலும் அடுத்தவர் மொபைல் எண்ணை வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது .
மொபைல் எண் மூலம் எந்த தவறு நடந்தாலும் காவல் துறை அந்த போன் நம்பர் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவரையே கைது செய்வர்.
எனவே, வேறு ஒருவருடைய சிம் கார்டு உங்களுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு அதனை தவறாக பயன் படுத்தினால், அது உங்களுக்கே பெரும் ஆபத்தாக முடியும். இதனை தவிர்க்க உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும் பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது கட்டாயம்.
சவூதி அரேபியாவில் CITC (Communication and Information Technology Center) என்ற நிறுவனம், தவறாக ஈடுபடும் நபர்களை கண்காணித்து வருகின்றது.
எனவே நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும் பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது.
கீழே உள்ள எண்களுக்கு SMS செய்வதன் மூலம், உங்களுடைய இக்காமாவில் யாருடைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறியலாம். இது முற்றிலும் இலவசம்.
அதில் உங்களுடைய மொபைல் எண் இல்லாமல் வேறு எண் இருந்தால் உடனே அருகில் உள்ள தொலை தொடர்பு அலுவலத்திற்கு உங்கள் இக்காமா காப்பியையும் கொண்டு சென்று அந்த எண்ணை நீக்கி விட்டு உங்கள் தொலைபேசி எண்ணை பதியவும்.
1) STC வாடிக்கையாளர்கள் 9988 என்று டைப் செய்து 902 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்
2) MOBILY வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 616166 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்
3) ZAIN வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 700123 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்
No comments:
Post a Comment