நீங்கள் சவூதியில் எந்த ஒரு கம்பனியில் வேலை செய்தாலும் Vacation மற்றும் End of service என்பது கண்டிப்பாக உண்டு.
Vacation Money:
கம்பனியில் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் தன்னுடைய பணிக்கால இடையில் vacation (Leave ) செல்ல விரும்புபவர்கள் இதனை பெற தகுதியுடையவர். அதாவது
"ஒரு வருடத்திற்கு 21 நாள் சம்பளம்" வேக்கசன் மணியாக கிடைக்கும். இதனை அவர் வெக்கேசன் லீவில் செல்லும்போது கிடைக்கும். 5 வருடத்திற்க்கு மேலாக பணி புரிந்து வந்தால் அவருக்கு வெக்கேசன் பணம் வருடத்திற்க்கு 30 நாள் சம்பளமாக கணக்கிடப்படும்.
ஊதாரணமாக
ஒருவரது சம்பளம்= 2000/-
வேலை பார்த்த வருடம்: 1 வருடம்.
அப்படியானால் அவருக்கு கிடைக்கும் வெக்கேசன் மணி
2000/30 x 21 =
1,400/- கிடைக்கும்.
ஆகையால் ஒரு வருடத்திற்கு SR 1,400/- கிடைக்கும்.
2 வருடம் என்றால் 2000/30 x 21x 2yrs = SR 2,800/- கிடைக்கும்.
இந்த வெக்கேசன் மணி என்பது ஒவ்வொரு தடைவையும் வெக்கேசன் செல்லும் போது கிடைக்கும்.
End Of Service Money:
தாம் வேலை பார்க்கும் கம்பனியின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப விரும்புபவர்கள் இதனை பெற தகுதி பெற்றவராவார்.
(அதாவது தாம் வேலை பார்க்கும் கம்பனியிலிருந்து Exit அல்லது Transfer பெற்று செல்ல விரும்புபவர்கள் இதனை பெற முடியும்)
இது வருடத்திற்கு 15 நாள்கள் சம்பளமாக ஒதுக்கப்படும்.
பொதுவாக இதனை இரு வகையாகயாக பிரிக்கலாம்:
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்.
இதில் முதல் பிரிவு
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
கீழே உள்ள அட்டவனையை பார்த்தது தெரிந்து கொள்ளவும்.
Cases
|
Years
|
Entitlement
|
ESB Award
|
Case 1
|
< 2 Years
|
No
|
No
|
Case 2
|
2 - 5 Years
|
1/3
|
Half Salary
|
Case 3
|
5 - 10 Years
|
2/3
|
Full Salary
|
Case 4
|
> 10 Years
|
Full
|
Full Salary
|
Case 1:
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் அவருக்கு "எந்த ஒரு சர்வீஸ் பணமும் கிடைக்காது"
Case 2:
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திலிருந்து 5 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு " மூன்றில் ஒரு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 3yrs x 1/3= SR 1000/- கிடைக்கும்.
Case 3:
பணியாளர் தன்னுடைய வேலையை 5 வருடத்திலிருந்து 10 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு "
மூன்றில் இரண்டு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
------------
11,000
=11000 x 2/3=
7,333/- கிடைக்கும்.
Case 4:
பணியாளர் தன்னுடைய வேலையை 10 வருடத்திற்கு அப்புறம் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு முழு சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 12 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
சம்பளம் 2000 x 7yrs = SR 14000/-
------------
19,000 கிடைக்கும்.
இரண்டாம் பிரிவு :
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்:
|
Years
|
Entitlement
|
ESB Award
|
Case 5
|
< 5 Years
|
Full
|
Half Salary
|
Case 6
|
> 5 Years
|
Full
|
One Salary
|
Case 5:
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்குள் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 15 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/-
கிடைக்கும்.
Case 6:
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்கு பின் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 30 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
முதல் 5 வருடம் --சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/-
அடுத்த 3 வருடம் -- சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
-------------
9,000/- கிடைக்கும்.
=======
குறிப்பு:
வேக்கேசன் மற்றும் சர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது " சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.
இதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்