Wednesday, 24 September 2014

Nitaqat System: உங்களது கம்பனியின் நிலை (எந்த வண்ணத்தில் உள்ளது என்பதை) அறிய

Nitaqat System முறையில்  நம்முடைய கம்பனியின் நிலையை (என்ன கலர்) எவ்வாறு ஆன்லைனில் பரிசோதிப்பது என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவருக்கு அந்த இணைய முகவரியை கொடுத்தேன் அதற்க்கு அவர் அது முழுவதும் அரபியில் உள்ளது, எவ்வாறு பார்ப்பது? என்றார்.அவருக்காக இந்த பதிவு.
 
முதலில் கீழே உள்ள இணைய முகவரி செல்லவும்

இணைய முகவரி செல்ல இங்கே சொடக்கவும்

கீழேயுள்ள படத்தை பார்த்து தேவையான தகவல்களை கொடுக்கவும். உங்களது இக்காமா எண்ணை கொடுத்து, சொந்த நாட்டின் பெயரை கொடுக்கவும்.





எப்போது உங்களது கம்பனி இப்பொழுது என்ன வண்ணத்தில் உள்ளது என்பதை எளிதாக அறியலாம்.






Nitaqat System பற்றிய சிறு விளக்கம்:
Nitaqat System என்பது Naturalization Law ஆகும். அதாவது உள்நாட்டு வேலை வாய்ப்பில் சவூதி நாட்டவருக்கும்  பங்களிப்பை வழங்குதல் அதாவது 10% ஒதுக்குவதாகும்.

இந்த Nitaqat System தொழிலாளர் சந்தையில் 41 வகையான தொழில்களை (ரியல் எஸ்டேட், கட்டுமானம், ஹோட்டல் etc...) கட்டுப்படுத்துகிறது. இவ்வகையான தொழில்களை அளவின் அடிப்படையில் அதாவது மிகப்பெரிய அளவு, பெரிய அளவு, நடுத்தர அளவு, சிறிய அளவு மற்றும் மிகச்சிறிய அளவு என 5 அளவுகளில் சுருக்கி 205 பிரிவுகளாக பிரிக்கின்றனர். 41 x 5 = 205.

இவ்வகையான தொழில்களில் 10% வேலை வாய்ப்பை சவுதியினருக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.



இவ்வாறு சவூதி நபர்களை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படையில் கம்பனியின் நிலையை பல வண்ணங்களாக பிரிக்கின்றனர். அதாவது  ஊதா கலர், பச்சை கலர், மஞ்சள் மற்றும் சிகப்பு கலர். ஊதாகலர் கம்பனியானது மிகவும் நல்ல நிலையில் இருக்கும் கம்பனி ஆகும், சிகப்பு கலர் கம்பனி நிலைமை ரொம்ப மோசமானதாக உள்ளதாகும்.





No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir