Tuesday, 27 May 2014
Saturday, 24 May 2014
சவூதி நாட்டினருக்கேன்று ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளின் பட்டியல் (List of Profession reserved for Saudis)
சவூதியில் உள்ள நிறுவனங்களில் கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய கூடிய வகையில் சவூதி அரசாங்கம் வரையறுத்துள்ளது.
இப்பதவிகளில் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும், மற்ற நாட்டினர் இப்பதவிக்களுக்கு வர இயலாது எனவே இப்பொழுது நீங்கள் வகிக்கும் பதவி கீழே உள்ள பட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்களுடைய பதவி கீழே உள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தால் உடனே உங்களுடைய இக்காமா வில் குறிப்பிட்டுருக்கும் பதவியின் பெயரை மாற்றுவது நல்லது. இல்லையன்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படலாம்.
கீழ்க்கண்ட பணியிடங்கள் சவூதி நாட்டினர் மட்டுமே பணி புரிய முடியும்:
(List of Professions Reserved for Saudis)
- Executive HR Manager
- HR Manager
- Labor Affairs Manager
- Staff Relations Manager
- Staff Relations Specialist or Individual Affairs Clerk
- Recruitment Clerk or Employment Clerk
- Staff Affairs Clerk or Personal Affairs Clerk
- Duty Clerk or Attendance Control Clerk
- Receptionist
- Hotel Receptionist
- Health Receptionist
- Complaint Clerk or Claim Clerk
- Cashier
- Security Guard
- Representative or Broker
- Key Specialist
- Custom Broker or Custom Clearance Employee
- Female Sales Specialist for Ladies Shop.
Thursday, 22 May 2014
கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கு விண்ணப்பம் செய்து உள்ளீர்களா? ஆன் லைன்ல் பரிசோதித்து கொள்ளவும்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வானையம் ஜூன் 16 ம் தேதிக்கு 2,342 பதவிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய தேர்வு நடத்த உள்ளது. மேலும் விபரம் அறிய இங்கே http://bakrudeenali.blogspot.com/2014/04/2014.html சொடக்கவும்.
கிட்டதட்ட 10 லட்சம் வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன.
முறையாக விண்ணபித்து, சரியான விண்ணப்ப மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தியவர்க்ளுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீங்கள் இத்தேர்விற்க்கு விண்ணப்பித்து இருந்தால் உடனே கீழ்க்கண்ட இணையத் தளத்திற்க்குச் சென்று உங்கள் பதிவு எண்ணைக் கொடுத்து உள்ளே நுழைந்து உங்களது தகவல்கள் சரியாக உள்ளதா என பரிசோதித்து கொள்ளவும்.
இணையதள முகவரி
http://www.tnpsc.gov.in/Appstatusget-VAO2K14.html
நீங்கள் சரியான முறையில் விண்ணப்பம் செய்து அனனத்து கட்டணமும் செலுத்திய பின்னரும் உங்களுடைய பெயர் இந்த லிஸ்டில் இல்லையா..? உடனே நீங்கள் செய்ய வேண்டியது contacttnpsc@gmail.com என்ற மின் அஞசலுக்கு விண்ணப்பதாரர் பெயர்,முகவரி, பதிவு எண், பணம் செலுத்திய ரசிது ஆகியவற்றின் நகலை இணைத்து நாளை (23.05.2014) க்குள்அனுப்ப வேண்டும்.
Saturday, 17 May 2014
சவூதியில் உங்களுடைய இக்காமா எண்ணில் வேறு ஒருவரது மொபைல் எண் பதியப்பட்டுஉள்ளதா? உஷார்!!
உலக அளவில் தீவிரவாதம் தலை தூக்கி உள்ளதால், அதனை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்ச்சிகள் செய்து வருகின்றன.
இதற்க்கு பெரும்பாலும் தொலைதொடர்பே முக்கியம். அதிலும் அடுத்தவர் மொபைல் எண்ணை வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது .
மொபைல் எண் மூலம் எந்த தவறு நடந்தாலும் காவல் துறை அந்த போன் நம்பர் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவரையே கைது செய்வர்.
எனவே, வேறு ஒருவருடைய சிம் கார்டு உங்களுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு அதனை தவறாக பயன் படுத்தினால், அது உங்களுக்கே பெரும் ஆபத்தாக முடியும். இதனை தவிர்க்க உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும் பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது கட்டாயம்.
சவூதி அரேபியாவில் CITC (Communication and Information Technology Center) என்ற நிறுவனம், தவறாக ஈடுபடும் நபர்களை கண்காணித்து வருகின்றது.
எனவே நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடைய இக்காமாவில் வேறு தொலைபேசி எண் ஏதும் பதிவு செய்யபட்டுள்ளதா என சோதிப்பது.
கீழே உள்ள எண்களுக்கு SMS செய்வதன் மூலம், உங்களுடைய இக்காமாவில் யாருடைய மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என அறியலாம். இது முற்றிலும் இலவசம்.
அதில் உங்களுடைய மொபைல் எண் இல்லாமல் வேறு எண் இருந்தால் உடனே அருகில் உள்ள தொலை தொடர்பு அலுவலத்திற்கு உங்கள் இக்காமா காப்பியையும் கொண்டு சென்று அந்த எண்ணை நீக்கி விட்டு உங்கள் தொலைபேசி எண்ணை பதியவும்.
1) STC வாடிக்கையாளர்கள் 9988 என்று டைப் செய்து 902 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்
2) MOBILY வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 616166 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்
3) ZAIN வாடிக்கையாளர்கள் ஏதும் டைப் செய்யாமல் 700123 என்ற எண்ணுக்கு Blank SMS அனுப்பவும்
Friday, 16 May 2014
Sunday, 4 May 2014
Friday, 2 May 2014
Vacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி?
நீங்கள் சவூதியில் எந்த ஒரு கம்பனியில் வேலை செய்தாலும் Vacation மற்றும் End of service என்பது கண்டிப்பாக உண்டு.
Vacation Money:
கம்பனியில் வேலை பார்க்கும் எந்த ஒரு நபரும் தன்னுடைய பணிக்கால இடையில் vacation (Leave ) செல்ல விரும்புபவர்கள் இதனை பெற தகுதியுடையவர். அதாவது "ஒரு வருடத்திற்கு 21 நாள் சம்பளம்" வேக்கசன் மணியாக கிடைக்கும். இதனை அவர் வெக்கேசன் லீவில் செல்லும்போது கிடைக்கும். 5 வருடத்திற்க்கு மேலாக பணி புரிந்து வந்தால் அவருக்கு வெக்கேசன் பணம் வருடத்திற்க்கு 30 நாள் சம்பளமாக கணக்கிடப்படும்.
ஊதாரணமாக
ஒருவரது சம்பளம்= 2000/-
வேலை பார்த்த வருடம்: 1 வருடம்.
அப்படியானால் அவருக்கு கிடைக்கும் வெக்கேசன் மணி
2000/30 x 21 = 1,400/- கிடைக்கும்.
ஆகையால் ஒரு வருடத்திற்கு SR 1,400/- கிடைக்கும்.
2 வருடம் என்றால் 2000/30 x 21x 2yrs = SR 2,800/- கிடைக்கும்.
இந்த வெக்கேசன் மணி என்பது ஒவ்வொரு தடைவையும் வெக்கேசன் செல்லும் போது கிடைக்கும்.
End Of Service Money:
தாம் வேலை பார்க்கும் கம்பனியின் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப விரும்புபவர்கள் இதனை பெற தகுதி பெற்றவராவார்.
(அதாவது தாம் வேலை பார்க்கும் கம்பனியிலிருந்து Exit அல்லது Transfer பெற்று செல்ல விரும்புபவர்கள் இதனை பெற முடியும்)
இது வருடத்திற்கு 15 நாள்கள் சம்பளமாக ஒதுக்கப்படும்.
பொதுவாக இதனை இரு வகையாகயாக பிரிக்கலாம்:
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்.
இதில் முதல் பிரிவு
1. பணியாளர் தானே முன் வந்து தன்னுடைய வேலையை ராஜினமா செய்தல்.
கீழே உள்ள அட்டவனையை பார்த்தது தெரிந்து கொள்ளவும்.
Cases
|
Years
|
Entitlement
|
ESB Award
|
Case 1
|
< 2 Years
|
No
|
No
|
Case 2
|
2 - 5 Years
|
1/3
|
Half Salary
|
Case 3
|
5 - 10 Years
|
2/3
|
Full Salary
|
Case 4
|
> 10 Years
|
Full
|
Full Salary
|
Case 1:
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் அவருக்கு "எந்த ஒரு சர்வீஸ் பணமும் கிடைக்காது"
Case 2:
பணியாளர் தன்னுடைய வேலையை 2 வருடத்திலிருந்து 5 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு " மூன்றில் ஒரு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 3yrs x 1/3= SR 1000/- கிடைக்கும்.
Case 3: பணியாளர் தன்னுடைய வேலையை 5 வருடத்திலிருந்து 10 வருடத்திற்குள் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு " மூன்றில் இரண்டு பங்கு" சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
------------
11,000
=11000 x 2/3= 7,333/- கிடைக்கும்.
Case 4:
பணியாளர் தன்னுடைய வேலையை 10 வருடத்திற்கு அப்புறம் ராஜினாமா செய்திருந்தால் அவருக்கு முழு சர்வீஸ் பணம் கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 12 வருடம் வேலை செய்திருந்தால்
சம்பளம் 2000/30 x 15 x 5yrs = SR 5000/-
சம்பளம் 2000 x 7yrs = SR 14000/-
------------
19,000 கிடைக்கும்.
இரண்டாம் பிரிவு :
2. முதலாளி தன்னுடைய பணியாளரை வேலையை விட்டு நீக்குதல்:
Years
|
Entitlement
|
ESB Award
|
|
Case 5
|
< 5 Years
|
Full
|
Half Salary
|
Case 6
|
> 5 Years
|
Full
|
One Salary
|
Case 5:
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்குள் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 15 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 3 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/- கிடைக்கும்.
Case 6:
Case 6:
முதலாளி தன்னுடைய பணியாளரை 5 வருடத்திற்கு பின் வேலையை விட்டு நீக்கினால் " வருடத்திற்கு 30 நாள் சம்பளம்" சர்வீஸ் பணமாக கிடைக்கும்.
உதாரணமாக ஒருவர் 8 வருடம் வேலை செய்து நீக்கி இருந்தால்..
முதல் 5 வருடம் --சம்பளம் 2000/30 x 15 x 3yrs = SR 3000/-
அடுத்த 3 வருடம் -- சம்பளம் 2000 x 3yrs = SR 6000/-
-------------
9,000/- கிடைக்கும்.
=======
குறிப்பு:
வேக்கேசன் மற்றும் சர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது " சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.
இதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்
குறிப்பு:
வேக்கேசன் மற்றும் சர்விஸ் மணி கணக்கிடும் போது சம்பளம் என்பது " சம்பளம் + வீட்டு வாடகை படி + போக்குவரத்து படி" ஆகிய வற்றையும் கூட்டி கிடைப்பதே ஆகும்.
இதில் தொலைபேசி படி, உணவு படி அடங்காது.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கேட்க்கவும்
Subscribe to:
Posts (Atom)