நீங்கள் சவூதி அரேபியாவில் வேலை செய்பவரா.. உங்கள் நண்பருடைய இக்காமா திருடு போய்விட்டதா... கவலை வேண்டாம்.
சவூதியில் நிறைய ஆப்ரிக்க பணியாளர்கள் இக்காமா இல்லாமல் வேலை செய்வர். அவர்களில் சிலர் பிறரது இக்காமாவை, அவர்களுக்குத் தெரியாமல் திருடிக்கொண்டு, பேரம் பேசி சில ஆயிரம் சவூதி ரியால்கள் சம்பாதிப்பார்கள், இதற்கென்று ஒரு குருப் இருக்கும். இக்காமா திருடு போய் விட்டால் இக்காமாவின் உரிமையாளர் போலீசிடம் போக விரும்பாமல் அந்த கும்பலிடம் பேரம் பேசி தன்னுடைய இக்காமாவை திரும்ப பெற்றுக்கொள்வர்.
ஜித்தாவில் உள்ள "சோமாலி சூக்" எனும் இடத்தில் தான் தொலைந்து போன மற்றும் திருடிய இக்காமா போன்றவைகள் கை மாறி, பின்னர் பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டு திரும்ப இக்காமா உரிமையாளரிடம் வழங்கப்படும். இவர்கள் அவ்வப்போது தங்களுடைய இடங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
கடந்த சில வருடங்களில் "சோமாலி சூக்" இடத்தில் இவ்வாறு ஈடுபட்ட பல நூறு ஆப்ரிக்கர்களை கைது செய்து தண்டனை வழங்கியது சவூதி போலிஸ்.
சவூதியின் சட்டம் முதல் தடவை இக்காமா தொலைந்து போனால் 1000 ரியாலும், 2 வது தடவை 2000 ரியாலும், 3 வது தடவை 3000 ரியாலும் அபராதம் கட்ட வேண்டும்.
தற்பொழுது யாருடைய இக்காமாவும் திருடு போனால் கவலை வேண்டாம், அபராதமும் கட்ட வேண்டாம், நீங்கள் செய்ய வேண்டியது, தன்னுடைய இக்காமா எவ்வாறு திருடு போனது, எந்த இடத்தில் திருடு போனது என்பதை தன்னுடைய உரிமையாளரிடமிருந்து (கபில்) எழுத்துபூர்வமாக எழுதி அதனை அருகில் உள்ள போலிஸ் நிலையத்தில் 24 மணி நேரத்திற்குள் கொடுத்தால் எந்தவித அபராதமும் இல்லாமல் மாற்று இககாமாவை பெறலாம்.
உங்களுடைய கருத்துகளை கீழே உள்ள கமன்ட் பாக்ஸில் எழுதவும்.
No comments:
Post a Comment