இந்திய இன்ஜினியரின் கண்டுபிடிப்பு:
விண்வெளி வீரர்கள் பெரும்பாலும் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்ய வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டும், சில சமயங்களில் தாங்களிடமுள்ள பாக்கெட் வகையான மற்றும் டின் வகை உணவைகளையும், டின் வகையான குளிர் பானங்களையும் சாப்பிட்டு வந்தனர். விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி நீண்டக்கால ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு உணவு தேவையானது அதிகம். இந்நேரங்களில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விண்கலம் மூலம் அவர்களுக்கு தேவையான உணவுகள் அனுப்பி வைக்கப்படும். இதற்க்கு கூடுதல் செலவும், நேர விரையமும் ஏற்படும்.
எனவே விண்வெளியிலேயே உணவை தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம். இதற்க்காக நாசா விடுத்த டெண்டரை, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்திய மெக்கானிக்கல் எஞ்சினியர் "அஞ்சன்" என்பவர் நடத்தும் "சிஸ்டம்ஸ் & மெட்டிரியல் ரிசர்ச் கார்பரேசன்" என்ற நிறுவனம் ருபாய் 78 லட்சத்திற்கு டெண்டரை எடுத்தது.
விண்வெளியில் சுடசுட பீட்சா தயாரிக்கும் 3டிபிரிண்டரை அஞ்சான் உருவாக்கியுள்ளார். இங்க்ஜெட் கலர் பிரிண்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்கள் போல இந்த 3டி பிரிண்டரில் இருக்கும் காட்ரிட்ஜ்களில் மைதா மாவு, தக்காளி பவுடர், சமையல் எண்ணெய், புரோட்டினம் மைக்ரோ நியூரியான்ஸ், ஸ்டார்ச், மசாலா மற்றும் நறுமண பவுடர்கள் இருக்கும்.
பட்டனை கிளிக் செய்தால் போதும் 3டி பிரிண்டர் முதலில் மாவை தண்ணீரில் கலக்கி கீழே பொருத்தப்பட்டுள்ள சூடான தகட்டில் ஸ்பிரே செய்யும்.
அது வெந்து கொண்டிருக்கும்போது தக்காளி பவுடர்,எண்ணெய்,ஸ்டார்ச், புரோட்டின், மசாலா என ஒவ்வொரு பொருட்களையும் 3 d பிரிண்டர் தொடர்ச்சியாக ஸ்பெரே செய்யும் 7௦ வினாடிகளில் சூடான பீட்சா தயாராகிடும்.
இந்த பிரிண்டர் 3௦ ஆண்டுகளுக்கு உழைக்கும் திறன் கொண்டது. இனிவரும் காலங்களில் வின் வெளியில் தங்கி நீண்டகால ஆராய்ச்சி செய்யும் போது உணவு தேவையை இந்த பிரிண்டர் பூர்த்தி செய்யும்.
No comments:
Post a Comment