Sunday, 2 December 2018

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டம்:



இத்திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சையை எளிதாகவும் இலவசமாக பெருவதாகும் இதனை அனைத்து வகையான அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சில பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் பெறலாம்.

காப்பீடு அட்டை பெற தகுதி:
குடும்ப ஆண்டு வருமானம் 72000 த்திற்குள் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் யார் யார் எல்லாம் பயன் பெறலாம்:
குடும்ப அட்டையில் உள்ள கணவன் மனைவி பிள்ளைகள் மற்றும் தாய் தந்தை அடங்கும் அனைவரது பெயர்களும் குடும்ப அட்டையில் இருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. ஆண்டு வருமான சான்றிதழ்

மருத்துவ காப்பீட்டு அட்டை பெற :
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்றிதழ் பெற வேண்டும் அது ரூ 72000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பின்னர் குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட மையத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் அங்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்படும் பின்னர் குறிப்பிட்ட நாட்கள் கழித்து இம்மருத்துவ அட்டை கிடைக்கப்பெறும்.



அட்டையில் காணப்படும் விபரங்கள்
குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினரகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்
2 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்யபட்டு இருக்கும்.

எவ்வாறு சிகிச்சை பெறுவது:
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள காப்பீட்டு திட்ட அலுவலரை தொடர்பு கொண்டு நம்மிடம் உள்ள மருத்துவ அடையாள அட்டை,குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ்களை காண்பித்து மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

மருத்துவ சிகிச்சை பெற அதிக பட்ச தொகை:

இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் முதல் நான்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டணம் இன்றி  சிகிச்சை பெற முடியும். மருத்துவ மனைகள்    இக்கட்டணத்தை காப்பீடு நிறுவனகள் மூலம் பெற்றுக்கொள்ளும்.

இந்த அட்டையின் மூலம் 1027 மருத்துவ சிகிச்சை முறைகள்  மற்றும் 154 தொடர் சிகிச்சை வழிமுறைகள்   மேலும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளுக்கும்  வழி வகை செய்யப்பட்டுள்ளது  இதில் 8 உயர் சிகிச்சை முறைகள் உள்ளன.
 அவை இதயம் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை,சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, உட் செவி சுருள் பொருத்துதல்,
செவி திறன் மூளை தண்டு கருவி பொருத்துதல்
ஆகியஆகும்

38 வகையான சிகிச்சை பரிசோதனைகள்:
ECHO , USG , MRI , MRCP, CT , MAMMOGRAPHY , LFT , RFT , ANGIOCARDIOGRAM , THYROID PROFILE ETC .

 இந்த அட்டையின் கால அளவு குடும்பத்திற்கு ஆண்டு க்கு 1 லட்சம் வரைக்கும்  சிகிச்சை அளிக்கக்படுகிறது மேலும் மீதி உள்ள உறுதி செய்யபட்ட தொகையயை பொறுத்து பயன்படுத்தலாம் அதன் தொகை தீரும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இது குறித்து தகவல்கள் பெற அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை  அணுகலாம் அல்லது கீழ் உள்ள இனைய தளத்திற்க்கு செல்லவும்.
https://www.cmchistn.com/

கட்டணம் இன்றி தொலைபேசியில் தொடர்பு கொள்ள 1800 425 3993 என்ற எண்ணை பயன்படுத்தலாம். 

4 comments:

  1. Are you looking to activate amazon primevideo.com/mytv in your device without any hassles? You need a correct com primevideo mytv link account in order to setup your device.

    ReplyDelete
  2. tramadol without prescription Buy tramadol online directed by doctors, this medicine is used for moderate to severe pain.

    silver singles phone number silver singles login uses an algorithm that matches you with people based on your personality, location, age, and desired relationship outcomes.

    ReplyDelete
  3. thank you for sharing useful information

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir