Airtel, Idea & Vodafone போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாதா மாதம் குறைநதபட்ச ரீச்சார்ஜ் ரூ 35/- கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவிப்பு விடுத்துள்ளனர். நீங்கள் பேசினாலும் அல்லது பேசா விட்டாலும் அந்த தொகை 30 நாள் கழித்து முழுவதும் கழிக்கப்பட்டு விடும்.
இதனால் பலரும் ஒரு குழப்பத்தில் உள்ளனர். இதற்க்கு காரணம் பலரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்துவதால் தான். JIO நிறுவனம் வந்த பின்னர் அனைவரிடமும் ஜியெ சிம் இலவச கால் மற்றும் இணையதள பயன்பாட்டிற்க்காகவும், தங்களுடைய பழைய சிம்மை இன் கமிங்க் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பழைய சிம்மிற்க்கான ரீசார்ஜ் வெகுவாக குறைய ஆரம்பித்தது இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் இவ்வகையான மாற்றத்தை இந்த மூன்று நிறுவனங்களும் கொண்டு வந்தன.
இதற்க்கு என்னா தான் தீர்வு என யோசிக்கும் பொது...
1) நீங்கள் Airtel, Idea & Vodafone வாடிக்கையாளராக இருந்து அதனையே கால் களுக்காகவும் இணையத்திற்க்காகவும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வந்தால் இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.அதை தொடர்ந்து பயன் படுத்தி வரலாம்.
2) இண்கமிங்க் கால்களுக்காக மட்டுமே Airtel, Idea & Vodafone சிம் வைத்துள்ளேன் அனைவரிடமும் இந்த நம்பர் தான் கொடுத்துள்ளேன் மற்ற படி ஜியோ தான் இலவச கால் மற்றும் இணையத்தளத்திற்க்காவும் வைத்துள்ளேன் மேலும் பழைய நம்பரை தவிர்க்க முடியாது என்று எண்ணினாலும் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய பழைய நம்பரை BSNL அல்லது JIO நெட் வொர்க்கிற்கு மாற்றி விடுங்கள். இவ்விரண்டு நிறுவங்களும் லைப் டைம் வேலிடிடி கொடுப்பவை.இண்கமின்க்காக ரீசார்ஜ் எதுவும் செய்ய தேவையில்லை. இவ்விரண்டில் BSNL மிகவும் நல்லது ஏனொனில் அது அரசாங்க நிறுவனம், உங்க ஊரில் BSNL டவர் பிரச்சனை என்றால் JIO வுக்கு மாறி விடுங்கள்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி தான் ஏனென்றால் அவர்கள் அந்த நம்பரை இங்கமின் கால்,வங்கி கணக்கு, கெஸ் புக்கிங் மற்றும் ரெசன் கார்டுகளுக்கு மட்டுமெ பயன்படுத்துவார்கள் இனிமேல் அவர்கள் மாதாமாதம் ரீசர்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆகையால் அவர்களுது நம்பரை வேறு ஒரு நெட் வொர்க்கிற்க்கு மாற்றி விடுங்கள்.
நீங்கள் எளிதாக வேறு ஒரு நெட் ஒர்க்கிற்க்கு மாறலாம். நீங்கள் செய்ய வெண்டியது எந்த நெட் ஒர்க்கிற்க்கு மாற போகிறீங்களோ (Airtel, Idea & Vodafone) அந்த நிறுவன CUSTOMER CARE அலுவலகம் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
AIRTEL UNLIMITED
VODAFONE UNLIMITED
IDEA UNLIMITED