வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம்
"மகாத்மா காந்தி பிரவாசி சுரக்க்ஷா யோஜனா"
MGPSY (Mahatma Gandhi Paravasi Suraksha Yojana)
எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம் வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தால் (MOIA) வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான, தன்னார்வத்திட்டமாகும்.
இந்தியாவுக்குத் திரும்பி வரும்போதான குடியேற்றத்துக்கெனவும், அதோடு வயதான காலத்திற்கான சேமிப்புக்காகவும், வெளிநாடுகளில் பணி புரிகையில் அவ்வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமித்துக் கொள்ள இத்திட்டம் உதவி செய்யும். மேலும் MOIA ஆனது ஒரு ஆயுள் காப்புறுதித் திட்டத்தையும் அனைத்து MGPSY சந்தாதாரர்களுக்கும் வழங்கும்.
இத்திட்டத்தில் இணைத்து கொள்ள ஆர்வமுள்ள, தகுதியுள்ள பணியாளர்கள் தங்கள் விண்ணப் படிவங்களையும், அடையாள ஆதரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.
இத்திட்டத்தில் சேர தகுதிகள்:
1) ECR Passport மற்றும் ECR நாடொன்றில் செல்லுபடியாகும் ஒரு பணி அனுமதி அல்லது வேலை ஒப்பந்தம்.
2) வயது 18 முதல் 50 வரை.
3) சொந்தப்பெயரில் வங்கிக்கணக்கு.
பயன்கள்:
இத்திட்டத்தில் இணைகின்ற தகுதியுடைய வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் 3 முக்கியமான பயன்களைப் பெறுவார்கள்.
1) NPS -லைட் இடமிருந்து ஓய்வுதிய பயன்.
2) UTI AMC இடமிருந்து மறுகுடியேரும் (R&R) சேமிப்புகள்.
3) LIC இடமிருந்து இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம்.
சந்தா மற்றும் அரசு பங்களிப்பு விபரம்:
ஆண்டொன்றுக்கு ஆண்/பெண் சந்தாதாரர் ஒருவருக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை: ரூபாய் ரூ 5,000/-
ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 1,000 + 900
(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான MOIA பங்களிப்பு: ரூ 2,000 + 900)
ஆக மொத்தம், ஆண்டொன்றுக்கு ஆண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 1,9௦௦ =6,900 ஆகும்.
(ஆண்டொன்றுக்கு பெண் சந்தாதாரர் ஒருவருக்கான மொத்த சேமிப்புத் தொகை: ரூ 5,௦௦௦ + 2,9௦௦ = 7,900 ஆகும்.
MOIA இன் பங்களிப்பு 5 ஆண்டுகளுக்கு அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்த காலம் இதில் எது குறைவோ அந்த காலத்துக்கு வழங்கப்படும்.
முதிர்ச்சி தொகை வழங்கும் முறை:
இரண்டு முறையில் பணம் திரும்ப வழங்கப்படும்
1) On return முறை: இம்முறையில், வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்பிய பின்னர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
2) On Retirement முறை: இம்முறையில் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு பணம் திரும்ப அளிக்கப்பட்டு , மீதிப்பணம் ஓய்வூதிய அடிப்படையில் மாத மாதம் வழங்கப்படும்.
எனவே வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களே உடனே " The ministry Of Overseas Indian Affairs" தொடர்புகொண்டு இத்திட்டத்தில் சேர முயற்சி செய்யுங்கள். இது உங்களது பிற் காலத்திற்கு உதவும்.
துபாய் நண்பர்கள் இந்த திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல் பெற அல்லது இந்த திட்டத்தில் இணைய கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். (ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழேயுள் ள கமெண்ட் பாக்ஸ் ல் என்னிடம் கேட்கலாம்)
துபாய் முகவரி:
பாங்க ஆப்ப் பரோடா கிளை, இந்திய தொழிலாளர் வள மையம்
UAE அலுவலகம் 3 PM - 7PM (வேலை நாட்களில்)
இலவச தொலைபேசி அழைப்பு எண்: 1800 113 090 (இந்தியா) அல்லது 80046342 (UAE)
மின் அஞ்சல் முகவரி: inf.mgpsy@moia.nic.in அல்லது help@iwrc-uae.com