Thursday, 6 December 2018

தொலை தொடர்பு நிருவனங்களின் ரூ 35/- மினிமம் பேலன்ஸ் கட்டாயம்:


     Airtel, Idea & Vodafone போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள்    தங்களது சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாதா மாதம் குறைநதபட்ச ரீச்சார்ஜ் ரூ 35/- கண்டிப்பாக செய்ய வேண்டும் என அறிவிப்பு விடுத்துள்ளனர்.  நீங்கள் பேசினாலும் அல்லது பேசா விட்டாலும் அந்த தொகை 30 நாள் கழித்து முழுவதும் கழிக்கப்பட்டு விடும்.

    இதனால் பலரும் ஒரு குழப்பத்தில் உள்ளனர். இதற்க்கு காரணம் பலரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்துவதால் தான். JIO நிறுவனம் வந்த பின்னர் அனைவரிடமும் ஜியெ சிம் இலவச கால் மற்றும் இணையதள பயன்பாட்டிற்க்காகவும், தங்களுடைய பழைய சிம்மை இன் கமிங்க் கால்களுக்காக மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பழைய சிம்மிற்க்கான ரீசார்ஜ் வெகுவாக குறைய ஆரம்பித்தது இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் இவ்வகையான மாற்றத்தை இந்த மூன்று நிறுவனங்களும் கொண்டு வந்தன.

இதற்க்கு என்னா தான் தீர்வு என யோசிக்கும் பொது... 
1) நீங்கள் Airtel, Idea & Vodafone வாடிக்கையாளராக இருந்து அதனையே கால் களுக்காகவும் இணையத்திற்க்காகவும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வந்தால் இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை.அதை தொடர்ந்து பயன் படுத்தி வரலாம்.

2) இண்கமிங்க் கால்களுக்காக மட்டுமே Airtel, Idea & Vodafone சிம் வைத்துள்ளேன் அனைவரிடமும் இந்த நம்பர் தான் கொடுத்துள்ளேன் மற்ற படி ஜியோ தான் இலவச கால் மற்றும் இணையத்தளத்திற்க்காவும் வைத்துள்ளேன் மேலும் பழைய நம்பரை தவிர்க்க முடியாது  என்று எண்ணினாலும் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய பழைய நம்பரை BSNL அல்லது JIO நெட் வொர்க்கிற்கு மாற்றி விடுங்கள். இவ்விரண்டு நிறுவங்களும் லைப் டைம் வேலிடிடி கொடுப்பவை.இண்கமின்க்காக ரீசார்ஜ் எதுவும் செய்ய தேவையில்லை. இவ்விரண்டில் BSNL மிகவும் நல்லது ஏனொனில் அது அரசாங்க நிறுவனம், உங்க ஊரில் BSNL டவர் பிரச்சனை என்றால் JIO வுக்கு மாறி விடுங்கள். 

       இதில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய அப்பா அம்மா தாத்தா பாட்டி தான் ஏனென்றால் அவர்கள் அந்த நம்பரை இங்கமின் கால்,வங்கி கணக்கு, கெஸ் புக்கிங் மற்றும் ரெசன் கார்டுகளுக்கு மட்டுமெ பயன்படுத்துவார்கள் இனிமேல் அவர்கள் மாதாமாதம் ரீசர்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆகையால் அவர்களுது நம்பரை வேறு ஒரு நெட் வொர்க்கிற்க்கு மாற்றி விடுங்கள்.

      நீங்கள் எளிதாக வேறு ஒரு நெட் ஒர்க்கிற்க்கு மாறலாம். நீங்கள் செய்ய  வெண்டியது எந்த நெட் ஒர்க்கிற்க்கு மாற போகிறீங்களோ (Airtel, Idea & Vodafone) அந்த நிறுவன CUSTOMER CARE அலுவலகம் சென்று மாற்றிக்கொள்ளலாம்.

AIRTEL UNLIMITED

VODAFONE UNLIMITED


IDEA UNLIMITED

Sunday, 2 December 2018

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்டம்:



இத்திட்டத்தின் நோக்கம் தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சையை எளிதாகவும் இலவசமாக பெருவதாகும் இதனை அனைத்து வகையான அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சில பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் பெறலாம்.

காப்பீடு அட்டை பெற தகுதி:
குடும்ப ஆண்டு வருமானம் 72000 த்திற்குள் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் யார் யார் எல்லாம் பயன் பெறலாம்:
குடும்ப அட்டையில் உள்ள கணவன் மனைவி பிள்ளைகள் மற்றும் தாய் தந்தை அடங்கும் அனைவரது பெயர்களும் குடும்ப அட்டையில் இருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்:
1. குடும்ப அட்டை
2. ஆண்டு வருமான சான்றிதழ்

மருத்துவ காப்பீட்டு அட்டை பெற :
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்றிதழ் பெற வேண்டும் அது ரூ 72000 த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பின்னர் குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட மையத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் அங்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்படும் பின்னர் குறிப்பிட்ட நாட்கள் கழித்து இம்மருத்துவ அட்டை கிடைக்கப்பெறும்.



அட்டையில் காணப்படும் விபரங்கள்
குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினரகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்
2 வயதிற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்யபட்டு இருக்கும்.

எவ்வாறு சிகிச்சை பெறுவது:
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள காப்பீட்டு திட்ட அலுவலரை தொடர்பு கொண்டு நம்மிடம் உள்ள மருத்துவ அடையாள அட்டை,குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழ்களை காண்பித்து மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

மருத்துவ சிகிச்சை பெற அதிக பட்ச தொகை:

இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சம் முதல் நான்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இத்திட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டணம் இன்றி  சிகிச்சை பெற முடியும். மருத்துவ மனைகள்    இக்கட்டணத்தை காப்பீடு நிறுவனகள் மூலம் பெற்றுக்கொள்ளும்.

இந்த அட்டையின் மூலம் 1027 மருத்துவ சிகிச்சை முறைகள்  மற்றும் 154 தொடர் சிகிச்சை வழிமுறைகள்   மேலும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளுக்கும்  வழி வகை செய்யப்பட்டுள்ளது  இதில் 8 உயர் சிகிச்சை முறைகள் உள்ளன.
 அவை இதயம் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை,சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, உட் செவி சுருள் பொருத்துதல்,
செவி திறன் மூளை தண்டு கருவி பொருத்துதல்
ஆகியஆகும்

38 வகையான சிகிச்சை பரிசோதனைகள்:
ECHO , USG , MRI , MRCP, CT , MAMMOGRAPHY , LFT , RFT , ANGIOCARDIOGRAM , THYROID PROFILE ETC .

 இந்த அட்டையின் கால அளவு குடும்பத்திற்கு ஆண்டு க்கு 1 லட்சம் வரைக்கும்  சிகிச்சை அளிக்கக்படுகிறது மேலும் மீதி உள்ள உறுதி செய்யபட்ட தொகையயை பொறுத்து பயன்படுத்தலாம் அதன் தொகை தீரும் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இது குறித்து தகவல்கள் பெற அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செயல்படும் முதல் அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தை  அணுகலாம் அல்லது கீழ் உள்ள இனைய தளத்திற்க்கு செல்லவும்.
https://www.cmchistn.com/

கட்டணம் இன்றி தொலைபேசியில் தொடர்பு கொள்ள 1800 425 3993 என்ற எண்ணை பயன்படுத்தலாம். 

Tuesday, 16 February 2016

(சவூதி) விசா பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் அறிய (Mofa no.)

             நீங்கள் புதியதாக விசா கிடைத்து சவூதி செல்ல இருக்கிறிற்களா? உங்கள் விசா பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா? விசாவில் என்ன வேலை குறிப்பிட்டுள்ளது? யார் பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் விசா வழங்கப்பட்டது? முகவரி மற்றும் முதாலாளியின் பெயர் போன்றவை பற்றி அறிய வேண்டுமா? சவூதி அரசின் விசா  mofa இணையத்தளத்திற்க்குச் சென்று விசாவிற்க்கான விபரத்தை அறியலாம். இதற்க்கு முக்கியமாக mofa (Ministry of foreign Affairs) எண் அல்லது விண்ணப்ப எண் தேவை.


           கீழ் காணும் இனணய முகவரிக்குச் சென்று உங்களது விசா எண் மற்றும் ID எண் கொடுத்தால் போதும் உங்களது விசா பற்றிய முழு விபரமும் அறியலாம்.

                                       இணையம் செல்ல இங்கே சொடக்கவும் 




                உங்களது விசா விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு விசா விற்க்கான பணம் மற்றும் மெடிக்கல் பணம் கட்டிய பிறகு registered agency மூலம் இணையத்தில் இந்த mofa எண் பதிவேற்றம் செய்யப்படும். ஆகையால் மெடிக்கல் முடிந்த பிறகே இந்த mofa எண் கிடைக்கும். நீங்கள் அந்த விசா எண்ணையும் ஐ டி எண்ணையும் கொடுத்தப் பின்னர் கீழே உள்ள படி விசா பற்றிய விபரம் கிடைக்கும்.




மேலும் விபரம் அறிய:
  • சவூதி "Ministry of foreign Affairs" Call center telephone: 9200 3333 4 அழைக்கவும். 
  • Mofa office at Riyadh Telephone 00966 114055 000 or 406 7777.
  • Mofa office at Jeddah Telephone 00966  12 6690 900.
  • Mofa office at Dammam Telephne 00966 13 868 3310.

Monday, 30 November 2015

வீட்டில் சூரிய ஒளி மின்சார தயாரிப்புத் திட்டம் ஒரு பார்வை



ஒரு கிலோ வாட் பேட்டரி வசதியுடன் கூடிய மின் தகடு அமைக்க சுமார் 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். பேட்டரி வேண்டாமென்றால் ரூபாய் 110,000  மட்டுமே செலவாகும். 
ஒரு கிலோ வாட் மின் திட்டத்திற்கு  மத்திய அரசு 30,000 ரூபாயும், மாநில அரசு 20,000 ரூபாயும் மானியமாக வழங்கும். நமக்கு 60,000 ரூபாய் மட்டுமே செலவு  
ஒரு கிலோ வாட் சூரிய மின் தகடு பதிக்க 75 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது.

தேவையான பொருள் சூரிய மின்தகடு, இன்வெர்டர், கண்ட்ரோலர், பேட்டரி, பேட்டரி வேண்டாம் என்றால் நெட் மீட்டர் பொருத்தி மின் வாரியத்திற்கு விற்கலாம்.
தமிழகத்தில் 600 நிறுவனங்கள் இதற்க்கு தேவையான சாதனங்களை  விற்பனை செய்கின்றன 



பெரும்பாலான நிறுவங்கள் சீனா, அமெரிக்க, கனடா, ஜெர்மனி,தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்கின்றன 

சூரிய தகடுகளில் குண்டூசி நுனி அளவில் பல்லாயிரம் கணக்கிலான சோலார்  செல்கள் உள்ளன இந்த செல்கள் சூரிய ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கிறது அவ்வாறு ஈர்க்கும் போது சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கி மின்சாரம் உற்பத்தியாகிறது.  எனவே வெப்பத்தை விட சூரிய ஒளி முக்கியமானது இதன் மூலமே மின்சாரம் தயாரிக்கபடுகிறது .

ஒரு கிலோ வாட் மின்சக்தியில் 4 டியூப் லைட், 3 மின் விசிறி, 1 டிவி அல்லது ஒரு கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்க முடியும். 

சோலார் பேனல் அமைக்கும் முறையில் 5  ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்திச்செய்வது அல்லது வீட்டுக்கட்டிடங்களில் 1 மெகாவாட் முதல்  100 மெகாவாட்வரை உற்பத்திச்செய்வது என இரு வகை உண்டு. ஆனால்  முதல் கட்டமாக வீடுகளுக்கு ஒரு கிலோவாட்(1000வாட்)  என்ற முறையில் அமைப்பதற்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க 75 சதுர அடி மட்டுமே போதுமானது மேலும் ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கபடுவதில்லை. வீட்டின் மேல் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க 47000 முதல் 60000 ரூபாய் வரை செலவாகும் அதற்கு மேல் ஆகும் தொகை க்கு மத்திய அரசு 30% மானியமும் மாநில அரசு 20% மானியமும் வழங்கும்.  ஒரு கிலோவாட்டிற்கு மேல் சோலார் பேணல் அமைத்தால் கிலோவாட்டிற்கு ரூபாய் 20,000 என மானியம் கிடைக்கும்.
ஆண்டிற்கு 300 நாட்கள் வீதம் மின்சாரம் தயாரிக்க முடியும் (மீதி நாட்கள் குளிர் காலங்கள் ஆகும்) இதன் மூலம் 4.5 யூனிட் முதல் 5 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
ஒருவர் தன்னுடைய வீட்டில் சோலார் மேர் கூரை அமைக்க விருப்பப்பட்டால் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பம் செய்ய கீழே இருக்கும் லிலின்கை கிலிக் செய்யவும்

                                                          இங்கே சொடக்கவும்


அதில் கேட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனுப்பினால் அதனை பெற்று கொண்டதற்க்கான  ஒப்புகை சீட்டு ஆன்லைன் மூலம் நமக்கு கிடைக்கும். இந்த இனைய தளத்தில் சோலார் பேனல்கள் விற்பனை செய்யும் 17 கமபனிகளின்  பெயர்கள் இடம் பெற்றிருக்கும்  அதில் ஏதாவது ஒரு கம்பனியை தெரிவு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்க வேண்டும்,
விண்ணப்பத்தை 30 நாள் அவகாசம் எடுத்து நமக்கு அனுமதி வழங்கும்.

 ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்த பிறகு அந்த மாவட்ட த்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனதுக்கு தகவல் அனுப்புவார் அதன் பிறகு ஒரு மாதத்திற்குள்  மானியம் வந்து விடும் மத்திய அரசு மானியம் நேரடியாக கம்பனி மூலம் கழித்து கொள்ளப் படும்.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir