Tuesday, 11 November 2014

Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள்



 Whisper, Stayfree போன்ற நாப்கின்களை பெண்கள்  உபயோகிப்பதால்  ஏற்படும் தீமைகள்:

இன்றைய கால கட்டத்தில் அதிக பெண்கள் மாதவிடாய் காலங்களில் whisper, stayfree போன்ற  நாப்கின் களை உபயோகின்றனர். இதனால் சவுகரியமாகவும், பயன் படுத்துவதும் மிக எளிது மற்றும் பாதுகாப்பானது என்று எண்ணியே இதனை உபயோகின்றனர். எனினும் இந்த அல்ட்ரா நாப்கின்களில் ஒருவகையான கெமிக்கல் பயன் படுத்தி தயாரிக்கின்றனர். அந்த கெமிக்கல் பெண்களுக்கு வெளிப்படும் திரவத்தை ஜெல் நிலைக்கு மாற்றுகிறது. இதனால் பெண்களுக்கு சில வகையான கேடுகளை விளைவிக்கவும் செய்கிறது. அதாவது நாப்கினை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் உருவாக காரணமாகி விடுகிறது. அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தும் பெண்கள் 5 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

அதனை அதிக நேரம் பயன்படுத்துவதால் இரத்தம் பச்சை நிறத்திற்கு மாறுவதுடன் பாக்ட்ரியா தொழிற்பாடு அந்த ஜெல்லில் ஏற்பட்டு உடலுக்கு உள்ளே செல்கிறது.

எனவே அல்ட்ரா பேடுகளை பயன்படுத்தாமல் காட்டன் பேடுகளை பயன் படுத்தலாம். இதனை விட சிறந்தது தங்களிடமுள்ள காட்டன் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் உலறிய பின்னர் அதனை பயன்படுத்தலாம்.

ஏனெனில் நாம் வாங்கும் புதிய துணிமணிகளை கூட அப்படியே உபயோகிக்காமல் அதனை துவைத்து பின்னர் அணிய வேண்டும் இல்லை எனில் அந்த துணியிலுள்ள கெமிக்கல் கலவை நமக்கு தோல் சம்பந்தமான சில வியாதிகளை கொண்டு வரும். அதனை துவைக்கும் போது அதிலுள்ள இரசாயானங்கள் வெளியேறி விடும்.

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir