தாம் செய்யும் வேலையை மன நிறைவோடு மகிழ்ச்சியாக செய்தாலே போதும் யாருடைய தயவு இல்லாமல் தன்னுடைய இலக்கை அடைந்து விடலாம்.
பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தன்னுடைய மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க பல வழிகளை கையாளுவது உண்டு.
காக்கா பிடிப்பது, ஜால்ரா அடிப்பது, வேலையில் எப்போதும் பிசியாக இருப்பது போல் நடிப்பது.. இன்னும் சிலர் அடுத்தவர் வேலையையும் தானே செய்து காட்டி நல்ல பெயர் எடுக்க நினைப்பது.
அடுத்துவர் வேலையை பற்றி தெரிந்து கொள்வதில் தப்பில்லை வேலைக்கான நேர்முக தேர்வில் கூட தன்னுடைய வேலை தவிர எக்ஸ்ட்ரா எனக்கு இன்னன்ன வேலை தெரியும் என்று சொன்னால் சந்தோஷ படுவார்கள். ஆனால் வேலைக்கு சேர்ந்த பின்னர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல் அடுத்தவர் வேளையில் மூக்கை நுழைப்பது தவறு. அப்படி நுழைத்தால் என்ன ஆகும் என்பதை ஒரு சிறு கதை மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஒரு வியாபாரி தன்னுடைய பொருட்களை எடுத்து செல்ல ஒரு கழுதையையும், வீட்டை பாதுகாக்க ஒரு நாயையும் வளர்த்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் வியாபாரியின் வீட்டில் திருட அவன் வீட்டின் கதவருகே வந்து நின்று கதவை திறக்க முயற்சி செய்கிறான்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த நாய் குலைக்காமல் மௌனமாக இருந்தது.
இதனை கண்ட கழுதை " இவனுடைய வேலை குலைப்பது, ஆனால் சும்மா இருக்கானே..சரி நாம் சத்தம் போட்டு தன்னுடைய எஜமானை எழுப்பி நல்ல பெயர் எடுக்கலாம்" என நினைத்து கழுதை கத்தியது...
கழுதை கத்தியவுடன் திருடன் ஓடிவிட்டான். வீட்டின் எஜமான் கதவை திறந்துப் பார்த்தான் வெளியில் யாரும் இல்லை... நாயை பார்த்தான், நாய் தலையை கீழே தாழ்த்தி பார்த்தது, கழுதையை பார்த்தான், கழுதை பெருமையுடன் அவனை பார்த்தது. பின்னர் வீட்டின் உள் சென்று ஒரு பெரிய விறகு கட்டையை எடுத்து வந்து... நல்ல தூங்கிட்டு இருக்கும் போது கத்துவியா? கத்துவியா? என கழுதையை கட்டையால் அடி பிய்த்து விட்டான்.
இப்ப புரிகிறதா....